Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏட்டிக்குப் போட்டியாக அரசஆதரவு ஆர்ப்பாட்டம் தமிழ்மக்களால் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏட்டிக்குப் போட்டியாக அரசஆதரவு ஆர்ப்பாட்டம் தமிழ்மக்களால் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

தமிமக்கள் தமது அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று முல்லைதீவு மாவட்ட செயலகம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றிற்கு திட்டமிட்டிருந்த நிலையில் இலங்கை அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜனாதிபதி இணைப்பாளருமான கனகறட்ணத்தை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிவரும் முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும் இந்த பிரதேசத்தில் இனக்கலவரமொன்றுக்கு தூபமிடும் வகையில் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கண்டித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குறிப்பாக முள்ளியவளையில் அடாத்தாக குடியேற முற்பட்டவேளை அது தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வார்ப்பாட்டம் நடந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட தமிழ் - முஸ்லிம் நல்லுறவிற்கான அமைப்பு எனும் பெயரில் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட அமைப்பு விடுத்த அழைப்பின் பேரிலான இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கணகரத்னம், அமைப்பின் தலைவர் முஹம்மத் ஜிப்ரி, மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் நந்தன் உட்பட பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டன.. எனினும் சுயாதீன தகவல்கள் முஸ்லீம்களது குடியேற்றம் பற்றி கூட்டமைப்பு வாய் மூடியே இருந்துவரும் நிலையில் முள்ளியவளையில் நின்றிருந்த வன்னி நாடாளும்னற உறுப்பினர் கூட ஒதுங்கியே நின்றிருந்தார். எனினும் மக்கள் தாமாக ஒன்று திரண்டு இவ்வார்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

இதேவேளை நிறைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கையளிக்கும் மகஜர் ஒன்றினை அமைப்பின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் என்.வேதநாயகத்திடம் கையளித்தனர்.

இத்தகைய ஏட்டிக்குப்போட்டி அரச ஆதரவு ஆர்ப்பாட்டங்களை அடுத்து தமிழ் தரப்புக்கள் தமது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றிருந்தன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90551/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.