Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சிக்கு தீ அணைப்பு பிரிவு - ஒருஅழிவின் ஊடே உணர்த்தப்பட்ட செய்தி - குளோபல்தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்டத்திற்கென தனியான தீயணைப்புப் பிரிவின்; சேவை அவசியம் என மாவட்டத்தின் வர்த்தக சங்கத்தினரும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 15-04-2013 அன்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்திருந்த வர்த்தக நிலையம்  ஒன்று தீ பிடித்து முற்றாக எரிந்து அழிந்துள்ள நிலையிலேயே மேற்படி அவசியமான கோரிக்கை எழுந்துள்ளது

குமரகுரு பல்பொருள் வாணிபம் என்ற கிளிநொச்சியின் முதன்மையான வர்த்தக நிலையம் தனிமையான கட்டடமாக இருந்ததன் காரணமாக தீயின் அழிவு தனியே அந்த வர்த்தக நிலையத்துடன் முடிந்துவிட்டது மாறாக கிளிநொச்சிநகரின் ஏனைய வர்த்தக நிலையங்கள் போன்று ஒரு தொடர் கடைத்தொகுதிகளாக அமைந்திருந்தால் தீயின் அழிவு இன்று நூற்றுக்கணக்கான வர்த்தகர்களின்  வாழ்க்கையை எரித்திருக்கும் எனவே நவீனமாக வளர்ந்து வருகின்ற கிளிநொச்சிக்கு ஒரு தீ அணைப்பு பிரிவின் அவசியம் ஒரு அழிவின் ஊடே உணர்த்தப்பட்டுள்ளது

மீள்குடியேற்றத்திற்கு பின்னர் கிளிநொச்சி நகர் நவீனமாக புனரமைக்கப்பட்டு வருகிறது இங்கு வங்கிகள் உற்பத்தி நிறுவனங்கள் ஆடைத்தொழிற்சாலை பல்வேறு சேவை வழங்கும் நிறுவனங்கள் என கிளிநொச்சி பெருத்துக்கொண்டெ செல்கிறது

 

எனவே இந்த நவீன நகரத்திற்கு அவசியமான பல தேவைகள் உண்டு அதிலும் குறிப்பாக மிக மிக அத்தியாவசிய தேவையான தீ அணைப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என்பது அவசியமான ஒன்றே வளர்ந்து வருகின்ற கட்டங்கள் பெருகி வருகின்ற வர்த்தக நடவடிக்கைகள் என நாளுக்குநாள் மாற்றம் கண்டுவரும் கிளிநொச்சி எதிர்காலத்தில் தன்னை பல்வேறு அனர்த்தங்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ளவேண்டிய அவசிய தேவையும் உண்டு.

 

கிளிநொச்சி வர்த்தகர்கள் கடந்த கால யுத்த அனர்த்தத்தின் கொடூர வலிகளை சுமந்தவர்கள் தங்களின் வர்த்தகத்தினை முள்ளிவாய்க்காலிலும் எரியவிட்டவர்கள் எனவே இவர்களின் வர்த்தக நடவடிக்கள் மேலுமொரு அழிவை சந்திக்கும் அல்லது தாங்கிக்கொள்ளும் சக்திகொண்டதாக இல்லை ஒரு சிறு பாதிப்பு கூட கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் எனவே இந்த வளர்ந்து வருகின்ற நவீன நகரத்தினை எல்லா வகையான பாதிப்புகளிலிருந்தும்  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எல்லா பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு உண்டு

 

குமரகுரு பல்பொருள் வர்த்தக நிலையம் தீ பிடித்த ஆரமம்பத்தில் காவலாளி மற்றும் வர்;த்தக நிலைய உரிமையாளர் அவதானித்தும் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது போய்விட்டது இவர்களால் இரானுவத்திற்கு அறிவிக்கப்பட்டு இரானுவத்தின் தீ அணைப்பு படை கொக்காவிலிருந்து வருகை தருவதற்கு முன் தீ கடையின் அரைவாசி பகுதியினை ஆக்கிரமித்துவிட்டது இதன் பின்னர் யாழ் மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வருவதற்கு முன்னரே தீ முழுமையாக கடையினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது இந்த நிலையில் இரானும் பொலீஸ் யாழ் மாநகர தீ அணைப்பு பிரிவினர் என அனைவரின் முயற்சியும் வீண் போக தீ தனது வேலையை முடித்த அடங்கிவிட்டது.

 

எனவே இங்கு வர்த்தக நிலைய உரிமையாளரான கணபதிபிள்ளை ஆனந்தவடிவேல் அவர்கள் வேதனையுடன் தீ பிடித்ததனை தாம் ஆரம்பத்திலேயே கண்டுவிட்டதாகவும் ஆனால் தாம் கண்டுகொண்ட அந்த சிலநிமிடங்களில் கிளிநொச்சியில் ஒரு தீ அனைப்பு வசதி இருந்து அவர்கள் வந்திருந்தால் தனக்கு பல கோடி ரூபாக்கள் நட்டம் ஏற்பட்டிருக்காது எனத்தெரிவித்தார்.

 

உண்மையும் அதுதான் தீ பிடித்த ஆரம்பத்திலேயே தீ அணைப்பு பிரிவு விரைந்திருந்தால் அந்த வர்த்தகருக்கு பல கோடிகணக்கான அழிவு ஏற்பட்டிருகாது அதேவேளை 25 மேற்பட்டவர்கள் தொழிலாளர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கமாட்டாது எனவேதான் கிளிநொச்சிக்கு ஒரு தீ அணைப்பு பிரிவின் அவசியம் ஒரு வர்த்தகரின் சில கோடிக்கான ரூபாக்கள் இழப்பின் ஊடாகவும் 25 மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்கைபாதிப்புகளுக்கு ஊடாகவும் உணர்த்தப்பட்டுள்ளது.29

 

மீண்டுமொரு அழிவு வருமுன் உரிய நடவடிக்கைகள் அவசியமாகிறது இதனாலேயே தற்போது கிளிநொச்சி வர்த்தகர்களும் பொதுமக்களும் கிளிநொச்சிக்கு தீ அணைப்பு பிரிவு வேண்டும் என்ற கோரிக்கையினை விடுக்க வைத்திருக்கிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90866/language/ta-IN/article.aspx

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.