Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழப் பிரகடனமும் Exile government உம்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடு நிசி தாண்டி.. நித்திரையின் நடுவே.. கனவில் ஒரே உற்சாகம்.. சில ஐடியாக்கள் கனவில் உதித்திருந்தது... கனவில் கண்டது நனவானால்.. இன்னும் உற்சாகமாக இருக்கும் என்பதால்... இதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்..

 

காலனித்துவத்திற்கு முந்திய எமது ஆட்சிய அதிகாரங்களின் இருப்புக்கான ஆதாரங்கள்..

 

காலனித்துவத்தின் போதான எமது நில ஆக்கிரமிப்புக்கான ஆதாரங்கள்..

 

காலனித்துவம் கையளித்த அதிகார மையம் சிங்களத்திடம் போய் சேர்ந்ததற்கான ஆதாரங்கள்..

 

கடந்த காலங்களில்.. சிங்களம் இனப்படுகொலைகள் மூலம்.. கலவரங்கள் மூலம்.. எமது அரசியல் மற்றும் வாழ்வுரிமையை பறித்த துயரம்...

 

தனிச் சிங்களச் சட்டம்.. சிறீ திணிப்புகள்.

 

சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட அரசியல் சமூக.. பொருண்மியப் புறக்கணிப்புக்கள்.

 

சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தில் முக்கியம் பெற முடியாத அவர்களின் சம அரசியல்
வாழ்வுரிமையை உறுதிப்படுத்த முடியாத அரசியல் அமைப்பு.

 

சிங்கள அரசின் நீதித்துறையின்  ஊடாக சிறுபான்மையினருக்கு சரியான நீதி கிடைக்க உத்தரவாதமின்மை.

 

சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதோடு அவர்களின் வாழ்விடங்களும்... மத
உரிமைகளும்.. மொழி உரிமைகளும் கலாசாரங்களும் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றமை.

 

அமைதி வழிப் பேச்சுக்களும் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டமையும் அமுலாக்கல் இன்றி செத்துப் போனமையும்.

 

விடுதலைப் போராட்டக் கருக்கொள்ளல்.

 

தனித் தமிழீழத்திற்கு 1977 இல் மக்கள் வழங்கிய ஜனநாயக தேர்தல் மூலமான அங்கீகாரம்.

 

விடுதலைப் போராட்டம் தந்த இனங்காட்டிய de facto state இன் எல்லைகளும் மறைமுகமான சர்வதேச அங்கீகாரங்களும்.

 

வடக்குக் கிழக்கு மாகாண சபை செய்த.. தமிழீழத் தனியரசுக்கான 1990 பிரகடனம்.

 

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான மக்கள் ஆதரவும் இருப்பும்.

 

நாடு கடந்த தமிழீழ அரசு கொண்டுள்ள தமிழீழ சாசனம்.

 

தமிழகத்தில் தனித் தமிழீழத்தை ஆதரிக்கும் சட்டமன்ற தீர்மானங்களும் மக்களும்.

 

மலேசியாவில் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கும் மக்கள்.

 

உலக அளவில் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கும் மக்கள்.

 

தனியான கொடி. தனியான மொழி.

 

தனியான தேசிய அடையாளங்கள்.

 

தனியான தேசிய இன உரிமத்துக்கான அடையாளம்.

 

பூர்வீக நிலத்திற்கான வரலாறுகள்.

 

தொடரும் திட்டமிட்ட இன அழிப்புகளும்.. போர்க்குற்றங்களும்.. மனிதப் பேரிடர்களும்.

 

தொடரும் மக்களின் உள்நாட்டு வெளிநாட்டு இடம்பெயர்வுகள்.

 

தொடரும்.. நில ஆக்கிரமிப்புக்களும் இராணுவ பரிபாலனங்களும்.

 

தொடரும் சிங்கள பெளத்த பேரினவாத தீவிரவாதமும் அதன் பால் சிறுபான்மையினர் சந்திக்கும் நெருக்கடிகளும்.

 

தொடரும் அரச ஆதரவு பெரும்பான்மை இன கருத்தியல் திணிப்புக்கள்.

 

தொடரும் மனித உரிமை மீறல்களும்.. நீதிப் புறக்கணிப்புகளும்.

 

தொடரும் அரசியல்  உரிமைக்கான புறக்கணிப்புக்கள்.

 

தொடரும் அரச ஆதரவு துணை இராணுவக்குழுக்கள் சார்ந்த அரசியலும்.. நிர்வாகமும்.

 

மக்களின் ஜனநாயக உரிமைகள் ஊடக சுதந்திரம் உட்பட ஏனையவை பறிக்கப்பட்டு வருகின்றமை.

 

தனித் தமிழீழ அரசை அங்கீகரிக்கக் கூடிய நாடுகளின் இருப்பு.

 

தனித் தமிழீழ அரசை அங்கீகரிக்கக் கூடிய சர்வதேச புகழ்பெற்ற scholars இருப்பு.

 

தனித் தமிழீழத்தை வேண்டும்.. தமிழ் அரசியல் புத்திசீவிகளின் இருப்பு.

 

சர்வதேசத்தின் சட்டப் பிரமானங்களுக்கு உட்பட்டு ஒரு ஆட்சி அமைக்கக் கூடிய கடப்பாட்டை உணர்ந்துள்ள மக்கள் இனம்.

 

கடந்த கால சர்வதேச மத்தியஸ்தங்களுடனான பேச்சுக்களும் அவற்றில் வலியுறுத்தப்பட்ட விடயங்களும்.

 

எமது விடுதலைப் போராட்டத்தின் பால் மக்கள் செலுத்திய உயிர் விலைகளும்.. அவர்கள் அதன்பால் தன்னிச்சையாகக் கொண்டிருந்த பற்றுறுதியும்.

 

இப்படி பல காரணிகளின் அடிப்படையில்..

 

எமக்குரிய நிலத்துடன் நாம்... சுதந்திரமாக வாழக் கூடிய நிலைக்கு.. ஒரு தீர்வை
பெற்றுத்தர சர்வதேசத்திற்கு ஒரு கால அவகாசம் வழங்கி அதற்குள் அது சிறீலங்கா
அரசிற்கு வலுவான அழுத்தம் கொடுத்து தமிழ் மக்கள் அங்கீகரிக்கக் கூடிய தீர்வை பெற்றுத் தர வேண்டிக் கொள்வது.

 

அப்படி இல்லாத பட்சத்தில் தனித் தமிழீழ நாட்டைப் பிரகடனம் செய்வதோடு.. அதே
நேரத்தில் அதற்கான ஒரு Exile government ஐ அறிவிப்பதும்.. இது நாம் எதிர்காலத்தில் சர்வதேச பூகோள அரசியல் பொருண்மிய இராணுவ பரிமானங்களின் மாற்றங்களோடு எமது நிலத்தில் எமக்கான தேசத்தை மீட்க வகை செய்யலாம் இல்லையா..??! இது குறித்து உங்கள் கருத்து என்ன...???! இதில் எவ்வளவு சாத்தியப்பாடுகள் உள்ளன..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்க‌ர் நித்திரை வரா விட்டால் ஒரு ந‌ல்ல‌ புத்த‌க‌மா எடுத்து வாசிக்கிற‌தை விட்டுப் போட்டு இப்ப‌டியா மைல் க‌ண‌க்கில‌ ப‌ட்டிய‌ல் போடுற‌து? இதுக்கு ஒருவ‌ரும் ஏன் ப‌தில் எழுத‌ இல்லையென்று என‌க்கு கொஞ்ச‌ம் புரியுது!

 

 

சுருக்க‌மாக‌ச் சொன்னால் இதில‌ உள்ள‌ ப‌ல‌ விச‌ய‌ங்க‌ள் ஏற்க‌ன‌வே ப‌ல‌ராலும் யோசிக்க‌ப் ப‌ட்டு ந‌ட‌த்த‌ப் ப‌ட்டிருக்கு அல்ல‌து ந‌ட‌க்குது. ஆனால் வெற்றி எதுவும் பெரிதாக‌ இல்லை. எங்க‌ளுக்குள்ள‌ பெரிய‌ த‌டை எங்க‌ளுக்கிடையிலான‌ ஒற்றுமையின்மை. அதை தீர்த்தால் ம‌ட்டுமே நாம் ஏதாவ‌து செய்ய‌லாம். அதில்லாம‌ல் ஒரு முன்னேற்ற‌மும் இருக்காது. சித‌றிக் கிட‌க்கிற‌ த‌மிழ் த‌ர‌ப்பை எப்ப‌டி இன்னும் சித‌ற‌டிக்க‌லாம் என்று ம‌ட்டும் தான் சிறி ல‌ங்காவும் அமெரிக்காவும் இந்தியாவும் யோசிக்கும் (ஏனெண்டால் த‌மிழ் ஈழ‌ம் உருவாவ‌தில் இந்த‌ நாடுக‌ளுக்கு இப்ப‌ க‌ண்ணில‌ தெரிய‌க் கூடிய‌ ஒரு அனுகூல‌மும் இல்லை!). இத‌னால், முத‌ல் கால‌டியில‌ கிட‌க்கிற‌ கொள்ளிக் க‌ட்டையை எடுத்து எறிஞ்சு போட்டு, ஒளியாண்டு தூர‌த்தில‌ வ‌ர‌க்கூடிய‌ த‌டைக‌ளை யோசிக்க‌லாம். என்னுடைய‌ counter proposal, எப்ப‌டி சித‌றிக் கிட‌க்கிற‌ த‌மிழ் அமைப்புக‌ளை ஒண்டாக்க‌லாம் என்று ஒரு ப‌ட்டிய‌ல் த‌யாரிக்க‌ முடியுமா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் என்ற போர்வையில் கட்சிகள்.. குழுக்கள் என்று மக்களைப் பிளவுபடுத்துவதே உலகில் இன்று நடந்து வருகிறது. இதன் மூலமாக ஆதிக்க சக்திகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்கின்றன.

 

ஒரு காலத்தில் ஈராக்கோடு ஒட்டி இருந்த அமெரிக்கா தான் பின்னர் அதற்கு வினையாக மாறியது.

 

அதேபோல்.. லிபியாவில் கடாபியை விழுத்த நாட்டுக்கு வெளியில் அவருக்கு எதிரான குழுக்களில் பிரதானமான ஒன்றை அதாவது தங்கள் சொல்வழி கேட்கக் கூடிய ஒன்றை மேற்குலகம் ஆதரித்து இன்று ஆட்சியிலும் இருத்தியுள்ளது.

 

அதே போல் ஆப்கானிஸ்தானில்..! சிரியாவிலும் அதற்கான முயற்சி நடக்கிறது.

 

அதேபோல் பாகிஸ்தானைப் பலவீனப்படுத்த பங்களாதேசை உருவாக்கியது இந்தியா.

 

காலமாற்றமும்.. சிங்களத்தின் இராஜதந்திர உறவுகளும்.. பூகோள அரசியல் நிலைப்பாடுகளும்... பொருண்மியமும்.. மாறும் போது எங்களை பிரிக்க முயல்பவர்கள்.. ஒன்று சேர்க்கவும் முயல்வார்கள். மறுதலையும் உண்மை. அவர்களுக்கு முன் நாம் பலமுள்ளவர்களாக நின்றால்.. தான் இது சாத்தியம். அவர்கள் எம்மை ஆதரிக்க முயல்வார்கள்.

 

பலமாக நிற்க எமக்கு ஒரு உறுதியான கொள்கை அவசியம். அதற்கு நியாயம் அவசியம். நாம் நியாயத்தின் அடிப்படையில் மேற்படி கோரிக்கையை வைத்து நிற்கின்ற போது.. உலகம்.. தனக்கு தேவையான நேரத்தில் எம்மை அரவணைக்க என்றாவது அணைக்க முயலும். ஆனால் எதுவுமே இல்லாமல் இருந்தால்.. எதிரிக்குத்தான் கூடுதல் அனுகூலம்.

 

எல்லோரையும்.. ஒன்று சேர்க்கிறது என்றது எங்களில் மட்டுமல்ல.. எல்லா மனிதரிலும் கொஞ்சம் கடினமான செயலே. இயன்றவரை ஒன்றாக உள்ளவர்களை அப்படியே தக்க வைப்பதும்.. ஒன்று சேர்க்க தொடர்ந்து முயல்வதும் தான் நன்று. மாறுபட்ட.. மக்களுக்கு உபயோகமற்ற நிலைப்பாட்டில் நிற்பவர்களை ஒன்று சேர்த்து.. பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்வதிலும் அவர்களை தூர வைப்பது நன்று.

 

இப்படியான விடயங்கள்.. முன்னரும் சிலாகிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது இன்றைய சூழலுக்குள் இதனை எப்படி பார்ப்பது.. பயன்படுத்த வாய்ப்புள்ளதா.. என்று ஆராய்வது தவறில்லைத் தானே. என்றோ ஒரு நாளைக்கு இது நடந்து தானே ஆகப்போகிறது..!

 

முன்னரும் ஜோடான் மற்றும் சில நாடுகளின் ஆதரவோடு புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யப் போகின்றனர் என்று சந்திரிக்கா அம்மையார் ஜெயசிக்குறு காலத்தில்.. ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருந்தார். அப்போது கரிகாலன் போன்றவர்கள் தென்னாபிரிக்காவில் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

 

அன்றிருந்த சூழல் வேறு. இன்றுள்ள சூழல் வேறு. அன்று தமிழகம் மெளனம் காத்தது. இன்று அது உணர்வு கொண்டு எழுந்து நிற்கிறது. அன்று அண்டைவிட்டு எங்கோ போக வேண்டி இருந்தது எமக்கு ஆதரவு தேடி. இன்று அண்டை அயலே எமக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இந்த நிலைகள் சாதாரணமானவையல்ல..! இவை அரிய சந்தர்ப்பங்கள். நாளை எதிரிகள் இதனை என்னென்ன திட்டங்கள் தீட்டி சீரழிக்கப் போகிறார்களோ தெரியாது. அதற்குள் நாம்.. வழமையாக உள்ள பெட்டிக்கு வெளியில் சென்றும் சிலவற்றை சிந்திப்பது சிலாகிப்பது அவசியம்..! அந்த வகையில் தான் இந்தப் பகிர்வு.

 

எனக்கென்னவோ.. நாம் எமக்குள் உள்ள சிறு பிளவுகளை பெரிசாகக் காட்டி.. அரிய சந்தர்ப்பங்களை தவறவிடுறமோ என்று தோன்றுகிறது. தேசிய தலைவர் எல்லோரும் ஒன்றானால் தான் போராடுவன் என்றிருந்திருந்தால் ஒரு de facto நிலையில் கூட தமிழீழத்தை நாம் உலகிற்கு அடையாளப்படுத்தி இருக்க முடியாது.

 

நாம் இல்லாததைக் கேட்கவில்லை. இருந்ததிற்கான நிரந்தர இருப்பையும் அங்கீகாரத்தையுமே உலகிடம் கோரி நிற்கிறோம். இதற்கு எல்லா தமிழரும் வரிசை கட்டி வரவேண்டும் என்றில்லை. பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதும். அது இருக்கிறது.  :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.