Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது? : S.G.ராகவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது? : S.G.ராகவன்



 

manmohan-300x240.jpg

 

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான இந்தியாவின் வீடமைப்புத் திட்டம், வன்னியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை, இலங்கை இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.


 

இலங்கையில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான “இந்தியாவின்” போரைத்தான் தாம் நாடத்தியதாக இலங்கை அதிபர் ராஜபக்சே பகிரங்கமாக கூறியிருக்கிறார் இவை செய்திகள்தான்.


தற்போது வடகிழக்கில் நடப்பவை என்ன? இலங்கை அரசு மிகத் தீவிரமாக இன அழிப்பை நடாத்தி வருகின்றது, இவ்வின அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது என்பதை பார்ப்போம்


 

1. இலங்கை அரசு வடகிழக்கில் தமிழர் தாயகத்தில் அரச காணிகள் , தனியார் காணிகள் என்பவற்றை அபிவிருத்தி என்ற போர்வையில் பறிமுதல் செய்து இராணுவத்தினரையும் சிங்கள மக்களையும் குடிஏற்றுகின்றனர்


 

2. வலுக்கட்டயாமாக தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களில் இடம் பெயரச் செய்து, அவர்களின் காணிகளை கைப்பற்றுகின்றனர் .


 

3. இலங்கை அரசு செய்த, செய்து கொண்டிருக்கின்ற இனப் படுகொலை, இன ஒதுக்கல் கொள்கை காரணமாக நாட்டை விட்டு புலம் பெயர்ந்து சென்ற, சென்று கொண்டிருக்கின்ற தமிழர்களின் காணிகளை இலங்கை அரசு, மற்றும் சிங்களப் படைகள் அடாத்தாகவும் , இலங்கை அரசின் தமிழர் விரோத சட்டங்கள் மூலமாகவும் பறிமுதல் செய்கிறது.


 

4. தமிழர் காலம் காலமாக வழிபட்டு வந்த கோவில்கள் கலாச்சார வாழ்விடங்கள் திட்டமிட்ட வகையில் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப் படுகிறது.


 

5. வடக்கு கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து வெலிஓயா எனும் புதிய மாவட்டத்தை தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு திருகோணமலை போன்ற மாவட்டங்களை இணைத்து அங்குள்ள பெருவளவு தமிழர்களை விரட்டி அடித்தும் (முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் 1984 இல் முல்லைத்தீவு மணலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலையில் இப்பகுதிகளில் பூர்விகமாக வாழ்த்த தமிழ் மக்கள் பெருமவளவில் கொல்லப் பட தற்போது எஞ்சி இருக்கும் தமிழ் மக்களின் காணிகளையும் சிங்கள அரசு பறிமுதல் செய்கிறது. அங்கு சிங்கள குடியேற்றங்களை செய்து வருகிறது.


 

6. இப்பொழுது தீவிரமாக தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றம் நிகழந்துவரும் பிரதேசங்கள் மாவட்ட அடிப்படையில் தருகிறேன்.#


 

sri_Lanka_map.gif

 

யாழ்ப்பாண மாவட்டம் – மாதகல், தெள்ளிபலை, பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி, வளலாய் , மாவிட்டபுரம், கைதடி , ஆனையிறவு, வடமராச்சி கிழக்கு, போன்ற பகுதிகளில் சிங்கள மக்கள் இரவோடு இரவாக நிரந்திரமாக் குடியேற்றப் பட்டு விட்டார்கள் இவர்களில் பெருமளவில்இராணுவத்தினரின் குடும்பங்களாகும் , இவ்வாறு குடியேற்றப்பட்ட சிங்கள குடியிருப்புகளில் சிங்களப் பாடசாலைகள் , பௌத்த கோவில்கள் , தபால் அகங்கள் உட்பட்ட சகலவசதிகளும் அடங்கும் . இப்பகுதிகளில் பூர்விகமாக வாழந்த மக்கள் அனைவரும் விரட்டப் பட்டு அகதிகளாக அநாதரவான நிலையில் உள்ளனர்.


 

கிளிநொச்சி மாவட்டம்- கிளிநொச்சி நகர், முழங்காவில், முறிகண்டி , மற்றும் சிங்களப் படைகள் நிலை கொண்டுள்ள முகாம்களில் நிரந்தர வீட்டுத் தொகுதிகள் அமைக்கப் பட்டு அங்கும் சிங்களவர்கள் குடியேற்றப் படுகின்றனர்.


 

மன்னார் மாவட்டம் – மடு , திருக்கேதீசுவரம் (சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற 2500 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழர் பிரதேசம்) மன்னார் மேற்கு பிரதேசம் என்பன தற்போது வேகமாக சிங்களக் குடியேற்றம் நிகழும் பிரதேசங்களாகும்.


 

வவுனியா மாவட்டம் - நெடுங்கேணி , மாமடு, கனகராயன் குளம், உட்பட இன்னும் பல பிரதேசங்கள் அரச ஆதரவுடன் தீவிரமாக சிங்கள மக்கள் குடியேற்றப் படுகின்றனர்.


 

முல்லைத்தீவு மாவட்டம்: கொக்கிளாய் , நாயாறு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு,முள்ளியவளை , தண்ணீரூற்று, இரணைமடு, மற்றும் முல்லைத்தீவு கடலோரப் பிரதேசங்கள் போன்ற தமிழர் பிரதேசங்கள் சிங்களவர்கள் குடியேற்றங்கள் அரச ஆதரவோடு நடைபெறுகின்றன.


 

திருகோணமலை மாவட்டம் : மாவட்டத்தின் பெரும்பான்மை பிரதேசங்கள் ஏலவே ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன, ஏனைய பகுதிகளிலும் தொடர் குடியேற்றங்கள் நடை பெறுகின்றன.


 

மட்டக்களப்புமாவட்டம் : வாகரை, குடும்பி மலை போன்ற பிரதேசங்கள் மிகத் தீவிரமாக சிங்கள குடியேற்றம் நடைபெறுகின்றது. இங்கு ஏலவே தமிழர் பிரதேசம் ஓன்று புனானை என சிங்கள பெயர் மாற்றப் பட்டு அங்குள்ள தமிழர்கள் கொள்ளப் பட்டு துரத்தி அடிக்கப் பட்டு விட்டனர்.


 

அம்பாறை மாவட்டம் : இம்மாவட்டம் முழுவதுமே தற்போது திகாமடுல்ல என சிங்கள பெயராக மாற்றப் பட்டு எஞ்சி இருக்கும் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் பறிக்கப் பட்டு கொண்டிருக்கிறது. அதில் தற்போது பொத்துவில் என்ற தமிழ் தொகுதி சிங்கள மயமாக மாற்றப் படுகிறது . ஏலவே பாணமை எனும் தமிழ் பிரதேசம் சிங்கள மயமாக்கப் பட்டு விட்டது அங்குள்ள தமிழர்கள் பயத்தின் காரணமாக வலுகட்டாயமகா சிங்களவர்களாக மூன்று தலைமுறைக்கு முதல் மாற்றப் பட்டுவிட்டனர் இங்குள்ள தமிழர்களில் வயது முதிந்தவர்களுக்கு மாத்திரம் தமிழ் தெரியும். அவர்களது பிள்ளைகள் சிங்களப் பெயரோடு தமிழ் தெரியாதவர்களாக மாறிவிட்டனர்.


 

· இவ்வின அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது?


 

இந்தியாவின் புகழ் 50000 வீட்டுத் திட்டம், இலங்கை, இந்திய கூட்டு சதித் திட்டம் என்பதே உண்மை ஏனெனில் இவ் வீட்டுத் திட்டத்தில் 75 சதவீதமானவை சிங்கள ராணுவ குடியிருப்புகளுக்கும், சிங்கள குடியிருப்புகள் கட்டவுமே பயன் படுகின்றன. இதில் வெளிப் படையாக மடு , நெடுங்கேணி, மணலாறு மற்றும் வவுனியா என்பவற்றில் சிங்கள வடமாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் சிங்கள குடியேற்றம் இந்திய அரசின் வீட்டுத்திட்ட நிதி உதவியுடன் நடை பெறுகின்றது. இவ்விடயம் தமிழ் அரசியல் வாதிகளால் இந்திய தரப்புக்கு தெரியப் படுத்தியும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை இந்தியாவின் தூதுவர், உதவி தூதுவர் என்போருக்கு இவ்விடயம் முறைப்பாடு செய்யப்பட்டும் எந்த மாறுதலும் இல்லை.


 

இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர் பெரும் பான்மையை அழித்து அவர்களை சிறுபான்மை ஆக்கும், அல்லது முற்றாகவே தமிழர்களை இலங்கையில் இருந்து ஒழிக்கும், திட்டம் இவர்களிடம் இருப்பதாகவே தெரிகிறது.


 

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் தமிழர் விரோத போக்கு காரணமாக ஒரு இனத்தை அழிக்கும் கொடிய செயல் திட்டத்தை இலங்கை அரசுடன் சேர்ந்து இந்திய அரசு செய்கிறது. இதன் மூலம் இந்திய அரசு அடையப் போகும் நன்மை எதுவும் இல்லை. இவை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். இந்தியா நினைப்பது ஓன்று மாத்திரமே! தமிழ் நாட்டுக்கு அருகில் இலங்கையில் தமிழர் பலம் பொருந்தி இருப்பதை விரும்பவில்லை. இந்த தெளிவற்ற தமிழர் விரோத மனப் பான்மையே இலங்கையில் தமிழர்களை இன அழிப்பு செய்ய இந்திய அரசு தூண்டுகிறது.


 

இதனை தமிழ் நாட்டு தமிழர்கள் எவ்வித அரசியல் சாயமும் அற்று ,வன்முறையற்று ,தமிழ் நாட்டையும் தாண்டி இந்தியா முழுவதும் முன்னெடுத்துச் சென்று இலங்கையில் தமிழ் இனப் படுகொலை இந்திய அரசின், பூரண உதவியுடன் நடைபெறுகின்றது என்பதை அம்பலப் படுத்தி அதனை நிறுத்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமையை வாங்கி கொடுப்பதே சிறந்த செயல் பாடாக அமையும்.

 

http://inioru.com/?p=34401

சோனியாவின் பழிவாங்கல் திட்டத்தின் நிகழ்ச்சிநிரலே இப்போது நிறைவேற்றப்படுகிறது.

 

இலங்கை,இந்தியா, அமெரிக்கா என்ற மூவரினதும் , அவர்களின் ஆதரவாளர்களினது ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் இது

 

ஈழம்.  வடக்கு-கிழக்கு இணைப்பு,  மரபுவழித்தாயகம்   என்ற எல்லாவற்றையும் முற்றாகச் சிதைப்பது. இதற்காகவே

 

சிங்களமயமாக்கல் முழுவீச்சாக இவர்களின் ஆசீர்வாதத்தோடும் அரவணைப்போடும் இடம்பெறுகிறது.ஜெனிவா

 

நாடகம் என்பது இலங்கையைத் தண்டிக்காது  ஈழக்கோரிக்கையை கருத்தற்றதாக்கும் சிங்களமயமாக்கலுக்கு

 

கால அவகாசம் கொடுப்பதாகும். தமிழ்நாட்டில் எதிர்பாராது எழுந்துள்ள மாணவர் எழுச்சி,  ஈழம் - பொதுவாக்கெடுப்பு

 

என்ற போராட்டங்கள் இவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு தடையாக அமையலாம். எனினும் வல்லரசுகள் என்பதால், ஆதிக்கம்

 

அவர்கள் பக்கம் இருப்பதால் மிகமிக விழிப்பாக  நாம்  செயற்படவேண்டும்.

இந்த SG ராகவன் யார் என்றும் சொல்லியிருந்தால் நல்லது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.