Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கூட்டமைப்பு சவால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.

இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது என்பதனாலேயே தொடர்சியாக அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளாமல் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

"வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனாலோ தொடர்ந்து அரசாங்கம் வட மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கின்றது. அத்துடன் இந்திய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆகியவற்றுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறியே வட மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நடக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் வட மாகாண சபை தேர்தல், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல் ஆகியன உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த வாக்குறுதிகளுக்கு எதிராக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக நடக்காவிட்டால் எப்படி செப்டம்பரில் வட மாகண தேர்தல் நடத்த முடியும், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். இதனால் வட மாகாண தேர்தலை நடத்தாமல் தொடர்நது இழுத்தடிப்பு செய்யவே இந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உடன்படிக்கையினால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் இந்த உடன்படிக்கை பேச்சுக்கள் நிறைவடைய சுமார் இரண்டு மாதங்கள் தேவைப்படும்.

ஆனால் இந்த முறை நான்கு நாட்களுக்குள் நிறைவடைந்துவிட்டது. இதனால் இந்த ஒப்பந்தத்தில் குளறுபடிகள் உள்ளன என தெரியவந்துள்ளது. இதனால் மீண்டும் இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையிலான சம்பள உயர்வினை வழங்குமாறு கோரிக்கைவிடுக்கிறோம்" என்றார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/63542-2013-04-10-09-26-34.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்களும் பல தடவ சொல்லி டாங்க வைக்கிற தெண்டு.  UN நில யே சொல்லிட்டாங்களாம் பிறகும் சவால் எண்டா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.