Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூரில் பா.ஜ.க. அலுவலகம் அருகே குண்டு வெடித்து 16 பேர் காயம்!

Featured Replies

பெங்களூரில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே குண்டு வெடித்ததால் 16 பேர் காயமடைந்தனர்.
 
 இன்று காலை பெங்களூர், மல்லேஸ்வரம் அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி வேன் வெடித்ததில் 16 பேர் காயம் அடைந்தனர்.
 முதலில் மாருதி வேனில் இருந்த எல்.பி.ஜி. சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்ட நிலையில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததாலேயே, கார்களும் சேர்ந்து வெடித்ததாக கூறப்படுகிறது.


இந்ந்லையில், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் நகர காவல் ஆணையர் ராகவேந்திரா ஔரத்கர், இது குண்டு வெடிப்பாகவே தோன்றுகிறது என்றார்.
இருப்பினும் சக்தி குறைந்த வெடிப்பு காரணமாக பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பா.ஜ.க. அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெடிகுண்டு நிபுணர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14084:bangalor-bjv&catid=37:india&Itemid=103

 

  • கருத்துக்கள உறவுகள்
bjp%20office_CI.jpg

 

பெங்களூரில் பாரதீய ஜனதா க ட்சியின் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில்  வைக்கப்பட்டிருந்த  குண்டு  வெடித்ததில்  8  போலீசார்  உட்பட 13 பேர் காயமடைந்தனர்.  

 

குண்டு  வெடித்ததில்  3 கார்களும்  தீப்பிடித்து  எரிந்தன.  கர்நாடகா  மாநில சட்டசபைக்கான  தேர்தல்  மே 5ம் திகதி  நடைபெற உள்ளது.  இன்று வேட்பு மனு தாக்கல்  செய்ய  கடைசி நாளாகும்.  

 

இதனால் பெங்களூர்  மல்லேஸ்வரத்தில்  உள்ள  பாஜக  அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான  தொண்டர்கள்  குவிந்திருந்தனர் பொலீஸ்  பாதுகாப்பும் அங்கு  போடப்பட்டிருந்தது.  

 

இந்நிலையில்  இன்று  காலை  11 மணியளவில்  திடீரென  பாஜக அலுவலகத்துக்கு  வெளியே  பெரும் வெடிச் சப்தம் கேட்டது.  இதனால் அங்கிருந்தோர்  சிதறி   ஓடினர்.  முதலில்  ஒரு காரில் கேஸ் சிலிண்டர் மாற்றும் போது  அது வெடித்ததாகக்  கருதப்பட்டது.  

 

ஆனால், பின்னர்  வெடித்தது  வெடிகுண்டு என்று தெரியவந்தது.  இந்த குண்டு ஒரு  மோட்டார்  சைக்கிளில்  வைக்கப்பட்டிருந்தது.  குண்டு  வெடித்தவுடன் அருகில்  இருந்த 3 கார்களும் தீப் பிடித்துக் கொண்டன.  இதையடுத்து அப்பகுதிக்கு  தீயணைப்புப்  படையினர்  உடனே விரைந்து எரிந்து கொண்டிருந்த  வாகனங்களின்  தீயை அணைத்தனர்.  ஆனால், அதற்குள் வாகனங்கள் முழுவதும் எரிந்து போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90863/language/ta-IN/article.aspx

பெங்களூரு குண்டு வெடிப்புக்கு தமிழக வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், பெங்களூருவில் கட்சித் தொண்டர்களால் நிரம்பி வழிந்த பாரதிய ஜனதா அலுவலகம் அருகே இன்று குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 8 போலீசார் உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர். நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் தமிழகத்தைச் சேர்ந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பெங்களூரு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் தமிழக பதிவு எண் இருந்ததால் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து வாகனம் திருடப்பட்டு, குண்டுவெடிப்புக்காக பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குண்டுவெடிப்பில் 16 பேர் படுகாயம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பெங்களூருவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் குழுமியிருந்தனர்.

பாரதிய ஜனதா அலுவலகம் அருகே கார்கள் நிறுத்தும் பகுதியில் காலை 10.40 மணியளவில் திடீரென குண்டுவெடித்தது. இதில், 8 காவலர்கள் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர். 3 கார்களும், காவல்துறை வேன் ஒன்றும், 2 இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.

"இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு"
காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 16 பேரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தினுள் மோப்பநாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் முழுமையாக சோதனையிட்டனர்.

காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பெங்களூரு காவல் ஆணையர் ராகேவந்தர் அவரத்கர், வெடித்தது மோட்டார் சைக்கிள் குண்டு என்று உறுதிப்படுத்தினார்.

தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை.
தேசிய புலனாய்வு அமைப்பினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரதிய ஜனதா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ரகசிய கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்வதன் மூலம், குண்டுவெடிப்பு குறித்த முழு விவரங்களையும், சதியாளர்களையும் கண்டுபிடிக்க முடியும் என்று புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை கைது செய்ய மத்திய அரசு முழு உதவி செய்யும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் உறுதியளித்துள்ளார்.

 

bb1.png

 

bb2.png

 

bb3.png

 

http://puthiyathalaimurai.tv/blast-near-karnataka-bjp-office-13-injured

 

 

 



பெங்களூரு வெடிகுண்டு தாக்குதலில் சென்னை வாகனம்: விசாரணையில் தகவல்.

 

bangalore-blast.png

 

பெங்களூரு வெடிகுண்டு தாக்குதலில், சென்னை தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவரின் இருசக்கர வாகனம், பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூரு வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனம் தமிழகத்தைச் சேர்ந்தது என்பது மத்திய புலனாய்வு குழுவின் விசாரணையில் தெரியவந்தது. அது யமஹா இருசக்கர வாகனம் என்பதும், அதன் பதிவு எண் டி.என். 22 R 3769 என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. புதிய தலைமுறை நடத்திய பிரத்யேக விசாரணையில், அந்த வாகனம் சென்னை தில்லை கங்கா நகரைச் சேர்ந்த முகவரியில் பதியப்பட்டது தெரியவந்துள்ளது. தில்லை கங்கா நகர், 22 வது தெருவில் வசித்து வரும் சங்கரநாரயணனின் மகன் சுந்தரின் பெயரில் அந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வாகனத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே விற்பனை செய்துவிட்டதாக சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். தமக்கும் அந்த வாகனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்தார். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

http://puthiyathalaimurai.tv/bomb-blast-in-bengaluru

 

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களுரூ பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 13 பேர் காயம்

 

bombe.png

பெங்களூருவில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த ‌குண்டு வெடித்தது. இதில் 8 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் தற்போது பெங்களுரூவில் குண்டுவெடித்துள்ளது.கர்நாடகா மாநிலம், பெங்களுரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்குவெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காரில் இருந்து வெடிகுண்டு நிகழ்ந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ., தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் திடீரென வெடித்து சிதறி உள்ளது.

மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு

நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெங்களுரூ போலீசார் கூறு‌கையில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தாக்குதல் தான். மர்ம நபர்கள் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிகுண்டை வைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் கூறி உள்ளனர். முதலில் காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாயின. எனினும் வெடித்தது கார் குண்டு என போலீசார் உறுதியாக தெரிவித்தனர். யாரை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.இதனால் பா.ஜ. அலுவலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அடுத்த வாரம் பா.ஜ., முக்கிய தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அத்வானி, மோடி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர உள்ள நிலையில் பா.ஜ., அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், கடந்த பிப்ரவரி மாதம் தில்சுக் நகர் பஸ் நிலையம் எதிரே, கோனார்க் மற்றும் வெங்கடாத்ரி எனஅடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகளில், 20 பேர் பலியாயினர்; 80 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

பெங்களூர் வெடிகுண்டு சம்பவத்தால் சென்னையிலும்,மதுரையிலும் தீவிர பாதுகாப்பு.

 

BJP-office-in-Chennai.png

 

பெங்களூர் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஆயுதம் தாங்கிய காவலர்கள் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கவும் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், சந்தேகம்படும்படியான நபர்களை கண்டால் உடனே காவலர்களுக்கு தகவல் அளிக்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள், விமான நிலையம், வணிக வளாகங்கள் என சென்னை முழுவதும் பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பெங்களூர் வெடிகுண்டு விபத்தில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனம் தமிழக பதிவு எண் கொண்டுள்ளதால், அது குறித்து சிறப்பு படை அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையம், வணிக வளாகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். போலீஸார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/chennai-bjp-office-in-police-security

 

பெங்களூரு குண்டு வெடிப்பு: விசாரணை தீவிரம் : தமிழகத்தை சேர்ந்த நால்வர் உட்பட எட்டு பேர் கைது

 

பெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த, நான்கு பேர் உட்பட, எட்டு பேரை, கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ., அலுவலகம் அருகே, கடந்த புதன்கிழமை, குண்டு வெடித்ததில், 16 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு தொடர்பாக, பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட, மோட்டார் சைக்கிளின் பதிவு எண், தமிழகத்தை சேர்ந்தது என்பதால், தமிழக போலீசார் உதவியுடன், கர்நாடகா போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கர்நாடக போலீசால் நியமிக்கப்பட்ட, சிறப்பு போலீஸ் படையினரும், தமிழகத்தின் பல இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று முன் தினம் இரவு, வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில், அக்பர் பாஷா, சலீம் உட்பட, நான்கு பேரை கைது செய்துள்ள சிறப்பு படையினர், நேற்று பெங்களூரில், நான்கு பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரிடமும், ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் குண்டு வெடிப்பு தொடர்பாக, முக்கியமான தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தின், சுற்று வட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குண்டு வெடிப்புக்கு, சில நிமிடங்களுக்கு முன், 25 வயதுள்ள வாலிபர் ஒருவர், சந்தேகத்துக்கிடமாக நடமாடியது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், அந்த நபரின் புகைப்படம், கம்ப்யூட்டரில் தயாராகி வருகிறது.குண்டு வெடித்த இடத்தில், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும், தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjY0MjgxNzYw.htm#.UXKLoUqC9S0

 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ~ கேரளா விரைந்தனர் தமிழக காவல்துறை

 

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமி்ழக காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று பெங்களூரு பா.ஜ.க அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில், தமிழ்நாட்டை சேர்ந்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து, வண்டியின் உரிமையாளர், அவரிடம் இருந்து வாகனம் எப்படி மற்றொருவருக்கு விற்கப்பட்டது, யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதில் வாகனத்தின் உரிமையாளர் கேரளாவை சேர்ந்த தொலைபேசி எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றம் செய்ததும், தற்போது அந்த எண்ணை மாற்றி வேறு எண்ணை பயன்படுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தமிழக காவல்துறையினர், கேரளாவை சேர்ந்த அந்த எண் யாருடையது, எண்ணுக்குரிய முகவரி என்ன என்பது குறித்து விசாரிப்பதற்காக கேரளா சென்றுள்ளனர். இதனிடையே தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் கர்நாடகா காவல்துறையினரும் தமிழகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகனம் தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியை நெருங்கி விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.newsalai.com/details/bangalore-bomb-blast-case-tamilnadu-police-went-kerala.html#.UXRIOUqC9S0

 

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 14 நாள் போலீஸ் காவல்!

 

24-bangalore-blast88-600.jpg

பெங்களூர்: பெங்களூர் மல்லேஸ்வரத்தில் பாரதிய ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

 

பாஜக அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இதில் 17 பேர் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தமிழகத்தைச் சேர்ந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டது 'பைப் வெடிகுண்டு'. இதே ரக வெடிகுண்டுதான் மதுரையிலும் சிக்கியது. இதனால் கர்நாடகா தனிப்படை போலீசாரும் தேசிய புலனாய்வு அமைப்பினரும் தமிழகத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.
 

தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

குண்டுவெடிப்பு நடந்த நாளில் சென்னை தில்லை கங்கா நகரைச் சேர்ந்த 'சங்கர நாராயணன்' என்பவருக்கு சொந்தமான வண்டி என ஊடகங்கள் பேட்டி எடுத்து செய்திகளை வெளியிட்டன. ஆனால் தற்போது "மோட்டார் சைக்கிள் பலரது கைமாறி விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது" என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள் குண்டு வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் கோவையில் இருந்து பெங்களூர் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனடிப்படையில் சென்னையில் பீர் முகைதீன், பசீர் அகமது ஆகியோரும் மதுரையில் கிச்சன் புகாரி என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பெங்களூர் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு நேற்று இரவு பெங்களூர் கெலமங்களாவில் மாஜிஸ்திரேட் முன்பு மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 3 பேரையும் 14 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் அனுமதி கோரினர். இதை ஏற்ற மாஜிஸ்திரேட் மூவரையும் மே 6ம் தேதி வரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார்.. இதை தொடர்ந்து போலீசார் மூவரிடமும் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 5 பேரிடம் விசாரணை?

இதனிடையே பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் மண்ணடி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 5 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு

போலீசாரின் இந்த தொடர் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழக காவல்துறை தலைவரை இன்று நேரில் சந்தித்து முறையிட்டனர். சில அரசியல் இயக்கதலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள்தான் இந்த கைது நடவடிக்கைக்குக் காரணம் என்றும் அவர்கள்தான் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

http://tamil.oneindia.in/news/2013/04/24/india-bangalore-blast-accused-sent-14-day-police-custody-174066.html

 

Edited by துளசி

பெங்களூர் குண்டுவெடிப்பு; தமிழகத்தில் மேலும் 5 பேர் கைது

 

பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை திருமங்கலம், திருவல்லிக்கேணி, மண்ணடி ஆகிய பங்குதிகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அத்வானியின் மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைத்தவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெங்களூர் மல்லேஸ்வரத்தில் பா.ஜ.க. அலுவலகம் அருகில் நடந்த குண்டு வெடிப்பில் அல் உம்மா இயக்கத்தினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு மூலம் இந்த நாசவேலை நடத்தப்பட்டு இருப்பதும், இதில் பைப் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டு இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தமிழக பதிவு எண் கொண்டது என்பதும், அத்வானி மதுரை வருகையின் போது பைப் வெடிகுண்டு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டது என்பதும் தேசிய புலனாய்வுப் படையின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பியது.

இதையடுத்து தேசிய புலனாய்வு படையினரும், கர்நாடக தனிப்படை காவல்துறையினரும், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் சென்னையில் முகாமிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தது தொடர்பாக பலரைப் பிடித்து விசாரித்தனர். மோட்டார் சைக்கிள் பலரது கைமாறி விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் செல்போன் உரையாடல்களை வைத்தும் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் சென்னை பூக்கடை பகுதியில் ஒரு விடுதியில் பதுங்கி இருந்த பீர் மொய்தீன் (39), பஷீர் அகமது (30) ஆகியோரும், மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் ஒரு விடுதியில் கிச்சான் புகாரி (38) என்பவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தவிர நெல்லை மேலப்பாளையத்தில் ரசூல் மைதீன், சலீம் உள்பட 4 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

கைதான கிச்சான் புகாரி கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர். மேலும் பல கொலை மற்றும் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவர். புழல் சிறையில் தண்டனை அனுபவித்த கிச்சான் புகாரி 6 மாதத்துக்கு முன்புதான் விடுதலையானார். கைதான 3 பேரும் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தற்போது பெங்களூர் குண்டு வெடிப்பில் கிச்சான் புகாரி சிக்கி இருப்பதால் காவல்துறையினரின் கவனம் அல் உம்மா தீவிரவாதிகள் பக்கம் திரும்பியுள்ளது.

மேலும் நேற்று இரவு சென்னை திருமங்கலத்தில் இருவரும், திருவல்லிக்கேணியில் ஒருவரும், மண்ணடியில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து பேருக்கும், கிச்சான் புகாரி உள்ளிட்ட மூவருக்கும் தொடர்பு இருக்கிறதா? மேலும் இவர்களின் தொலைபேசி தொடர்புகள் ஆகியவற்றை புலனாய்வுத்துறை ஆராய்ந்து வருகின்றது.

இதற்கிடையே மதுரையில் அத்வானி வருகையின் போது குண்டு வைக்கப்பட்டது தொடர்பாக தேடப்பட்டுவரும் பக்ருதீன் உட்பட 10 பேர் இன்னும் சிக்கவில்லை. தவ்பீக் என்பவன் மட்டும் பிடிபட்டான். மற்றவர்களை பிடிக்கவும் காவல்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/1304/24/1130424019_1.htm

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.