Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதலமைச்சரை விட இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பு நீண்டகாலமானது - தினேஷ் குணவர்த்தன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Dinesh_gunawardeana-310313-seithy-150.jp

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நீண்ட கால வரலாற்று ரீதியான தொடர்புகள் காரணமாகவே தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் இந்திய மத்திய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்திய மத்திய அர சாங்கத்துக்கும் இடையிலான இராஜதந்திர ரீதியிலான உறவுகளில் எள்ளளவேனும் பாதிப்புகள் ஏற்படவில்லை. இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக வரலாற்று ரீதியான தொடர்புகள் காணப்படுகின்றன. நாம் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே இராஜதந்திர ரீதியிலான தொடர்புகளைப் பேணி வருகின்றோம்.

  

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் நீண்டகாலமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1961ஆம் ஆண்டு தமிழகத்தைத் தனிநாடாகப் பிரிப்பதற்கு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இதனை அப்போதைய இந்தியப் பிரதமர் முறியடித்திருந்தார். இருந்தபோதிலும் அவ்வாறான முயற்சிகள் மீண்டும் தமிழகத்தில் நிழலாடிக்கொண்டிருக்கின்றன. அதேபோல, மத்திய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகளிலும் தமிழகத்திலுள்ள சில தரப்பினர் ஈடுபடுகின்றனர்.

 

மேலைத்தேய நாடுகளின் சூழ்சிகளினாலேயே இவ்வாறான நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றன.இதேவேளை, இலங்கையில் பிரிவினையை விரும்பியவர்களும் தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றனர். இந்த இரண்டு தரப்பினரும் இணைந்தே நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். எனினும், இவ்வாறான முயற்சிகள் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் எள்ளளவேனும் பாதிப்பு ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79399&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் நீண்டகாலமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1961ஆம் ஆண்டு தமிழகத்தைத் தனிநாடாகப் பிரிப்பதற்கு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இதனை அப்போதைய இந்தியப் பிரதமர் முறியடித்திருந்தார். இருந்தபோதிலும் அவ்வாறான முயற்சிகள் மீண்டும் தமிழகத்தில் நிழலாடிக்கொண்டிருக்கின்றன. அதேபோல, மத்திய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகளிலும் தமிழகத்திலுள்ள சில தரப்பினர் ஈடுபடுகின்றனர்.

 

இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழக முதல்வரை விட இலங்கையுடனான உறவு முக்கியமானது என கூறியிருப்பது. இந்திய இறையாண்மையை மீறுகின்ற ஒரு செயலாகும். இந்தியத் தரப்பில் இருந்து இந்தக் கூற்று வந்திருக்குமாயின் அது இந்தியாவில் இருந்து தமிழகத்துத் தமிழர்களைப் பிரித்துப்பார்க்கும் ஒரு கூற்றாகக் கொள்ளப்படும். இங்கு இலங்கையின் மூத்த அமைச்சர் ஒருவர் சொல்லியிருப்பதை இந்தியாவும் விரும்புவதாகவே தெரிகிறது.

 

தற்போதைய தமிழக மாணவர் எழுச்சி என்பது 1961 எழுந்த தமிழக தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒப்பானது என்றுகாட்டி மாணவர்களின் போராட்டத்தை இந்தியப் பிரிவினையாகாக இந்த இனவாத அமைச்சர் காட்டமுயன்றுள்ளார்.

 

"மத்திய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகளிலும் தமிழகத்திலுள்ள சில தரப்பினர் ஈடுபடுகின்றனர்" என்ற கூற்றின் மூலம் நேரடியாக கருணாநிதியின் திமுகவைத் தாக்கியிருக்கின்றார்.

   

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் நீண்டகாலமானவை

 

தமிழின அழிப்பில் இரண்டு கொலைகாரரக் கும்பலுக்கும் இடையிலிலுள்ள தொடர்பு மிக நீண்டவை என்பதை புத்தியுள்ள எல்லாரும் அறிந்து வைத்துள்ளனர்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.