Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பாதைக்குச் செல்கிறதா கோலிவுட்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பாதைக்குச் செல்கிறதா கோலிவுட்?
சந்திர பிரவீண்குமார்

சமீபத்தில் இயக்குநர் பாலாவின் கைவண்ணத்தில் 'பரதேசி' என்ற திரைப்படம் வெளியாகியது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றிய 'The red tea' (எரியும் பனிக்காடு) என்ற நாவலைத் தழுவிய படம் இது. இந்தப் படத்தால் பாலாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. என்றாலும் தேயிலைத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியமைக்காக இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

பரதேசி எழுப்பும் சலனங்கள் விதிவிலக்கானவை அல்ல. கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்ட கனவுத் தொழிற்சாலையில் அண்மையில் நிலவிவரும் போக்கின் ஒரு அடையாளம்தான் பரதேசி. வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டிப் படங்கள் வருவது அரிதாக இருந்துவரும் தமிழ்த் திரையுலகில், அண்மையில் அத்தகைய படங்கள் வருவது அதிகரித்து வருகிறது. யதார்த்தமான வாழ்வியலையோ உண்மைச் சம்பவத்தையோ முக்கியமானதொரு பிரச்சினையையோ அடிப்படையாகக் கொண்டு சில படங்கள் வெளிவந்துள்ளன. இதே வரிசையில் மேலும் சில படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. தமிழ்ப் படங்கள் புதிய பாதையில் பயணிக்கின்றனவா?

மலையாளத் திரையுலகில் அங்குள்ள பிரபலமான இலக்கியவாதிகளான எம்.டி. வாசுதேவன் நாயர், அடூர் கோபாலகிருஷ்ணன், தகழி சிவசங்கரன்பிள்ளை ஆகியோரின் படைப்புகளைத் திரைப்படங்களாக எடுத்துள்ளார்கள். அவை வணிக ரீதியான வெற்றியையும் பெற்றுள்ளன. ஆனால் தமிழ்த் திரையுலகில் இலக்கிய படைப்புகள் வெளியாவதில்லை என்ற ஆதங்கம் படைப்பாளிகள் மத்தியில் உண்டு. அப்படி வெளிவந்த சில படைப்புகளும் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டன. தி. ஜானகிராமனின் மோகமுள் என்ற நாவல் திரைப்படமாக வந்தது. ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. நாவலை ரசித்தவர்களின் பாராட்டையும் பெறவில்லை. ஞான ராஜசேகரன் பாரதியாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கினார். ஆனால் அதை குறைவான மக்களே கண்டு ரசித்தார்கள். மேலும் அந்தப் படத்தில் பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்களைத் தாண்டி, தமிழ் சினிமாவின் நாயகத்துவம் தலைதூக்கியதாகவும் சிலர் குற்றம்சாட்டினார்கள். இளையராஜாவின் அற்புதமான மெட்டுக்களில் பாரதியாரின் அமர வரிகளைக் கேட்டதுதான் அந்தப் படத்தின் ஆகப் பெரிய பங்களிப்பு.

இவை போக, கல்கியின் பிரசித்தி பெற்ற படைப்பான பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று கமல் ஹாசன், மணிரத்னம் போன்றவர்கள் பல ஆண்டுகளாகவே தமது விருப்பங்களை வெளிப்படுத்தி வந்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. எம்.ஜி.ஆர்.கூட இத்தகைய முயற்சியில் இறங்கினார். இயக்குநர் மகேந்திரன் இயக்குநராவதற்கு முன்பே அவரை அழைத்து பொன்னியின் செல்வனுக்குத் திரைக்கதை எழுதச் சொன்னதாகச் சேதி உண்டு. ஆனால் எம்.ஜி.ஆராலும் அதை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது மணிரத்னத்திற்காக ஜெயமோகன் பொன்னியின் செல்வன் திரைக்கதை எழுதுவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு எழுந்தது. வந்த சுருக்கில் அந்தப் பேச்சு காற்றில் கரைந்துபோனது. நாவல்களைப் படமாக்கும் முயற்சி இப்படித் தடுமாறினாலும் பரதேசி திரைப்படம் அந்தக் குறையை ஓரளவேனும் போக்கியது என்று சொல்லலாம். இதையடுத்து மேலும் பலர் நாவல்களைப் படமாக்க முனையக்கூடும் என்னும் நம்பிக்கை பிறந்துள்ளது.

வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களையும் தாண்டி தமிழில் ஏதேனும் வாழ்வியல் அம்சத்தை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. யதார்த்தமான வாழ்வியலைக் காட்டிய படங்கள் அநேகமாக எல்லா ஆண்டுகளிலும் வெளிவந்துள்ளன. சேரனின் ஆட்டோகிராஃப், பாலாஜி சக்திவேலின் காதல், வழக்கு எண் 18/9, தங்கர்பச்சானின் பள்ளிக்கூடம், பாலாவின் பிதாமகன், அறிவழகனின் சாட்டை, வசந்தபாலனின் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்கள் இவற்றில் சில உதாரணங்கள். இவற்றில் சில வெற்றியும் அடைந்துள்ளன.

2013ஆம் ஆண்டில் இந்தப் போக்கு வலுவடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆண்டில் மூன்று மாதங்களே கடந்து வந்துள்ள நிலையில் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி ஹரிதாஸ், சுண்டாட்டம், வத்திக்குச்சி, சென்னையில் ஒருநாள், பரதேசி ஆகிய ஐந்து படங்கள் வெளிவந்துள்ளன. இந்த படங்கள் தமிழர்களின் பல்வேறு வாழ்வியல் கூறுகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.

ஆட்டிசம் என்ற பாதிப்புள்ள குழந்தைகளும், இளைஞர்களும் பல குடும்பங்களில் இருக்கிறார்கள். அவர்களைப் பெற்றவர்கள் 'எதனால் இந்த பாதிப்பு?' என்பதை உணர முடியாமல் தங்களைத் தாங்களே நொந்துகொள்வதையும் நம்மில் பலர் பார்த்திருப்போம். ஆனால் இதைப் பற்றிய விழிப்புணர்வோ, வாழ்க்கை முறைகளோ நவீன தமிழ் இலக்கியங்களிலும், திரைப்படங்களிலும் இடம்பெறவில்லை. 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம் அந்த குறையைத் தீர்த்துள்ளது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவனை வளர்க்க அவனது தந்தை படும் கஷ்டங்களை அழகாக படமாக்கியுள்ளார்கள். திரையுலகில் மட்டுமல்லாது தமிழிலும் ஆட்டிசம் பற்றிய முதல் படைப்பு இதுதான் என்று சொல்லலாம். இந்த படம் திரையிட்டதற்குப் பிறகே ஆட்டிசம் பற்றிய புத்தகம் தமிழில் வெளியாகியது.

இந்தப் படம் ஒரு தொடக்கம் மட்டுமே. அடுத்து வந்த சுண்டாட்டம் என்ற படம் கேரம் விளையாட்டை (சுண்டும் ஆட்டம் - சுண்டாட்டம்) மையமாக வைத்து ரவுடியிசத்தில் ஈடுபடும் சில வடசென்னை மக்கள் பற்றி வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்டிருந்தது. மார்ச் 15ஆம் தேதி வெளிவந்த படங்களில் பரதேசியில் தேயிலை தொழிலாளர்களின் துன்பங்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையையும் இயக்குநர் பாலா படம் பிடித்தார். இந்த படத்தின் கதை 'The red tea' என்ற ஆங்கில நாவலைத் தழுவியது என்று சொல்லப்பட்டதால் அது சம்மந்தமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த படம் வழக்கமான அம்சங்களில் இருந்து விலகி நின்றது என்பதை மறுக்க முடியாது. அதே நாளில் வெளியான வத்திக்குச்சி சென்னை புறநகரில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் ஒருவரின் அன்றாட வாழ்வில் ஏற்படும் சலனங்கள் பற்றியதாக இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை முகப்பேரில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் ஹிதேந்திரன் என்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை. அவனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதே சமயத்தில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஒருவர் இதயம் செயலிழந்து உயிருக்குப் போராடிவந்தார். ஹிதேந்திரனின் இதயம், அவனது பெற்றோருடைய அனுமதியுடனும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் ஒத்துழைப்புடனும் ஏழே நிமிடங்களில் தேனாம்பேட்டைக்குக் கொண்டுசெல்லப்பட்டு மாற்று இதயம் சரியான நேரத்தில் பொருத்தப்பட்டது. ஓர் உயிர் காப்பாற்றப்பட்டது. அந்த உண்மைச் சம்பவம் 'ட்ராஃபிக்' என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக வெளியானது. அதைத் தழுவி, 'சென்னையில் ஒருநாள்' என்ற திரைப்படம் மார்ச் 29ஆம் தேதி வெளியானது. பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வெளியான இந்த படத்தில் நான்கு மனிதர்களின் நான்கு விதமான வாழ்க்கைகளும் இடம்பிடித்தன.

இந்த ஐந்து திரைப்படங்களும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வெளிவந்தன என்பதும் இரண்டு மாத இடைவெளியில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது சில மாத இடைவெளியிலோ இதுபோன்ற படங்கள் வெளிவரவே செய்தன என்றாலும் குறுகிய இடைவெளியில் இதுபோன்ற படங்கள் வருவது இப்போதுதான். தமிழ்த் திரையுலகம் இலக்கியங்களைத் தொடவில்லை என்றாலும் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணிப்பதாக இதைப் பார்க்கலாம்.

இந்த ஆண்டில் இதுபோன்ற படங்களின் எண்ணிக்கை இதோடு முடிந்துவிடவில்லை. இன்னும் சில வாரங்களில் வட சென்னைப் பகுதியில் இருந்த பாக்ஸர்களின் வாழ்க்கை பற்றிய 'பூலோகம்' என்ற படமும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பற்றிய 'கௌரவம்' என்ற படமும் வெளிவர இருப்பதாகத் தெரிகிறது.

'சில படங்கள் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுவது உண்மைதான் என்றாலும் இதனால் கோலிவுட் மாறிவிடாது' என்கிறார் தமிழ் ஆழி என்ற மாத பத்திரிகையின் உதவியாசிரியர் துறையூர் சரவணன். 'முன்னர் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ வந்த படங்கள், இந்த ஆண்டு மிகக் குறுகிய இடைவெளியில் வெளியானதால் இப்படி தோன்றலாம். ஆனால் இனிவரும் மாதங்களில் இது தொடர வாய்ப்பு குறைவுதான். இதற்கு இயக்குநர்களை மட்டும் காரணம் சொல்ல முடியாது. அவர்களுக்கு வணிக ரீதியான அங்கீகாரம் தேவைப்படுகிறது. திரைப்படங்களை ரசிக்கும் மனநிலையில் மாற்றம் வர வேண்டும் என்பதே சரியான தீர்வு. இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும்' என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த முயற்சிகள் நல்ல முறையில் நடைபெற்றால் தமிழுக்கு நல்ல கதைகளும், புதிய பார்வைகளும் கிடைக்கலாம். வாழ்வின் மாறுபட்ட பரிமாணங்கள் திரையில் பதிவாகலாம். அப்படி நடந்தால் அது தமிழ்த் திரையுலகின் புதிய பயணமாக அமையும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=b0f23d19-d78b-4298-a075-bc7630ba0b3d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கிருபன் அண்ணா,  திடீரெண்டு இயேசு படங்கள் கடல், டேவிட் என்று வருவதை கவனித்தீர்களா?

பரதேசியுலும் ஒரு பாடல் மதமாற்றத்தை சுற்றிவருகிறது.

மதப் பரப்புரைக்கு என்று படங்கள் வலிந்து எடுக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. மதங்களைப் பரப்ப பல இலவச தொலைக்காட்சிச் சேவைகள் தற்போது உள்ளன. அவற்றில் சலிக்காமல் உழைக்கின்றார்கள்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.