Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலரும் புத்தாண்டிலாவது அரசு தமது காடைத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தமிழருக்கான தீர்வை வழங்க வேண்டும் - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sampanthan-seithy-2-150.jpg

மலரும் தமிழ் சிங்கள புத்தாண்டிலாவது இலங்கை அரச தரப்பினர் தமது காடைத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் தமிழருக்குத் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேவேளை, தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் எனவும், இறைவன் ஒருபோதும் தமிழரைக் கைவிடமாட்டார் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் சம்பந்தன் எம்.பி. நேற்று தெரிவித்தவை வருமாறு:

  

இலங்கை அரசிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் நியாயமான கோரிக்கைகளையே நாம் முன்வைத்துள்ளோம். இந்நாட்டில் நாம் சுதந்திரமாக தமிழ்ப் பிரஜைகளாக வாழ விரும்புகின்றோம். வன்முறைகளை நாம் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால், எமது கோரிக்கைகளை விருப்பங்களை முறியடிக்க பல்வேறு சதி வேலைகளில் இந்த அரசு ஈடுபட்டு வருகின்றது. காடையர் கும்பல்களைக் களமிறக்கி தமிழ் மக்கள் மீதும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், தமிழருக்காகக் குரல் கொடுக்கும் ஊடகங்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. தமிழர்களை இந்த அரசு வலிந்து வன்முறைக்கு இழுக்கின்றது. ஆனால், நாம் பொறுமையுடன் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நிற்கின்றோம். கடந்த வருடங்களில் இலங்கை அரசு தமிழர்களின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் காடைத்தனத்தில் ஈடுபட்டதனால்தான் சர்வதேச வலைக்குள் சிக்கித் தவிக்கின்றது.

 

எனவே, மலரும் தமிழ் சிங்கள புத்தாண்டிலாவது இலங்கை அரச தரப்பினர் தமது காடைத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் தமிழருக்குத் தீர்வை வழங்க முன்வரவேண்டும். அதேவேளை, தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க அரசின் அடிவருடிகளினால் மேற்கொள்ளப்பட்டும் சதி வேலைகளுக்குள் எமது மக்கள் சிக்கக்கூடாது. தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். இறைவன் எமக்கு உதவி செய்வார். இறைவன் ஒருபோதும் தமிழரைக் கைவிடமாட்டார் என்று தெரிவித்தார் சம்பந்தன் எம்.பி.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=80357&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அறிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.