Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் புதிய அதிபரை சந்திக்க மகிந்த ராஜபக்ச சீனாவிற்கு விஜயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவின் புதிய அதிபரை சந்திக்க மகிந்த ராஜபக்ச சீனாவிற்கு விஜயம். 
[sunday, 2013-04-14 09:02:21]
 
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இம்மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் புதிய அதிபராக ஜி ஜின்பிங் அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருடன் பேச்சுக்களை நடத்தவே சிறிலங்கா அதிபர் பெய்ஜிங் செல்லவுள்ளார். பொறுப்புக்கூறல் விவகாரம் மற்றும், பொருளாதார வீழ்ச்சி என்பனவற்றால், சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவிடம் இருந்து மேலதிக உதவிகளைக் கோர சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இழப்பினால், சிறிலங்காவின் ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது. இந்தநிலையில், சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதிலும், நலிந்து வரும் சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதித் துறையை காப்பாற்ற சீனாவிடம் இருந்து ஜிஎஸ்பி சலுகையைப் பெறுவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையில் ஆரம்பக்கட்டப் பேச்சுக்களும் நடத்தப்பட்டு, அதற்கு சீனத்தரப்பில் பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்தநிலையில், சிறிலங்கா அதிபரின் பயணத்தின் போது, இந்த விவகாரங்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

http://seithy.com/breifNews.php?newsID=80425&category=TamilNews&language=tamil

 குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இழப்பினால், சிறிலங்காவின் ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது. இந்தநிலையில், சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதிலும், நலிந்து வரும் சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதித் துறையை காப்பாற்ற சீனாவிடம் இருந்து ஜிஎஸ்பி சலுகையைப் பெறுவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
 

 

சீனாவே இன்னும்சம்பளம் குறைந்த நாடாக இருந்து ஆடைகள் உட்பட மலிவான பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையில் எவ்வாறு அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம்  :wub:

 

 

சில உடன்படிக்கைகள்  நடை பேற சாத்தியம் உண்டு. ஒன்று சீனா 1.5 பில்லியன் சனத்தொகை நாடு. மிக சிலர் விலையை பாராமல் சில வித்தியாசமான ஆடகளை வாங்க வந்தால் அதுவே இலங்கைக்குப் போதும். ஆனால் உடன் படிக்கை என்ன என்று கூறப்படவில்லை. இதே ஆடைத் தொழிலை வைத்துதான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் இல்லை. சற்று வித்தியாசமாக்கி செய்ய முயலலாம். அதேநேரம் சீனா இலங்கை பொருள்களை வாங்கியும் சந்தைப் படுத்தலாம். இது முன்னேறிய நாடு செய்யலாம். ஆனால் இலங்கை சீன பொருள்களை தன் பெயரில் செய்வது மட்டும் சில சூழ்நிலைகளில் தடுக்கப்பட்டிருக்கும். இல்ங்கையின் லாபம் குறையும். ஆனால் தொழில் மூடப்படாது. உடன் படிக்கை மேற்கு நாடுகளின் GSP+ போல இருக்காது. அதன் முக்கிய நோக்கம் வறிய நாடுகள் தமது பொருள்களை சந்தை படுத்த ஒரு இடம் கொடுப்பத்தாகும். ஆனால் இங்கு GSP+ என்ற பேரில் ஒரு சாதரண வரிக்குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

 

அமெரிக்க இலங்கை விசயத்தை கையாண்ட விதம் இந்தியாவினத்தை விட பெரிய வித்தியாசமாக படவில்லை. இதனால்  அமெரிக்கா சீனாவும், இலங்கையும் தங்களை தயார் படுத்த தேவையான காலத்தை விட அதிக காலம் கொடுத்திருந்தார்கள். இதனால் இலங்கையில் அமெரிக்கா அதிகம் வேற்றியீட்டும் சந்தர்ப்பம் அருகித்தான் வருகிறது. 

 

பெரிய விடயம் என்ன என்றால் சீனா சென்ற வருடம் 50 பில்லியன்களை இலங்கையில் முதலிட உடன் படிக்கை செய்திருக்கிறது. இப்போது இதை தடுக்க அமெரிக்காவிடம் எந்த வழிமுறையும் இல்லை. இதை சீனா இனி கடன்களாக கொடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. ஏற்கனவே தானும் முன்னேற்ற துறைகளில்தான் முதலிடும் என்றிருக்கிறது. நுரை சோலை ஒரு பாடம். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில்  வந்த முரண்பாடு, இலங்கை  இந்தியா, அமெரிக்கா போன்றவற்றின் முதலீட்டு அழுத்தங்களை குறைக்க சில சட்டங்கள் கொண்டுவந்தது. உதாரணமாக நாடுகள் இலங்கையில் காணிகளை வைத்திருக்க முடியாது என்பது ஒன்று. இதில் நுரை சோலை பிரச்சனையைத் தீர்த்தபின்னர் சீனா தனக்கு இந்த சட்டங்கள் செல்லாது என்பதை விளங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் சீனா இனி கடன் என்று கொடுக்காமால் தனது முதலீடுகளை தொடரும். இலங்கை திருப்பி கொடுக்கத்தக்க இடங்களில் மட்டும் கடன் கோடுக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.