Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிடம் கோட்டபய விசாரணை நடத்தலாம்: ஹரிஹரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவிடம் கோட்டபய விசாரணை நடத்தலாம்: ஹரிஹரன்
வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013 10:37 0 COMMENTS
விடுதலைப்புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சியளித்தது குறித்து சர்வதேச நாடுகள் விசாரிக்கவேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அப்படியான விசாரணையை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷேவே நடத்தலாம் என்றுஇந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் இறுதிப்போரின் போது நடந்த போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரும் சர்வதேச நாடுகள், அப்படியானதொரு விசாரணையை, இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியளித்த காலத்திலிருந்து துவங்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
கோட்டபயவின் இந்த கோரிக்கையானது, இலங்கைக்குள்ளும் சர்வதேச ரீதியிலும ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு மீது அதிகரித்துவரும் அழுத்தங்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும் என்று ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
 
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மட்டுமல்லாமல், இலங்கையின் வேறுபல தமிழ்ப் போராளி குழுக்களுக்கும்கூட 1980களில் இந்திய அரசு பயிற்சியளித்ததாக தெரிவித்த ஹரிஹரன், அந்த பிரச்சனையெல்லாம் 1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார்.
 
ஆனால் இப்போது சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபை கோருவது 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவேண்டும் என்று தானே தவிர, 25 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துபோன விவகாரங்களை அல்ல என்றும் ஹரிஹரன் தெரிவித்தார்.
 
அவற்றையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று உண்மையிலேயே கோட்டபய ராஜபக்ஷே விரும்பினால் ஐ.நாவிடம் அதற்கான கோரிக்கையை முறையாக வைக்கலாம் என்றும், ஒருவேளை ஐ.நாவோ, சர்வதேச நாடுகளோ இதை விசாரிப்பதற்று மறுத்தால், இலங்கை அரசாங்கமே அப்படியானதொரு விசாரணையை நடத்தலாம் என்றும் தெரிவித்தார்.http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/63640-2013-04-11-05-07-54.html

 

இந்த ஹரிஹரன் போன்றவர்கள் நேற்றுவரை மகிந்த கூட்டத்திற்கு ஆதரவை தந்தவர். இவர்களின் கொள்கையும் அணுகுமுறையும் தோற்றுவிட்டது, ஆனால் அதை ஏற்கும் பக்குவம் இவர்களிடம் இல்லை.

 

அதேவேளை நாம் இந்த மாற்றங்களை சாதகமாக எடுக்கும் அதேவேளை இவர்களை நம்பவும் கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹரிஹரன் தோத்துப்போன எழுத்தாளர், வெண்ட எழுத்தாளர்கள் தான் யார் யாரை விசாரிக்க வேணுமெண்டு முடிவெடுக்க வேணும்.

சாத்தரியார்...... கூட தோத்து போனார்!

........... தான் உதுக்கு சரியான ஆள். :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.