Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன குழு யாழிற்கு விஜயம்

Featured Replies

சீன குழு யாழிற்கு விஜயம்

10da1bc4a604ff77a5b3fd2f1e48b5fe.jpg

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிப் பாதுகாப்புச் செயலர் செகுயு கியுக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.  

இன்று காலை பலாலியில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் 11.00 மணியளவில் துரையப்பா விளையாட்டு அரங்கில் வந்திறங்கிய குழுவினரை 512 வது படைப்பிரிவின் பிரிகேடியர் அஜித் பல்லேவல வரவேற்றார். 

வந்தடைந்த  குழுவினர் யாழ் கோட்டைக்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளனர்.

தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளனர். 

சீன இராஜதந்திரிகள் குழுவில் Mr. Gao lang , Mr. Zhou quig, Mr. Lixi ng ang ngang, Ms. Zhu feng, Mr. Wang ziqing, Mr. Wang guan  jun ஆகியோர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

D(5).jpg

http://onlineuthayan.com/News_More.php?id=747591943404847183#

  • கருத்துக்கள உறவுகள்
யாழில் சீன பாதுகாப்பு துறை

 

images25.jpgசீன நாட்டின் பிரதிப்பாதுகாப்புச் செயலர் செகுயு கியுக் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். கொழும்பிலிருந்து பலாலிக்கு விமானப்படை விமான மூலம் இன்று சென்ற சீன பாதுகாப்பு துறை குழுவினர் பின்னர் பலாலியில் இருந்து விமானப்படை வானூர்த்தி மூலம் இன்று காலை யாழ்.நகரினை சென்றடைந்தனர்.

 

சீன பிரதிப்பாதுகாப்புச் செயலாளர் குழுவினரை 512 வது படைப்பிரிவின் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்னர் சீன பிரதிப்பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான குழவினர் யாழ். கோட்டையைம் பார்வையிட்டனர்.

பின்னர் குழுவினர் வானூர்தி மூலம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவர்கள் விஜயம் செய்திருந்ததாக கூறப்படுகின்ற போதும் அத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டு இக்கவில்லை. அக்குழுவில் பாதுகாப்பு விவகார அதிகாரிகளுடன் சீன உளவுக்கட்டமைப்பு அதிகாரிகளும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

 

தலைமன்னாரினை அண்டிய திட்டிப்பகுதிகளில் குறிப்பாக தமிழகத்தையண்டி சீன தளங்கள் அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில் இக்குழுவினரது பயணம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மூலம்/ஆக்கம் :இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.