Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயன் மீதான தாக்குதல் – சிறிலங்கா அரசாங்கத்துக்குள் குழப்பம்

Featured Replies

உதயன் மீதான தாக்குதல் – சிறிலங்கா அரசாங்கத்துக்குள் குழப்பம் [ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 00:57 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

Keheliya-Rambukwella-13.jpgயாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 

குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தத் தாக்குதல் குறித்து சிறிலங்கா அதிபர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தன்னைப் பணித்ததாகவும் சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். 

இதையடுத்து தாம், தாக்குதலாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, தாக்குதல் நடத்தப்பட்டு சில மணிநேரங்களிலேயே, இது உள்வீட்டு வேலை என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்திருந்தார். 

அவரது கருத்துக்கு முரணான வகையில் சிறிலங்காவின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் கருத்து அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130415108104

 

முகப்பு

 

உதயன் தாக்குதல் சம்பவத்துடன் அரசை தொடர்புபடுத்துவதை நிறுத்த வேண்டும்! - கெஹெலிய ரம்புக்வெல சீற்றம்!!

dd73238a-4c86-4560-88b8-02f4054a77e01.jp

 

யாழ் உதயன் பத்திரிகையின் பிரதான பணியகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் அரசாங்கத்தை தொடர்புபடுத்துவதை எதிர்க்கட்சியினர் நிறுத்த வேண்டும் என சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை பிரதான அலுவலகத்தின் அச்சகப் பகுதி இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த குழுவினர் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதுடன்,  அச்சு இயந்திரப் பகுதியை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

அதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சம்பவத்துடன் அரசதரப்பைத் தொடர்புபடுத்தி விமர்சிப்பதை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என கெஹெலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைத்தரப்பினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் யாழ் குடாநாடு இருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=dd73238a-4c86-4560-88b8-02f4054a77e0

தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்கு நாட்டின் அதிபர் மகிந்தா அல்ல,கொத்தா தான் :icon_idea:

ஒரு குழப்பமும் இல்லை

மக்களை குழப்பி சிங்கள அரச பயங்கரவாதிகளை காப்பாற்றும் ஒரு தெளிவான  முயற்சி.

 

இப்பிடித்தான் உங்கட வீட்டுக்குள்ள வந்து உங்கட மனைவிமாரோடு யாரும் ................ போனால், விசாரணை குழு அமைத்துத்தான் கண்டுபிடிப்பிங்களோ? ^_^

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.