Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் விட்டுக்கொடுப்புக்களால் அதிகம் பாதிப்படைந்தவர்கள

Featured Replies

இந்தியாவின் விட்டுக்கொடுப்புக்களால் அதிகம்

பாதிப்படைந்தவர்கள் தமிழ்மக்களே!

-இதயச்சந்திரன்-

அன்ரன் பாலசிங்கம் வழங்கிய செவ்வி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. பேட்டிக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிய தலைப்புத்தான் விவாதத்திற்குரியது. ராஜீவின் கொலையை புலிகள் ஏற்றுக்கொண்டு அதற்கு மன்னிப்புக் கோருவதாக பாலசிங்கம் கூறாத விடயத்தை திரிபுபடுத்தி, இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அப்பேட்டியில் சம்பவத்திற்கு அவர் வருத்தம் (சுநபசநவ) தெரிவித்தது உண்மை. ஆனாலும், வருத்தம் தெரிவிப்பவர்களை சம்பவத்திற்கு பொறுப்பாளி ஆக்குவது மடமைத்தனம். இதை ஊதிப் பெரிதாக்க வேண்டிய தேவை இந்தியாவிலுள்ள சில சக்திகளுக்கு அவசியமாகவுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தன்னியல்பாக எழுந்துள்ள தமிழ்த் தேசிய உணர்வெழுச்சியின் வீரியத்திற்கு 'வேகத் தடை" (ளுpநநன டீசநயம) போடுவதற்கு சோடிக்கப்பட்ட விடயம் போல் இதனை நோக்க வேண்டியுள்ளது.

சிலவேளை, தாழப்பறக்கும் விமானங்களைக் கண்காணிக்கும் ராடர்கள் (சுயனயச) இரண்டினை சிறிலங்காவிற்கு வழங்கும்போது எழும் தமிழ்நாட்டு எதிர்ப்பலைகளை தணியச் செய்யவும் இப்பிரசார உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதேவேளை 'தெதெல்கா" இணையத்தளம் அம்பலப்படுத்திய றோ ஒட்டுப்படைகளுடனான உறவுகளினால் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்யவும், அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியினை இவர்கள் நாசூக்காகக் கையாண்டிருக்கலாம்.

இருப்பினும் ஈழத்தமிழருக்கும் இந்தியாவிற்குமிடையேயான உறவுகளைச் சிதைப்பதற்குச் சில சக்திகள் உள்ளும், புறமும் வேகமாக இயங்குகின்றன. மேற்குலக நாடுகள் பல விடுதலைப் புலிகளைத் தடைசெய்த நிலையில், இந்தியாவின் தயவை விடுதலைப் புலிகள் எதிர்பார்த்து நிற்பது போல் ஒரு தோற்றப்பாட்டினை உருவாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட கால வரலாற்றில் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளைப் புறந்தள்ளி தமது சொந்த நலனிற்காக போலிச் சமரசத்தினை எவருடனும் எப்போதும் ஏற்படுத்தியதில்லை. இந்த உறுதி தளரா இயங்கு நிலைதான் புலிகள் தொடர்பான நிலைப்பாட்டில் இந்திய பிராந்திய நலனிற்கு உடன்படாத விடயமாகவுள்ளது.

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு குண்டுகள், வீசுவதை நிறுத்தக் கோரும் இந்தியா, அம்மக்கள் மீது உண்மையான கரிசனை கொண்டிருந்தால், அந்த இரண்டு றாடர்களையும் தமிழ்மக்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்.

பாதிப்பை ஏற்படுத்துவதனை பாதுகாத்துக் கொண்டு, பாதிப்புறுபவர்களுக்கு ஆறுதல் கூறும் இந்தியாவின் இரட்டை வேடம் குறித்து தமிழ் மக்கள் மிகுந்த வேதனையடைகிறார்கள்.

தமிழீழம் உருவானால், தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்குமென்று, இந்தியா தம்மக்களை நீண்டகாலமாக அச்சுறுத்துவது சிறு பிள்ளைத்தனமானது. வங்காள தேசம் உருவான போது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பிரிவினைவாதம் தலை தூக்கவில்லையே! மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் இணைக்கப்பட்டவர்கள்தான் (பங்களாதேஷ்) மேற்குவங்க கிழக்குப் பாகிஸ்தான் மக்கள்.

இங்கு வங்கதேச முக்திபாகினி விடுதலைப் போராளிகளுக்கு ஆயுதமும் ஆதரவும் வழங்கிய இந்தியா, பாகிஸ்தானைப் பலவீனமாக்கவே பிரிவினையை ஆதரித்தது. இப்பிரிவினையை ஆதரித்த இந்தியா, காஷ்மீரில் தனியரசு அமைவதை எதிர்க்கிறது. ஏனெனில் காஷ்மீரானது இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டால் அது இயல்பாகவே பாகிஸ்தானுடன் ஒட்டிக்கொள்ளும். அவ்வாறான செயற்பாடு, பாகிஸ்தானின் பூகோள இராணுவ நிலைசார் பலத்தினை அதிகரிக்கலாம். வங்கதேசத்தை இழந்த பாகிஸ்தான், காஷ்மீரைப் பெறுவதன் மூலம் பிராந்தியத்தில் இராணுவச் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. வங்கதேசத்தை பொறுத்தவரை அந்நாடானது புவியியல் ரீதியாக பாகிஸ்தானுடன் நிலத்தொடர்பற்ற நாடாக இருப்பது இந்தியாவின் பிரிக்கும் தந்திரத்திற்கு அனுகூலமாகவும் அமைந்துவிட்டது.

இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்கள் மீது காட்டும் பிரிவென்பது இந்தியாவின் பிராந்திய இராஜதந்திர காய்நகர்த்தலுக்கு உட்பட்டே வகுக்கப்பட்டது. இலங்கை அரசினைப் பணிய வைக்கவும், வெளிச்சக்திகளின் ஆதிக்கம் உட்புகாமல் தடுக்கவுமே, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை இந்தியா கையிலெடுத்தது. ஆனாலும், இப்போராட்ட நீண்டகால பின் புலத்தினையும், அடக்குமுறையின் ஆழமான வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும். தமிழ் மக்களின் அகம் சார்ந்த தர நிலை மாற்றத்தினையும் இந்தியா சரிவர புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசுடன் படைவலுச் சமநிலையை மேலும் விடுதலைப் புலிகளே, இன்னமும் புரியாத புதிராகத் தோற்றமளிக்கும் ராஜீவ்காந்தி கொலையுடன் இணைத்து, பேசப்படும் பொருளாகக் கையாள்வது இன்றைய கால கட்டத்திற்குப் பொருத்தமற்றது.

தமிழீழ அரசு உருவாவதன் மூலம் தமது பிராந்திய நலன் பாதுகாக்கப்படுமென்று கருதினால் மட்டுமே இந்தியாவானது, ராஜீவ் கதையை இடைநிறுத்தும். அதுவரை மேற்குலகு மற்றும் சீனா, பாகிஸ்தானின் பிராந்திய ஊடுருவல்களை கண்காணிக்கும் பணியை மட்டுமே செய்யும்.

தமது பிராந்திய நலன் பேணுவதற்கான சிறிலங்காவிற்காக இந்தியா செய்த விட்டுக்கொடுப்புக்கள் அதிகம். இதனால் மிகவும் பாதிப்புற்றவர்கள் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள்தான்.

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் நாடற்றவரானார்கள். இவர்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படாமல் மலேசியாவிற்கோ அல்லது கென்யாவிற்கோ சென்றிருந்தால் தற்போது மனித வாழ்விற்கான அடிப்படை வசதிகளோடாவது வாழ்ந்திருப்பார்கள்.

இலங்கையிலுள்ள இரு பெரும் கட்சிகளுக்குள்ளே ஆட்சியமைவது தொடர்பான அதிகாரப் போட்டி உருவாகும்போது, மலையக தலைவர்களின் ஒத்துழைப்பினை தம் சார்பான அரசிற்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்தியாவின் மறைமுக காய்நகர்த்தல்கள் இடம்பெறுகின்றன.

இலங்கைக்கு இராணுவ ரீதியிலான உதவிகளை தொடர்ந்து வழங்கும் இந்தியா, மலையக இந்திய வம்சாவளி தமிழர்களின் பொருண்மிய மேம்பாட்டிற்கோ அல்லது அவர்களின் வாழ்வாதார உயர்விற்கோ பாரிய உதவியாக எதைச் செய்திருக்கிறது?

அம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மலையக நாடாளுமன்ற தலைமைகளைப் பயன்படுத்தி, அரசுகள், கவிழாமல் தக்க வைக்கும் பணியை மட்டுமே செய்கிறது.

வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரிக்க முடியாத பிறப்புரிமைப் போரினை இந்தியா ஆதரித்து மாயாலோக மாகாண சபையை அமைத்து அவர்களை நட்டாற்றில் விட்டது. வடக்கு, கிழக்கு மாகாண சபையின் காணியுரிமை தொடர்பாக அரசுடன் பெரும் கருத்துப்போர் நடத்திய அன்றைய முதல்வர் வரதராஜப் பெருமாள் இறுதியில் 'ஈழப்பிரகடனம்" செய்து இந்தியா சென்றார். இந்தியாவை ஆதரித்தவர்களே இறுதியில் 'ஈழம்" தான் இறுதி முடிவென்று கூறியதை நினைவிற்கொள்ள வேண்டும்.?

இலங்கை - இந்தியா ஒப்பந்தம் ஏற்பட்டவுடன், முன்பு ஆதரித்த தேசிய விடுதலைப் போராட்டத்தையும் கைவிட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் வட கிழக்கிற்கு உரித்தான கச்சதீவையும் சிறிலங்காவிற்கு தானமாக வழங்கினார்கள். இதன் பிரதிபலனாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவது தினச் செய்தியாகி விட்டது.

ஆகவே இந்தியா தனது நலன் காக்க எடுத்த ஒவ்வொரு சிறிலங்கா தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளினாலும் மிகவும் பாதிப்படைந்தது தமிழ் மக்கள்தான். இந்தியாவிடம் கேட்பதற்கு இலங்கை தமிழ் மக்களுக்கு ஓராயிரம் கேள்விகள் உண்டு.

பரஸ்பர நலனென்பது இருவழிப்பாதையைக் கொண்டது. தற்போதைய கால கட்டமானது இந்தியாவின் ஒரு வழிநலன் பாதையை மாற்றியமைக்கும் காலத்தின் தேவையை உணர்த்தி நிற்கிறது. இந்தியா ஈழத்தமிழர் உறவினை சீர்குலைக்க இலங்கை அரசு கையாளும் தந்திரோபாயங்களை புரிந்தும் புரியாதது போல் வேடமிடும் நாட்களை நீடிக்க இந்தியா விரும்பினால், ஏனைய பிராந்திய நலன் பேணும் சக்திகளின் ஆதிக்கம் மேலோங்கும்.

இந்திய நிலைப்பாடானது வங்கதேசம் உருவான காலகட்டத்தையும், தமிழீழம் உருவாகும் காலகட்டத்தையும் வௌ;வேறு கோணங்களில் அணுகுகிறது. தமிழீழம் உருவானால், தமிழ்நாட்டில் பிரிவினை வளருமென்று கூறும் காரணத்தைவிட, தென்னிலங்கையில் தமக்கு எதிரான சக்திகள் தளமமைத்து விடுமோவென்கிற பயம் அதிகமாகக் காணப்படுகிறது.

தமிழீழம் தமது பிராந்திய நலனிற்கு மாறாகச் செயற்படாதென்பது இந்தியாவிற்குத் தெளிவாகப் புரியும். இருப்பினும் ஒன்றிணைந்த இலங்கையில் வெளியாளரின் தலையீட்டினை மட்டுப்படுத்துமென இதுவரை காலமும் நம்பியிருந்தது ஆயினும் இந்தியா விரும்புவதுபோல் எதுவுமே நடைபெறுவது போல் தெரியவில்லை. க.வே.பாலகுமாரன் அடிக்கடி கூறுவது போல், நீங்கள் அந்தப் பக்கமா இல்லையேல், இந்தப் பக்கமாவென இந்தியாவை நோக்கி கேள்வி எழுப்பும் காலம் வந்துள்ளது.

ஆரம்பத்தில் குழுவாகி பின் கூட்டமாகி இறுதியில் மக்கள் இயக்கமாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும். விடுதலைப் புலிகளை உருவாக்கி வைத்திருக்கும் தனியரசுக்கான அடிக்கட்டுமானங்களும் அதனோடிணைந்த தேச உட்கட்டுமாணங்களையும் முழு சர்வதேசமும் உணர்ந்துள்ளது. இனிப் பின்னோக்கி நகரும் சாத்தியப்பாடுகள் மிக அரிது. தற்போதைய களநிலைமைகள் 83 களை நோக்கி பின்தள்ளப்பட வேண்டுமென எண்ணுவதும், அதற்கிணைவாக பழைய தந்திரோபாயங்களைக் கையாண்டு, ஏனைய தமிழ்க் குழுக்களை தட்டிக்கொடுத்து உசுப்பேற்றுவதுமான செயற்பாடுகள் இனி எவ்விதத்திலும் இந்தியாவிற்கு சாதகமான நிலைமைகளை உருவாக்கும் வாய்ப்பினைக் கொடுக்காது.

இந்தியா விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஒன்றிணைந்த இலங்கை பற்றிய பிடிவாதப் போக்கிலிருந்து விடுபட வேண்டிய நிலைக்கு நிச்சயம் வரும்.

அப்படி வரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கான காலச் சூழ்நிலை நிஜமாகிக் கொண்டு வருவதனை அங்குள்ள தமிழ் தலைமைகள்தான் இந்தியாவிற்கு புரிய வைக்க வேண்டும். காலத்தைத் தவற விட்டதால், கண்டவனெல்லாம் கதவைத் தட்டிக் களைத்து உடைத்துக் கொண்டு வரமுன், இந்தியா தனது தூக்கத்தையும், நிஜமற்ற கனவுகளையும் கலைக்க வேண்டும். பலமிக்க தலைமையைக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்கள் இந்தியாவிற்கு கூறும் கனதியான செய்தியும் இதுதான்.

அண்மையில் வட இந்தியப் பிரஜை ஒருவர், இந்தியா சுதந்திரம் பெற அஹிம்சை வழியில் போராடுவது போன்று நீங்கள் ஏன் அந்த வழிமுறையைக் கையாளக் கூடாது என்று கேட்டார்.

அஹிம்சை வழியில் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்தியாவிற்கு அணு ஆயுதம் எதற்கு? தமிழ் மக்களும் அஹிம்சை வழியில் போராடிக் களைத்தே, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அன்று உங்களிடம் அணு ஆயுத பலம் இல்லாத நிலையில் அகிம்சை வழியைக் கையெடுத்தீர்கள். பின்பு பாகிஸ்தான், சீனாவுடன் யுத்தம் புரியும் போது அகிம்சை பாதையை கைவிட்டு ஏன் ஆயுதப் போரில் ஈடுபட்டீர்கள். அதற்கான இராணுவ பலம் இருந்ததுதான் காரணியாகவுள்ளது. அதுவே எம்மக்களிற்கும் பொருந்துமென்றேன். இந்தியப் பிரஜை மௌனமானார்.

உலக மகா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடமிருந்து எவ்வாறு இந்தியா தனது விடுதலையை அகிம்சை வழியில் வென்றெடுத்ததோ, அவர்கள் வழியில் பல காலம் போராடிய தமிழ் மக்கள் இறுதியில் ஆயுதமேந்தும் போராட்ட வழிக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள். மாவோ கூறியது போல் நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டுமென எதிரியே தீர்மானிக்கின்றான்! இந்தக் கரும்புலி என்கிற உயிராயுதத்தைத் தெரிவு செய்ததும் மீன் பிடிப்படகில் துடுப்பைப் பிடித்தவர்களை துப்பாக்கி ஏந்த வைப்பதும் கலப்பையை பிடித்தவனை கலாஸ்னிகோ (யுமு 47) தூக்க வைத்தவனும் இதே எதிரிதான். அகிம்சை என்பது இயலாதவனின் கடைசி ஆயுதமென்று உணர வைத்தவனும் இதே எதிரிதான்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (09.07.06)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.