Jump to content

பராசக்தி - திரைவிமர்சனம்


Recommended Posts

விமர்சனத்துக்கு முன்பான என் குறிப்பு : இந்த விமர்சனத்தை எழுதியவர் சைவப்பெரியார் சூரன்... இவர் என் நண்பர் மயூரியின் பாட்டனார்.... ஈழத்திலே ஜாதி வேறுபாடுகள் களைய போராடியவர்.... ஆலயங்களில் பலிகளைத் தடுக்க தன் தலையையே பலி பீடத்தில் வைத்தவர்.... தனது இலங்கை விஜயத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்....

பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவரான சூரன் பராசக்திக்கு எழுதிய விமர்சனமே இலங்கையின் முதல் படவிமர்சன நூலாகும்.... ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் அடிப்படைக் கல்வி கற்ற திரு. சூரன் பராசக்தியின் திறனாய்வுக்காக சைவ சித்தாந்த கருத்துக்களை ஆதாரமாக காட்டியிருப்பதே இந்த விமர்சனத்தின் சிறப்பு....

நாத்திகப் படம் என்று பலரால் தூற்றப்பட்ட அல்லது போற்றப்பட்ட பராசக்திக்கு ஒரு பழுத்த ஆத்திகர் அவரது பார்வையில் விமர்சனம் எழுதி இருப்பது கொஞ்சம் வித்தியாசமாவே இருக்கிறது.... சரி விமர்சனத்துக்கு போவோமா? கொஞ்சம் நீண்ட விமர்சனம்.... பொறுமை இருந்தால் மட்டுமே படிக்கவும்.... 1952ஆம் ஆண்டு ஈழத்து எழுத்துத் தமிழை விமர்சனகர்த்தா பயன்படுத்தி இருக்கிறார்....

விதவை கல்யாணிக்கு அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி!

பராசக்தி என்ற பேசும்படம் இந்து சமயத்தை ஏளனஞ் செய்கிறதென்று சிலர் சொல்லக்கேட்டு, நான் அப்படத்தைப் பார்க்க விரும்பவில்லை. தற்செயலாக மேற்படி படக்கதைப் புத்தகமொன்று எனக்குக் கிடைத்தது. அதை வாசித்தேன், அக்கதையிலே சமய தூசணையின்றி எமது சமயச்சார்பான பல இரகசியங்களைக் கண்டேன். அதன்பின் அப்படத்தை இரண்டு முறை பார்த்தேன். படம் பார்ப்பதற்காக நான் கொடுத்த சிறுதொகைப் பணத்தால் சிலைமதிப்பற்ற எமது சமய தத்துவ இரகசியங்கள் பலவற்றை நேரிற் கண்டறிந்தேன்.

அதாவது எமது சமயநூல்கள் உலகியல் அநுபவங்களைப்பற்றி எந்தெந்த விதமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றனவோ அந்தந்த விதமாகவே உலகம் இன்றும் நடைபெற்ற வருதலை நாம் நேருக்கு நேர் காண்கின்றோம். ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்எனையாளும் ஈசன் செயல்இஃது ஒளவைத்திருமகள் வாக்கு. இதன் பொருள் வெளிப்படை, இதன்கண் எடுத்தோதப்பட்ட உண்மைகள், எக்காலத்திலாதல் எவர் அநுபவத்திலாதல் பொய்யாதல் இல்லை. அவ்வுண்மைகளைக் கூறுகூறாக மேற்படி பராசக்திக் கதையோடு சார்த்தி ஆராய்வோம்.

“ஒன்றை நினைக்க வேறொன்று ஆனது"

மாணிக்கம்பிள்ளையின் புதல்வர்களாகிய சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் என்னும் மூவரும் பர்மாதேசத்தில் இருக்கிறார்கள். அவரின் புதல்வி கல்யாணிக்குத் திருமணம் நிச்சயமாகிறது.. தன் விவாகத்திற்குத் தமையன்மார்கள் வரவேண்டுமென்பதைக் கல்யாணி தந்தைக்கு அறிவிக்கிறாள். தங்கையின் கல்யாணத்திற்குப் போக நினைத்த சகோதரர்கள் மூவருக்கும் கப்பல் சீட்டுக் கிடைக்காமையால் இளையோன் குணசேகரனை மட்டும் அனுப்புகிறார்கள். இந்தியா வந்து சேர்ந்த குணசேகரனின் பணப்பெட்டியை ஒரு தாசி அபகரிக்கிறாள். இங்கு கல்யாணி நினைத்தது. முதல் குணசேகரன் பணம் பறிகொடுத்தது ஈறாக அவர்கள் நினைத்தபடி நடவாமல் எல்லாம் வேறாக மாறியே நடந்தன.

“நினையாதது முன்வந்து நின்றது"

அதன்பின் கல்யாணி பிரசவிக்கிறாள். அதே சமயத்தில் அவளுடைய கணவனும் தந்தையும் அகாலமரணமடைகிறார்கள் பர்மாவிலே யத்தவிமானங்கள் குண்டுமாரி பொழிகின்றன. சந்திரசேகரனும் அவன் மனைவியும், ஞானசேகரனும் பாதசாரிகளாக இந்தியா வருகிறார்கள். குண்டுசீச்சில் அகப்பட்ட அவர்களும் பிரியநேருகிறது. சந்திரசேகரன் ஆஸ்பத்திரியில் ஞானசேகரனைக் காணாமையால் துன்புற்ற அழுகிறான் பணத்தைப் பறி கொடுத்த குணசேகரனோ ஊணுறக்கமின்றி நடைப்பிணமாக அலைந்துலைகிறான். இங்கு அவர்கள் நினையாத காரியங்கள் அவர்கள் முன்வந்து அவர்களை அலைத்து நிற்கின்றன.

“அநுபவிக்கவேண்டிய பிராப்த கன்மவினை"

அப்பால் மாணிக்கம்பிள்ளையின் வீடுவளவு முதலியனவெல்லாம் அவர்பட்ட கடனுக்காக விலைப்படுகின்றன. கல்யாணி திக்கற்றவளாய் வேறிடத்தில் இட்டலி வியாபாரம் செய்து காலம் கழிக்கிறாள். இந்தவிதமாக மாணிக்கம்பிள்ளையின் குடும்பத்துக்கு நேர்ந்த அவகதிக்குக் காரணம் பழைய ஊழ்வினை என்றார் ஒளவைப்பிராட்டியார். “ஆழ அமுக்கி முகக்கினும் அழ்கடல்நீர்நாழி முகவாது நால்நாழி - தோழிநிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்விதியின் பயனே பயன்"என்றபடி அவரவர்கள் செய்த வினையின் பயனை அவரவர்களே அநுபவித்துத் தீர்க்கவேண்டும்.

இதுவே விதியின் முடிபு, “விரவுமிப் பிறப்பிற் பொருந்து வல்வினை உடலுடன் அகலும்"என்ற ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளுக்குச் சிவபெருமான் பரமாசாரிய வடிவத்தில் திருப்பெருந்துறையில் உபதேசித்தருளினார். அதாவது ஒருவர் ப+மியிற் பிறந்தபின் அவருக்கு நியமனமாயிருந்த ப+ர்வகன்ம வினையை அவர் உடல் உள்ளவும் அநுபவித்தே தீரவேண்டும். இங்கு வல்வினை என்றது பிராப்த கன்மவினையை. இந்தவினை குபேரசம்பத்துடன் இன்பத்தையும், அல்லது கொடிய வறுமையுடன் துன்பத்தையும் அநுபவிக்கச் செய்யும். இவை பூர்வத்தில் அவரவர் செய்த நல்வினை தீவினைகளைப் பற்றி நிற்பனவாம்.

“நாழிமுகவாது என்றது, அவரவருக்கு அளந்த அளவை மிஞ்சாது என்றபடி இவற்றைஎண்ணி மனந் தளராது அநுபவிக்கவேண்டிய பல கஸ்டங்களையும் அநுபவித்துச் சன்மார்க்க நெறியாகிய சத்தியம், நீதி, நிலைதிறம்பாமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து, உய்ரையும் பொருட்படுத்தாது ஒரே பிடிவாத வைராக்கிய பக்தியுடன் நிலைநிற்பவரே திருவருட் சக்தியைப் பெறுவர். ஆரம்பமுதற் பல கஸ்டங்களை அநுபவித்தும், மகளிர் குணங்களாகிய மடம், நாணம்,அச்சம், பயிர்ப்புடையளாய்க் கற்பென்னும் திண்மையுடன் விளங்கி, அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியைப் பெற்றவள் இக் கதாநாயகியாகிய கல்யாணியே. இவள் தன் கணவனையும், தாய் தந்தையரையும், வீடுவளவு முதலிய பொருட்களையும் தன் வாலைவயதில் இழந்து, சகோதரர்களையும் பிரிந்து, தன் குழந்தையின் பொருட்டு உயிர் தாங்கி நின்று தெருக்கோடியிலே ஓட்டைக் குடிசை ஒன்றில் இட்டலி அவித்து விற்கிறாள். வேணு என்ற காடையன், அவள் இதயத்தில் கற்பென்னும் அக்கினி இருப்பதை அறியாது, தன்பாவ அழுக்குக் கையால் அவளின் புனிதக் கையைப்பற்றி இழுக்கிறான். உடனே அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி, குணசேகரனை அதிட்டித்து நின்ற வேணு என்ற அம்மனிதக் குரங்குக்குப் போதிய அடி, உதை கொடுத்து ஒடச்செய்கிறது.

அந்த அர்த்தசாம வேளையில் அக்காடையன் கையிலிருந்து கல்யாணி விலகியமை அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியே, அதனையன்றி யாம் சொல்லத்தக்கது வேறுயாது? கல்யாணி குணசேகரனைத் தன் தமையனென்றறியாமல் பைத்தியக்காரனாகவே எண்ணிக் கிறுக்கண்ணா என்றே அழைக்கிறாள். இட்டலி வியாபாரம் தெருக்கோடிச் சோம்பேறிகளைத் தன்பால் வரவழைப்பதாக உணர்ந்த கல்யாணி, தொழிலையும் இடத்தையும் கைவிட்டு அகலுகிறாள். குணசேகரன் அவளைத்தேடி அலைகிறான்.

“குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்நடைமெலிந் தோரும் நண்ணிணும் நண்ணுவர்" என்ற பிரகாரம், முன்னொரு போது செல்வச் சிறப்புடன் வாழ்ந்த கல்யாணி இப்போது தெருநீளம் நடந்து ஊரூராகத் திரிகிறாள்.

“சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்"

கல்யாணி தான் பட்டினி கிடந்தமை காரணமாகக் குழந்தைக்குக் கொடுக்கப் பால் இல்லாமற்போகவே, பிச்சையெடுக்க ஆரம்பிக்கிறாள். இவ்வாறு பசியின் கொடுமையாற் பல இடற்களிலும் பிச்சை கேட்டுச்சென்ற கல்யாணி கள்ளமார்க்கட் வியாபாரி ஒருவனிடம் வீட்டுவேலையாளாக அமருகிறாள். வியாபாரி தன் மனைவியைப் படம் பார்க்க அனுப்புகிறான். அவள் திரும்பி வருவதற்குள் தனது துர்த்தத்தனத்தைக் கல்யாணியிடங்காட்ட நினைத்த வியாபாரி கள்ளமார்க்கட்டில் தான் பதுக்கிவைத்திருக்கும் புளி மூட்டை முதலியவற்றை இழுப்பதுபோல அவள் கையைப்பிடித்து இழுக்கிறான்.

இந்தச் சமயத்திலே கல்யாணியின் இதயக்குரல் கேட்ட அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி வியாபாரியின் மனைவியால் வேகமாகப் பாய்ந்து, படம் பார்த்துக்கொண்டிருந்த குறையில் அவளைக் கறகறவென்று இழுத்துவந்து கல்யாணியின் முன்விட்டு அவள் கற்பைக் காப்பாற்றியது.

அதன்பின் அவ்விடத்திலும் இருக்க விருப்பமற்று வெளியேறிய கல்யாணி சேகரன் என்ற நீதவானைப் பிச்சைகேட்டு அவன் காலில் விழுகிறாள். அவன் தனது சப்பாத்துக்காலால் கல்யாணியையுங் குழந்தையையும் உதைத்து வெருட்டுகிறான். அங்கு நின்ற கல்யாணி குழந்தையுடன் ஒரு காளிகோயிலை அடைகிறாள். அக்கோயிலிலே சமய அறிவும் சன்மார்க்கமும் இல்லாத மூடப்பூசாரி அவளைப் பார்த்து உனைப்போன்ற ஏழைகளுக்கே அம்பாள் நல்லருள் தருவாள் என்றுகூறி அவளை மரியாதையுடன் உள்ளே அனுப்புகிறான். பொய்,களவு, வஞ்சனை, காமம் முதலிய பாதகங்களையெல்லாம் தன்நெஞ்சத்திருத்தி அவைகளைப் பிறர் காணாதவாற விப+தி சந்தணம் உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களைப் புறத்தே அணிந்துநின்ற அப்போலிப் பூசாரியின் சிந்தனை அலைகள் மூன்றாகப் பிரிகின்றன.

உலகம் மாயையின் தோற்றம், மாயை மூன்றுவகைப்படும். பிரகிருதிமாயை, அசுத்தமாயை, சுத்தமாயை என்பனவே அவை. பிரகிருதியாய்நின்ற பூசாரியை மயக்கத்தைச் செய்யும் அசுத்தமாயை கல்யாணியின் மையலில் தூண்டிவிடுகிறது. அறிவுக்க வித்தாகிய சுத்தமாயை தன்வலுவிழந்து பின்செல்லுகிறது. இறைவனுடைய திருவருட்சக்தி பதியப்பெறாத எவரும் இந்த அசுத்தமாயையின் சேட்டையினின்றும் மீள்வதில்லை. ஆகவே சகல அண்டசராசரங்களுடன் கலந்தும் அவற்றைக் கடந்தும் நிற்கும் மெய்ப்பொருளாகிய இறைவசந்நிதானத்தில் தான் செய்யத் துணிந்த துர்க்கிருத்தியத்திற்கப் பெட்டிப் பாம்பு தன்னை ஆட்டுங்குறவன்வழி ஆடுவதுபோல அன்னைபராசக்தியும் தன்வழி நின்று துணைபுரிவாளென மயங்கிய பூசாரி கல்யாணியின் கரத்தைப் பற்றுகிறான்.

அக்கணமே அன்னை பராசக்தியின் திருவருட்சக்திக் கண்ணினின்றும் சிறுபொறிகள் சிதறிச்சென்று அப்பூசாரியின் பண்ப்யாளாகிய குப்பன்பாற் புகுந்து அவனை நித்திரை விட்டெழச்செய்து மணியை அடிப்பிக்கிறது. மணியோசை கேட்டுத் திடுக்கிட்ட பூசாரி கல்யாணியின் கையை மெல்லவிட்டு விடுகிறான. கல்யாணி வெளியேறுகிறாள்.

இறுதியில் தானுந் தன்குழந்தையும் உயிர்விடுத்தே விமோசனத்துக்கு வழியெனக் கருதிய கல்யாணி ஓர் ஆற்றின் பாலத்தின்மேல் நின்றுகொண்டு குழந்தையை ஆற்றிலே எறிந்துவிட்டுத் தானும் விழுந்துமடிய எத்தனிக்கையில் அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியானது அந்த ஆற்றிலே படகோட்டிக்கொண்டு நின்ற விமலா என்னும் ஒரு யுவதியின் மடியிலே குழந்தை விழுமாறும் கல்யாணியைப் பொலீசார் கண்டு தடுத்து நிறுத்துமாறும் செய்தது. இந்த இடத்தில் நாம் அறியவேண்டியது கடவுள் தோன்றாத் துணையிருந்து அருள்புரியும் திறனாகும்.

திருநாவுக்கரசு சுவாமிகளைச் சமணர்கள் கல்லோடு சேர்த்துக்கட்டிக் கடலிலே விட்டபோது அக்கல்லே, தெப்பமாக மிதந்து சென்று திருப்பாதிரிப்புலிய+ரில் சுவாமிகளைக் கரையேற்றியது. அப்பொழுது சுவாமிகள் “ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினாய் என்னும் தேவாரத்தைத் திருவாய்மலர்ந்தருளினார். அது தேவாரத்தின் இறுதியடி. “தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யேங்களுக்கே என்பது.

இறைவிபக்தியிற் சிறந்த கல்யாணி பல கஸ்டங்களுக்குட்பட்டும் வைராக்கிய திடசித்தத்துடன் கற்புநெறிநின்று ஒழுக்கங்காத்தமையால் அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி அவளை நிழல்போலத் தொடர்ந்துசென்று வேண்டிய சமயங்களிலே தோன்றாத்துணை புரிந்து வந்தது. திருவருள் தோன்றாத்துணை அளிப்பதுபோலவே தோன்றாத் தண்டனையும் அளிப்பதுண்டு. கள்ளமார்க்கட் வியாபாரி கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பி வீட்டுக்கு வருகிறான். அவனுடைய வேலைக்காரன் கொடுத்த பாதித் தேங்காயைப் பிச்சைக்காரனிடமிருந்து பறித்துவிடுகிறான். இதுகண்ட குணசேகரன் அன்னை பராசக்தியின் அதிட்டிப்பால் வியாபாரியிடமிருந்த பிரசாதம் முழுவதையும் தட்டுடன் பறித்துப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்துவிட்டு வியாபாரியை நையப்புடைத்து உதைத்து ஓடச்செய்கிறான். வியாபாரிக்க இங்கு கிடைத்த தண்டனை கல்யாணியைத் தொட்ட பாவத்தின் வினையென்பதை யாருமறியார். இதுவே தோன்றாத் தண்டனையாம்.

கல்யாணி கொலைக் குற்றவாளியாகக் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறாள். விசாரணை நடத்திய சேகர் என்னும் நீதிபதி அவளுடைய பூர்வீக வாழ்க்கை வரலாற்றை அவள் கூறக்கேட்டு அவளே தன்னிடம் பிச்சைகேட்க வந்து, தன் சப்பாத்துக் காலால் இடறுண்டு போனவள் என்றும், அவளே தன்தங்கை கல்யாணி என்றும் அறிந்து தலை சுழன்று கீழே விழுகிறார். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பைத்தியக்காரன்போற் கிடந்து “கல்யாணி! என் கல்யாணி! என்று பிதற்றுகிறார்.

பூசாரியின் அடாத செயலுக்குத் தோன்றாத்தண்டனை புரியச் சங்கற்பஞ்செய்த அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி, பூசாரியின் பணியாளாகிய குப்பன் வாயிலாக கோயிலில் நடந்த சம்பவத்தைக் குணசேகரன் கோயிலுக்குச் சென்று ப+சாரிக்குக் கத்தியால் வெட்டுகிறான். பொலீசார் கைதுசெய்து கோட்டிலே நிறுத்துகிறார்கள். சேகருக்குப் பதிலாக வேறொரு நீதிபதி கல்யாணியின் விசாரணையைத் தொடர்ந்து நடத்துகிறார். அங்க குணசேகரன் தன்னை வஞ்சித்துப் பணத்தை அபகரித்த தாசி, கல்யாணியின் கற்பைச் சூறையாடச் சூழ்ச்சிசெய்த வேணு, கள்ளமார்க்கட் வியாபாரி, பூசாரி என்பவர்களைக் குறிப்பிட்டுக் காட்டி முன்நடந்த சம்பவங்களையெல்லாம் பிரஸ்தாபித்து வாதாடுகிறான்.

கல்யாணி தன் தங்கை என்றும், அவள் நிரபராதி என்றும் எடுத்துக்காட்டி அவளை விடுதலை செய்யுமாறும் தனக்குத் தண்டனை விதிக்குமாறும் கோட்டாரை வேண்டுகிறான். நீதிபதியோ கல்யாணி கொலைக்குற்றவாளியென்றே சாதிக்கிறார். அப்பொழுது அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியால் உந்தப்பட்டு “கல்யாணி குற்றவாளி இல்லை இதோ கல்யாணியின் குழந்தை என்ற கூறிக்கொண்டு குழந்தையுடன் விமலா கோட்டிலே பிரசன்னமாகிறாள்.

அரவு தீண்டி இறந்த தேவதாசன் உயிர்பெற்றெழுந்தபோது சந்திரமதி அடைந்த பெருமகிழ்ச்சிபோல கல்யாணியம் ஆற்றில் எறியப்பட்டு மாண்டுபோன தன் குழந்தை மீண்டுவந்தமைகண்டு குதுஸகலித்து விமலாவிடமிருந்து குழந்தையை வாரியெடுத்தணைத்து முத்தமிடுகிறாள். நீதிபதி விமலாவைப் பார்த்து, அக்குழந்தை உயிருடன் அவள் கையில் எவ்வாறு எறியப்பட்டதென வினாவ, அவளும் தான் நிலாக்காலங்களில் வழக்கமாக வள்ளத்திலே உலாவப் போவதென்றும், அன்றும் அப்படியே போய்க்கொண்டிருக்கையிற் தன்படகிலே அக்குழந்தை விழுந்ததென்றம் சொல்லி மேலும் நடந்தவற்றைப் பிரஸ்தாபிக்கிறாள். அவ்வளவிற் கல்யாணி நிரபராதியென விடுதலையாகிறாள்.

குணசேகரன் பூசாரியை வெட்டியது தற்பாதுகாப்பின் பொருட்டென உணர்ந்த நீதிபதி அவனுக்கும் விடுதலையளிக்கிறார். எல்லோரும் சந்திரசேகரன் வீட்டிற்குப் போகிறார்கள். பிச்சைக்காரர் மாகாநாடு கூட்டுவதில் பணிசெய்துகொண்டு திரிந்த ஞானசேகரனும் அங்கு வந்து சேருகிறான்.

“ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம்"

இதுவரை மாணிக்கம்பிள்ளையின் குடும்பத்தை அல்லோலகல்லோலப்படுத்திய பிராப்த கன்மவினை முற்றாக அநுபவித்துத் தீர்ந்துபோகவே அவர்களின் நல்லூழ் ஒன்று கூட்டியது. இதற்கு முன்பும் அவர்கள் எல்லோரும் ஓரூரில் இருந்தும் ஒருவரையொருவர் சந்தித்தும் “ ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம்" என்றபடி ஒருவரையொருவர் அறிந்து சேர்ந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சந்திப்பிற்குப் பின், ஆடம்பர வாழ்க்கைச் சிகரத்தில் நின்ற சந்திரசேகரனும், ஒருவேளைக் கஞ்சிக்காகப் படாதபாடெல்லாம்பட்ட கல்யாணி - குணசேகரன் என்பவர்களும் பிச்சைக்காரர் முன்னேற்றத்துக்காக இரவுபகல் பணியாற்றி வந்த ஞானசேகரனும் அவனை அடுத்திருந்த பிச்சைக்காரர்களும் “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேஅல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே"என்ற தாயுமானார் வாக்கின்படி எல்லோரும் வாழவேண்டும் என்பதற்காகச் சாந்தநாயகி அனாதைவிடுதி அமைத்து அமைதியாகத் தொண்டாற்றுகிறார்கள்.இவ்வளவோ

Link to comment
Share on other sites

அரஹரநமப் பார்வதே பதி...

அரஹர மகா தேவா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை,  நீங்கள்தான்... உங்கடை ஊர் மழையை கூட்டிக் கொண்டு வந்து, இங்கை விட்டுட்டு போயிருக்கிறீர்கள் போலை கிடக்கு. 😂 இங்கு கடந்த சிலநாட்களாக  தொடர் மழை. ஆறுகள் எல்லாம் நிரம்பி அலை புரண்டு ஓடுது. நாங்கள் இருக்கும் பகுதியில் வெள்ள ஆபத்து இல்லை. ஆனாலும்... இந்த மழை கோதுமை, சோளம் போன்ற பயிர்களுக்கு தேவைதான். 
    • இருக்கிற பிரச்சனைக்குள்ள இதுகள் வேற கீச்சுமாச்சு காட்டிக்கொண்டு....
    • நல்லகாலம் போன கிழமை நான் உங்கை நிக்கேக்க வெள்ளம் வரேல்லை.... @தமிழ் சிறி  உங்கட பக்கம் வெள்ளம் என்ன மாதிரி?
    • உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள் - காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசம் முழுவதும் தற்போது கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மாநிலத்தின் பல நகரங்களில் வெப்பநிலை 49 டிகிரியை எட்டியுள்ளது. கான்பூரிலும் தொடர்ந்து வெப்பம் அலை நிலவுகிறது. இங்குள்ள அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு வரப்படும் இறந்த உடல்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை அன்று, கான்பூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அங்கித் சுக்லா பிபிசி இந்திக்காக செய்தி சேகரிக்கச் சென்ற போது, அடையாளம் தெரியாத 32 பேரின் உடல்கள் இங்கு கொண்டு வரப்பட்டதாக கூறினார். நகரின் பல்வேறு இடங்களில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேசமயம், 30க்கும் மேற்பட்ட உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அடையாளம் தெரிந்த மற்றும் தெரியாத சடலங்கள் தொடர்ந்து கொண்டு வரப்பட்டதால், பிணவறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. தொடர்ந்து பணிபுரிந்ததால் மருத்துவர் ஒருவரின் உடல்நிலையும் மோசமடைந்தது.   அடையாளம் தெரியாத 32 பேரின் உடல்கள் பட மூலாதாரம்,ANKIT SHUKLA 32 அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை தலைமை மருத்துவ அதிகாரியும் மருத்துவருமான அலோக் ரஞ்சன் உறுதிப்படுத்தியுள்ளார். “பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும். இறந்த உடல்களை வைக்க தனி அறையும், ஏ.சி.யும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 மருத்துவர்கள் கொண்ட குழு இன்று (சனிக்கிழமை) பிரேத பரிசோதனைப் பணிகளை கவனித்து வருகிறது. 19 உடல்களின் பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது. இன்னும் 14 உடல்களுக்கான சோதனை நடந்துவருகிறது. 32 அடையாளம் தெரியாத உடல்களை அடையாளம் காண்பதற்காக குறைந்தது 48 மணிநேரம் இங்கு வைக்கப்படும்." என அலோக் ரஞ்சன் கூறினார். கூடுதல் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் கூறுகையில், ''இன்னும் உடல்கள் வரவுள்ளன. அவற்றை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இறந்த உடல்களை ஐஸ்கட்டிகளில் வைக்க ஆலோசனை செய்யப்பட்டது, ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக இதைச் செய்ய முடியவில்லை.” என்றார். கான்பூரில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 48.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அன்றைய நாளில் உத்தரப் பிரதேசத்தின் மிகவும் வெப்பமான நகரமாக கான்பூர் இருந்தது. நகரில் உள்ள எல்.எல்.ஆர் மருத்துவமனையில் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மரணங்கள் வெப்பத்தின் காரணமாக ஏற்பட்டதா இல்லையா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படல்லை, ஆனால் 'இது அதீத வெப்பத்தின் விளைவு தான்' என கான்பூரின் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிஷ்சந்திரா ஒப்புக்கொண்டார். பிரேத பரிசோதனைக்கு பின் இறுதிச் சடங்குகளை செய்த தனிராம் பாந்தர் கூறுகையில், “கடந்த ஒரு வாரமாக, தினமும் 10-12 சடலங்கள் வருகின்றன. இங்கு போதிய டீப் ஃப்ரீசர் (Deep freezer) இயந்திரங்கள் மற்றும் ஏ.சி இல்லாததால், சடலங்களை பெற்றுக் கொள்ள வருபவர்களும் அதிக சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். உரிமை கோரப்படாத ஏராளமான சடலங்கள் வெளியில் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.   ஊர்க்காவல் படையினர் 6 பேர் உயிரிழப்பு பட மூலாதாரம்,@INDIAMETDEPT பிபிசி இந்திக்காக மிர்சாபூரில் இருந்து ஹரிஷ் சந்திர கேவட். உத்தரபிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிர்சாபூர் மற்றும் பல்லியா மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மிர்சாபூரில் அதீத வெப்பம் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 13 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நாளான சனிக்கிழமையன்று, கடும் வெயிலில் வாக்களிக்க மிர்சாபூருக்கு வந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வெப்பத்தினால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு உயிரைக் கூட இழந்தனர். அதில் 6 ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். இது தவிர, தேர்தல் பணியில் இல்லாத மேலும் இரண்டு ஊர்க்காவல் படையினரும் உயிரிழந்துள்ளனர்.   ஊர்க்காவல் படையினர் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்பு படம் வாக்குபதிவு இயந்திரங்களை வைப்பதற்கான ‘ஸ்ட்ராங் ரூம்’ (Strong room) மிர்சாபூரின் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மஜ்வா பிளாக்கின் கட்கா சாவடியில் நிறுத்தப்பட்டுள்ள ஊர்க்காவல் படையினர் பேசுகையில், "நாங்கள் 31ஆம் தேதி இரவு 11 மணிக்கு வந்தோம், ரயிலில் இருந்து இறங்கி, ஸ்ட்ராங் ரூமுக்கு நடந்து சென்றோம், அங்கு எங்களுக்கான பேருந்து மற்றும் சாவடியைத் தேடத் தொடங்கினோம். பேருந்துகள் அங்கும் இங்கும் நின்று கொண்டிருந்தன” என்றார்கள். மேலும், “எங்கள் பேருந்தில் நாங்கள் அமர்ந்திருந்தபோது, பேருந்தின் மேற்கூரையிலிருந்து நெருப்பு மழை பொழிவது போல் இருந்தது, நாங்கள் அனைவரும் வியர்வையில் நனைத்திருந்தோம், எங்கள் கண்கள் எரிந்தன.” “குடிநீர் என்ற பெயரில் இரண்டு டேங்கர்கள் மட்டுமே இருந்தன, நிழலுக்கு ஒதுங்க ஒரு இடமும் இல்லை, பேருந்துகள் ஒரு வரிசையில் நிறுத்தப்படவில்லை. இதனால் நெரிசல் ஏற்பட்டு, மூன்று மணிநேரத்திற்கு மேலாக பேருந்துகளில் இருக்க வேண்டிய நிலை இருந்தது. பின்னர் மதியம் 12 மணிக்குப் பிறகு தான், நாங்கள் வாக்குச் சாவடிக்குக் கிளம்பினோம்." என்று ஊர்க்காவல் படையினர் கூறினார்கள். அங்கு வந்திருந்த தேர்தல் அலுவலரிடம் பேசியபோது, 'இதற்கு தான் பொறுப்பல்ல' என்று அவர் திட்டவட்டமாக பதிலளித்தார். வசதிகள் குறித்த கேள்விக்கு, "அன்று காலை மேகமூட்டமாக இருந்தது, அது மட்டுமல்லாது வாக்குச்சாவடிகளில் கூலர் (Cooler) வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது" என்று அவர் பதிலளித்தார். வாக்குச்சாவடியில் இருந்த ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், “வாக்களிப்பு நிலையத்திற்குள் அமர்ந்திருப்பவர்களுக்கு, நிழலும் மின்விசிறிகளும் கிடைப்பதால் சற்று நிம்மதியாக இருக்கும், ஆனால் எங்களுக்கு? நாங்கள் நாள் முழுவதும் வெளியில் வெயிலில் உட்கார்ந்து வேலை செய்கிறோம், எங்களுக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை” என்றார்கள்.   சோன்பத்ராவில் 9 தேர்தல் பணியாளர்களும், வாரணாசியில் 3 பேரும் உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES கௌரவ் குல்மோகர், பிபிசி இந்திக்காக. வெள்ளிக்கிழமை, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 45.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பதோஹியில் 43.7 டிகிரி செல்சியஸ், வாரணாசியில் 43 டிகிரி செல்சியஸ், மிர்சாபூரில் 42.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுவரை, சோன்பத்ராவில் மொத்தம் 9 வாக்குச்சாவடி ஊழியர்கள் வெப்ப அலைக்கு இறந்துள்ளனர். சோன்பத்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திர விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராபர்ட்ஸ்கஞ்ச் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தேர்தல் பணியாளர் குழு புறப்பட இருந்தது. மதியம் 11 முதல் 2 மணிக்குள் சில வாக்குச்சாவடி பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டனர்." என்றார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரு போலீஸ்காரர் உட்பட 3 வாக்குச்சாவடி பணியாளர்கள் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நோயாளிகள் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நித்யானந்த் பாண்டே (குமாஸ்தா) மற்றும் மேலும் ஒருவர் என இரண்டு வாக்குச்சாவடி பணியாளர்கள் வெப்ப அலையால் இறந்துள்ளனர்." என்றார். தகவலின்படி, வாரணாசியிலும், 3 வாக்குச்சாவடி ஊழியர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கடுமையான வெப்பத்தால் இறந்துள்ளனர். ஆனால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. பல்லியாவின் சக்பஹவுதீன் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ராம்பச்சன் சவுகான் என்ற எழுபது வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்த கிராமத் தலைவர் அருண்ஜெய் சவுகான் பிபிசியிடம் பேசுகையில், "ராம்பச்சன் சுமார் 5 நிமிடம் வாக்குப்பதிவு வரிசையில் நின்றிருந்தார். திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால் அவர் ஆரோக்கியமான ஒரு நபர் தான்” என்று கூறினார். பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேந்திர குமார் பிபிசியிடம் பேசுகையில், “துணை மாவட்ட மாஜிஸ்திரேட்டின் அறிக்கையின்படி, அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதே சமயம், பல்லியாவில் வெப்பம் காரணமாக வேறு யாரும் இறக்கவில்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/ce553jm44zko
    • கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் 03 JUN, 2024 | 03:26 PM   முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (3) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் 4 ஆவது சந்தேக நபர் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185209
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.