Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எம்.பிகளுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடடிதம் இது

Featured Replies

இந்திய எம்.பிகளுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடடிதம் இது

 

88837651index.jpg2013-04-12 22:29:07 இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய சர்வகட்சிப் பாராளுமன்ற தூதுக்குழுவினருக்கு! அன்புடையீர்,

 
இவ்வறிக்கை 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் ஈடுபாடு கொண்ட ஈழத்துக் காந்தி என்றும், தந்தை செல்வா எனவும் அழைக்கப்படும் சா.ஜே.வே. செல்வநாயகம் (இராணி வழக்கறிஞர்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகிய வீ.ஆனந்தசங்கரி ஆகிய என்னால் சமர்ப்பிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 125ஆவது பிறந்த நாளில் உருவாக்கப்பட்ட  ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாகிய யுனெஸ்கோ ஸ்தாபனத்தால் மதன்ஜீத்சிங் என்பவரது பெயரால் உருவாக்கப்பட்ட சகிப்புத்தன்மையையும் அகிம்சையையும் முன்னெடுப்பதற்கான 2006ஆம் ஆண்டுக்குரிய விருது எனக்குக் கிடைக்கப்பெற்றது.

இலங்கைப் பாராளுமன்றத்தில் 4 தேர்தல்களில் வெற்றிபெற்று மொத்தம் 17 வருடங்கள்  உறுப்பினராக இருந்துள்ளேன். இலங்கையும் இந்தியாவும் பிரச்சனைப்படாது ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்பதை பலவருடங்களுக்கு முன் காந்திஜி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அன்னாரது இக்கொள்கையை மிக்க வலுவாகக் கடைப்பிடிப்பவன் நான்.

இந்தியாவுக்கு இலங்கை பெருமளவில் கடமைப்பட்டுள்ளது. கலாசாரம், மொழி, மதம்  ஆகியவற்றோடு நாமெல்லோரும் ஒருகாலத்தில் அங்கிருந்து வந்தவர்களே! எமது தேவைகளுக்கு ஏற்ப குறிப்பாக தேசிய அனர்த்தங்கள் ஏற்பட்ட போதெல்லாம் உடன்வந்து உதவியதும் இந்தியாவே! முடிந்தவரை எமது பிரச்சினைகளை இந்தியாவின் வழிநடத்தலோடும் - உதவியோடும் தீர்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

இந்தியாவிற்கு சங்கடம் ஏற்படக்கூடிய நிலையை நாம் உருவாக்காது தவிர்க்க வேண்டும். தற்போது இந்தியாவில் நடக்கும் அசம்பாவிதங்களைத் தவிர்த்திருப்பதுடன் பல நாடுகளின் நல்லெண்ணத்தை இழக்கவும் அவற்றின் வெறுப்பைச் சம்பாதிக்கவும் வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

யுத்தத்தின இறுதிக்கட்டத்தில் நடந்தவை வெளியுலகிற்கு தெரியாது என்பதிலும்பார்க்க வெளியுலகிற்கு தெரியப்படுத்தவில்லை என்பதே உண்மை. அதனால் வெளியுலகும், புலம்பெயர்ந்த மக்களும், உள்ளுரில் அனேகரும் இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் யுத்தம் நடந்து அதில் அரசு வெற்றிபெற்று 4 ஆண்டுகளாக அரசு வெற்றிவிழா கொண்டாடுவது என்பதை மட்டுமே அறிந்திருக்கின்றனர்.

இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சகல மக்களுடன் மேலும் மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பட்ட துன்ப துயரங்கள், இழந்த இழப்புக்கள் பற்றி பெருமளவில் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பல மாதங்கள் இந்த நிலைமை நீடித்தமையால் மக்கள் அனைவரும் தம்மால் சுமக்கக்கூடியதைத் தவிர எஞ்சிய அனைத்தையும் இழந்துள்ளனர். இந்தக் காலத்தில் அரச துருப்புக்கள் முன்னேறிவரும் வேளையில் விடுதலைப்புலிகள் பின்வாங்கும்போது மக்களையும் பின்வாங்கச்செய்து இறுதியில் தொடர்ந்துபோக முடியாத இடமாகிய புதுமாத்தளன் என்ற இடத்திலும் அயற்கிராமங்களிலும் 4, 4½ இலட்சம் மக்கள் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள்.

இக்கால கட்டத்தில் அடிக்கடி இடம்பெயர்வது, தங்குவதற்கு முறையான வசதிகளின்றி விஷ ஜந்துக்கள் மத்தியில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இருபகுதிகளினாலும் ஏவப்பட்ட ஷெல் மற்றும் துப்பாக்கிக் குண்டுகளினால் பாதிக்கப்பட்ட மக்களில் 10மூ த்திற்குமதிகமானோர் தமது அவயவங்களை இழந்துள்ளனர். அனேகர் இறந்துமுள்ளனர். போதிய மருத்துவ வசதிகளின்றி தமது அவயவங்களை  இழந்தவர்களும் பலர். தமது காலைக்கடன்களை கழிப்பதற்கு ஆண்பெண் என்ற பேதமின்றி திறந்த வெளிகளையும், கடற்கரைகளையும், குறுங்காடுகளையும் உபயோகித்தனர். குடிப்பதற்கும் குளிப்பதற்கும் போதிய தண்ணீரின்றித் தவித்தனர். இருசாராரும் மாறிமாறித் தாக்குதல்களை மேற்கொண்டதனால் போதியளவு உணவுப் பொருட்கள் சென்றடையவில்லை.

அனுப்பப்படும் உணவு பெருமளவு குறைக்கப்பட்டது. பிள்ளைகளுக்கான பால்மா வகைகள், சீனி முதலியன இல்லாமலிருந்தது. வரிசையில் நிறுத்தி மக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. யுத்தம் முடிந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களில் அனேகமானோர் பட்டினியால் இறந்ததாக மரணவிசாரணை மற்றும் பிரேத பரிசோதனை மூலம் அறிய வந்தது. இங்கே குறிப்பிடப்படுபவை ஒரு சிறு பகுதியேயாகும். ஆனால் உண்மையான, உள்ளத்தை உருக்கும் துயரச்சம்பவங்கள் ஆயிரம் ஆயிரம்.

விசேடமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாவது.

தத்தம்  வீடுகளுக்கு மீளக்குடியமர அனுப்பப்பட்ட மக்கள் கூரையற்ற வீடுகளில் எதுவித தளபாடமும் இன்றி விட்டுச் சென்ற அனைத்தையும் இழந்து வாழ்கின்றனர். 6 மாதத்திற்குரிய உலர் உணவு சில தகரங்கள் போன்றவை வழங்கப்பட்ட போதும் வீட்டைக் கட்டி சமைத்து ஒழுங்காக சாப்பிடக்கூடிய நிலை 4 ஆண்டுகள் ஆகியபின்பும் இன்னும் சீர்செய்யப்படவில்லை. மக்கள் பசியாலும் பட்டினியாலும் துன்புறுகிறார்கள். எந்த வீட்டிலும் தினமும் இழந்த உறவுகளை எண்ணி அழுகைக்குரலே கேட்கிறது. பலதரப்பட்ட அங்கவீனர்களுடன் வாழும் மக்களின் எதிர்காலம் பற்றிய கவலை பல இல்லங்களில் தாண்டவமாடுகிறது. இரு கைகளையும் இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள், கண்ணை இழந்தவர்கள், உடம்பில் பலபகுதிகளில் தலை உட்பட சன்னங்களையும், ஷெல்துண்டுகளையும் சுமந்தபடி வாழ்பவர்கள் எதுவித வேலையும் செய்யமுடியாது ஏனையவர்க்கும் பாரமாக இருப்பவர்கள் என வயோதிபர்கள், பச்சிளம் பாலகர்கள் அனைவரும் அடங்குவர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பல்லாயிரக்கணக்கான விதவைகளும் அநாதைகளும் அடங்குவர். இருண்ட உலகில்வாழும் நிரந்தரமான ஊனமுற்றவர்களுக்கு எதுவித மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படாது அவர்களது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது.

தற்போது உதவுகிறவர்கள்கூட இல்லாத காலத்தில் இத்தகையோரைக் கவனிப்பதற்கு பொது அமைப்புக்களின் அல்லது அரசின் ஏற்பாடோ  எதுவுமில்லை.

யுத்தத்தால் ஏற்பட்ட அழிவு – அது சொத்தாக இருந்தாலும் சரி உயிரிழப்பாயினும் சரி – சம்பந்தப்பட்ட மற்ற இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில் அரசே பொறுப்பேற்க வேண்டும். கைப்பற்றப்பட்ட பெருமளவான தங்கம், பணம் என்பவற்றைக் கொண்டும், மேலதிகமாகத் தேவைப்படின் அரச பொறுப்பேற்று வீடற்றவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்தும், அல்லது திருத்திக் கொடுத்தும் உழவு இயந்திரம், மீன்பிடிப் படகுகள், உபகரணங்கள், தையல் மெஷின்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்ற வாழ்வாதார உதவிகளை வழங்கி உதவ வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், கொடுமையும் வார்த்தைகளில் அடக்கமுடியாது. இதுபோன்ற சம்பவங்கள் எந்தநாட்டிலும் எந்தக் கொடிய ஆட்சியிலும் நடந்ததாக வரலாறு இல்லை. இத்தனை அனர்த்தங்களையும் அனுபவித்த மக்கள் நரகலோகம் பற்றி என்ன கணிப்பு வைத்திருந்தார்களோ அதைவிட பல்மடங்கு மோசமான நிலைமையிலேயே யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் வாழ்ந்துள்ளார்கள். இழந்த சொத்துக்கள் அனேகமானவற்றை நஷ்டஈடுமூலம் மீளப்பெற முடியும் சில பொருட்களை கோடிக்கணக்கில் ஈடுசெய்தாலும் பெறமுடியாது.

வலைமதிக்க முடியாத பலதரப்பட்ட உறவுகளின் பிரிவை எண்ணி ஒவ்வொருவீட்டிலும் தினம் கேட்பது அழுகுரலே. நாடே திரண்டுவந்து ஒருபாவமும்செய்யாத எம்மக்களுக்கு ஆறுதல்கூற வேண்டிய நேரத்தில் சகோதர இனங்களுக்கு வாய்ப்பளிக்காது தொடர்ந்து துன்பத்தையே இவ்வரசு கொடுக்கிறது. இந்நிலையில் முழு அனுதாபத்தையும் மக்கள்மீது செலுத்தவேண்டிய நேரத்தில் அதற்கு மாறாக அவர்கள் மத்தியில் பிற இனமக்களைக் கொண்டுவந்து குடியேற்றுவதும் அவர்களின் பாரம்பரியமான வணக்கஸ்தலங்களிலிருந்து இரவோடு இரவாக விக்கிரகங்களை அகற்றி வேறு விக்கிரகங்களை அவ்விடத்தில் வைப்பதும், சகல உடமைகளும் பறிக்கப்பட்டு விரட்டப்பட்ட இஸ்லாமிய சகோதரர்களுடைய வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுவதும் சிறுபான்மை மக்களின் நிலங்களை அடாத்தாகப் பிடிப்பதும் மக்களின் துன்பநிலையை உணராமல் செய்யும் செயலாகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த பூமியிலிருந்த அத்தனை சொத்துக்களையும் இழந்து வேதனையால் துடிக்கும் அப்பாவி மக்களின் காணிகளை இல்லாத, ஏற்க முடியாத நொண்டிக் காரணங்களைக் கூறி அக்காணிகளைச் சுவீகரிக்க எடுக்கின்ற நடவடிக்கைகளைக் கண்டித்து தடுக்க உலக நாடுகள் முன்வரவேண்டும்.

இத்தனை அனர்த்தங்களையும் அதிகாரம் படைத்தவர்கள் நினைத்திருந்தால், மனம்வைத்திருந்தால் ஒரு கட்டளையோடு ஒருசில நிமிடங்களில் நிறுத்தியிருக்க முடியும்.

இந்திய முறையிலான அரசியல் தீர்வை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இலங்கை அரசை ஏற்குமாறு ஆலோசனை வழங்குமாறு தூதுக்குழுவினரை வலியுறுத்தி வேண்டுகிறேன்.

இத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட கடிதங்கள் சிலவற்றின் பிரதிகளை மேலும் தகவல்களை அறிவதற்காக இணைத்துள்ளேன்.

வீ. ஆனந்தசங்கரி

செயலாளர் நாயகம்

தமிழர் விடுதலைக் கூட்டணி

http://newjaffna.com/fullview.php?id=MTI0NjI=

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லைகடிச்சுக்கொண்டு பிரபாகரனுக்கு சப்போட் பண்ணியிருக்கலாமெல்லே......உந்த அனாவசிய கடிதத்துக்கும் தேவையிருந்திருக்காது

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லைகடிச்சுக்கொண்டு பிரபாகரனுக்கு சப்போட் பண்ணியிருக்கலாமெல்லே......உந்த அனாவசிய கடிதத்துக்கும் தேவையிருந்திருக்காது

 

தலையாட்டி பொம்மையா இருக்காமல் கடிதம் எழுதினதால தான் உந்தாளுக்கு அவோடு கிடைச்சது ... :)

  • கருத்துக்கள உறவுகள்

தலையாட்டி பொம்மையா இருக்காமல் கடிதம் எழுதினதால தான் உந்தாளுக்கு அவோடு கிடைச்சது ... :)

 

 

அவாட்டை என்ன கரைச்சோ குடிக்கிறது??   :lol:  :lol:

  • தொடங்கியவர்

தலையாட்டி பொம்மையா இருக்காமல் கடிதம் எழுதினதால தான் உந்தாளுக்கு அவோடு கிடைச்சது ... :)

வாணும் என்ன இன்னொரு பட்டம் ஈழத்து M.G.R என்றும் வைசுங்கா. கொடுத்தவனும் பெற்றவனும் ஒரே பள்ளியில் படித்த காங்கிரசுகள் தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.