Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பற்பசைகளை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை!!

Featured Replies

பற்பசை இல்லாத ஒரு வாழ்க்கையைக் குறித்து நம்மால் சிந்திக்க கூட முடிவதில்லை. சுகந்தமான சுவாசத்திற்கும், வலுவான பற்களுக்கும் நம்மில் பெரும்பாலோர் பற்பசைகளையே நம்பியுள்ளனர். ப்ரஸ் மற்றும் டூத் பேஸ்டுகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் இன்றைய காலக்கட்டத்தில் செலவிடப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த ஏராளமான பற்பசைகளும், ப்ரஸ்ஸுகளும் நமது சந்தையை ஆக்கிரமித்துள்ளன.
 
நமது ஒவ்வொரு நாளும் பற்பசையில்இருந்துதான் துவங்குகிறது. “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி” என்ற பழமொழிக்கேற்ப முன்பெல்லாம் நமது முன்னோர்கள் ஆலங்குச்சியையும், வேப்பங்குச்சியையும் பல்துலக்க பயன்படுத்தினர். உமிக்கரி, உப்பு, இடித்த மிளகு சேர்த்து பல் தேய்த்த காலமும் உண்டு.
 
மினி ஸ்க்ரீனில் தொடர்ந்து காட்டப்படும் டூத் ப்ரஸ், பேஸ்ட் விளம்பரங்கள் நம்மை வலுக்கட்டாயமாக வாங்கத் தூண்டுகின்றன. பற்கள் மற்றும் ஈறுகள் பலம் பெற என ஒரு விளம்பரம், சுகந்தமான சுவாசத்திற்க்கு இன்னொரு விளம்பரம், பற்கள் பளீரிட மற்றொரு விளம்பரம் என விளம்பரங்கள் அளிக்கும் வாக்குறுதிகளால் அடிக்கடி நாம் ப்ராண்டுகளையும் மாற்றி வருகிறோம்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலவே தான் டூத் பேஸ்டும். நீங்கள் விளம்பரங்களில் காண்பதுபோல ப்ரஸ் முழுக்க பேஸ்டை நிரப்பிவிட்டா பல் துலக்குகின்றீர்கள்? அவ்வாறெனில் நீங்கள் உங்கள் பற்களுக்கு தீங்கிழைக்கின்றீர்கள் என்பதுதான் உண்மை. காரணம் ஃப்ளோரைடும், இதர இரசாயனப் பொருட்களும் கலந்த டூத் பேஸ்டை ப்ரஸ்ஸில் ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்தாலே போதுமானது. இவ்விடத்தில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் டூத் பேஸ்டின் அளவில் அல்ல, மாறாக எவ்வாறு பேஸ்டை உபயோகின்றீர்கள் என்பதாகும்.விளம்பரங்கள் உங்களை வழி தவறச் செய்துவிடும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் நல்லது.
 
ஃப்ளோரைடு (Floride): ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம் வசிக்கும் இடத் தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த அறிவுரை மாறுபடுகிறது. ப்ளோரைடு இயற்கையாகவே கிடைக்கின்ற ஒன்று. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
 
1997 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
“WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately.”
 
ஒரு முறை பல் துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும் என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
 
அதிக அளவு ப்ளோரைடு உபயோகம் ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவு ஏற்பட காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக் கூடும்.
 
பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1000ppm அளவிற்கு மிகாமலும், சிறுவர்களுக்குக்கான பற்பசையில் 500ppm அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ப்ளோரைடு பற்பசையினை உபயோகிக்கும் பொழுது ஒரு பட்டானி அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொண்டு பல்துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
 
ப்ளோரைடு பற்பசை உபயோகிக்கும் பொழுது அது தொண்டைக்குள் செல்லாமல் துப்பி விடுவது நல்லது. சிறுவர்களுக்கு பிடித்தமான சுவைகளில் பற்பசைகள் தயாரிக்கப்படுவதால் சிறுவர்கள் இதனை விழுங்காமல் பார்த்துக் கொள்வது கடினம்.
 
ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்திருக்கிறது. இது பற்களை வலுவானதாக ஆக்குகிறது.
 
பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகையில் இல்லை. சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக் கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
 
இது குறித்து வல்லுநர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ப்ளோரைடு நல்லதா கெட்டதா என்று காரசாரமாக விவாதிக்க இரண்டு புறமும் வல்லுநர் அணிகள் இருக்கிறார்கள்.
 
ப்ளோரைடு பற்பசை நல்லதே என்று கூறும் வெப் தளங்கள்:
www.doctorspiller.com/fluoride.htm
 
ப்ளோரைடு பற்பசை மிக ஆபத்தானது என்று கூறும் வெப் தளங்கள்:
 
ப்ளோரைடு பற்றிய பக்க விளைவுகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக ‘ப்ளோரைடு செயல் கூட்டணி’ (Fluoride Action Network) என்ற அமைப்பு செயல்படுகிறது.
 
தற்போது ப்ளோரைடு கலவாத பற்பசைகளே இல்லை என்ற நிலை உள்ளது. சில ஆயுர்வேத பற்பசைகளும், இயற்கை மூலிகை பற்பசைகளுமே ப்ளோரைடு கலவாத பற்பசைகளாக உள்ளது.
 
பற்பசைகளில் ப்ளோரைடு உள்ளதா என எப்படி அறிவது?
பற்பசை பெட்டியிலும் ட்யூபிலும், சிறிய எழுத்துக்களில் ‘FOAMING FLUORIDATED TOOTHPASTE’ என்று எழுதப்பட்டிருக்கும். மேலும், ‘ contains 1000PPM of available fluoride’ என்றும் எழுதப்பட்டிருக்கும்.
 
டூத் பேஸ்டில் இதர சேர்மானங்கள்:
*பற்களை பாலிஷ் செய்யவும், சுத்தப்படுத்துவதற்குமான Abrasives
*நுரையை உருவாக்கும் டிடர்ஜெண்டுகள்
*ஈரப்பதத்தை தக்கவைக்கும் humectant
*நீண்டகாலம் கெடாமலிருக்க preservatives
*நிறத்தை அளிக்கும் கலர்கள்
*சுவை அளிக்கும் flavours
*நறுமணத்தை வழங்கும் fragrance
*கால்ஸியம்
*பாஸ்பரஸ்
*மெக்னீசியம்
*வைட்டமின் டி
 
பல்தேய்க்க எவ்வளவு பேஸ்ட் தேவை? முன்பு குறிப்பிட்டதைப்போலவே ஒரு பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதுபோலவே பலரும் அரைமணி நேரம் பல் தேய்ப்பதில் செலவழிக்கின்றனர். இது வீணானது. நேரத்தையும் கொலை செய்வதாகும். ஆகவே 2 அல்லது 3 நிமிடங்களே போதுமானது. காலையில் உபயோகிக்கும் பேஸ்டின் அளவை விட இரவில் சற்று அதிகம் உபயோகிக்கலாம். ஏனெனில் காலையில் பற்களை அழகாக்கவும், இரவில் அழுக்குகளைப் போக்கவும் பற்களை துலக்குகிறோம். ஒவ்வொருவரின் வயதைப் பொறுத்து பேஸ்டின் அளவு மாறுபடும். குழந்தைகளுக்கு பெரியவர் பயன்படுத்துவதை விட குறைந்த அளவு பயன்படுத்தினால் போதும். கூடுதல் நேரம் பற்களை துலக்குவதால் பற்கள் பளிச்சிடாது.
 
பேஸ்டில் பிரச்சனைகள்:
டூத் பேஸ்டில் அடங்கியிருக்கும் சேர்மானங்களை குறித்து மேலேக் கண்டோம். இவற்றில் பல இரசாயனங்கள் கலந்தவையாகும்.
 
உதாரணமாக நுரை வருவதற்கு சேர்க்கப்படும் டிடர்ஜெண்ட், நிறத்தை அளிக்கும் கலர்கள் ஆகியவற்றை அதிகமாக உபயோகிப்பதால் பற்களின் எனாமல் இழந்துபோகும். மேலும் பற்கள் கூசவோ அல்லது புளிப்புத்தன்மையை உணரவோ செய்யும். இதன் மூலம் சிறியவயதிலேயே பற்களுக்கு பாதிப்பு உருவாகும்.
 
சரி இனி மேல் பேஸ்ட் வாங்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை!
 
1.வண்ண நிறங்களை கொண்ட பேஸ்டை விட வெள்ளை நிறத்திலான பேஸ்டை வாங்குங்கள்!
2.ஃப்ளோரைடு குறைந்த பேஸ்டை தேர்வுச்செய்யுங்கள்
3.குழந்தைகளுக்காக வாங்கும் பேஸ்டில் ஃப்ளோரைடு இல்லை என்பதை உறுதிச் செய்யவும்.
4.ஜெல் பேஸ்டுகள் பற்களின் தேய்மானத்திற்கு காரணமாகும் என்பதால் க்ரீம் பேஸ்டுகளே நல்லது.
5.பற்கள் சொத்தையாக காரணமாகும் இரசாயனங்கள் அடங்கியதுதான் அப்ரேஸிவ். ஆகவே இதன் அளவு குறைந்த பேஸ்டை வாங்குங்கள்.
6.சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியன அடங்கிய பேஸ்டுகளை தவிருங்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, நல்ல பதிவு 

 

  • கருத்துக்கள உறவுகள்

புளோரைட் பற்களுக்கு அவசியமான அதே நேரம் அதிகமானால் பற்களைப் பாதிப்படையச் செய்யவும் கூடியது. யாழ்ப்பாண நீரில் புளோரைட் இலங்கையின் ஏனைய பகுதிகளை விடவும் அதிகம் (இதனால் பல் வியாதிகளும் அதிகம்). இதனால் யாழ்ப்பாணத்தில் புளோரைட் இல்லாமலே பற்பசை பாவிக்கலாம். ஆபிரிக்காவின் தான்சானியா என்ற நாட்டில் மிக அதிகமான புளோரைட் மண்ணிலும் நீரிலும் இருப்பதால் அங்குள்ள ஏராளமான மக்களுக்கு பற்கள் இள வயதிலேயே விழுந்து விடுமாம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் ஃபுளோரைட் உள்ள பற்பசையை... உபயோகிக்கும் படி பல்வைத்தியர்கள் அறிவுறுத்தினார்கள்.
இப்போது.... ஃபுளோரைட்டின் அளவு குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்துள்ளதை பார்த்து வாங்கும் படி வலியுறுத்துகின்றார்கள்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.