Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த சிந்தனையின் நல்லிணக்கத்தில் வடக்கில் தேனும் பாலும் ஓடுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து அபிவிருத்திகளுக்கும் ரிசாத் - முனைஸ் முட்டுக்கட்டை

 

 

வன்னியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வழங்க இலங்கை அரசு மறுத்துவருகின்றது. அதன் மூலம் மீளக்குடியமர்ந்த குடும்பங்களை கூட அங்கிருந்து விரட்டியடித்து விட அது முற்பட்டுள்ளதாக குற்றஞ் சாட்டியுள்ளார் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கூட்டமைப்பு சார்பு தலைவரான அம்பலவாணர் தனிநாயகம். இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவருடன் பிரதி தலைவர் சிவலோகநாதன் செந்தூரனும் ஆஜராகியிருந்தார்.

 

எமது பகுதிகளில் யுத்தத்தின்; பின்னராக ஜம்பது சதவீதமான மக்கள் கூட இதுவரை மீளக் குடியமர்ந்திருக்கவில்லை. ஆனால் இன்று வரை சாதாரணமான போக்குவரத்து பாதைகள் கூட இல்லாததோர் பகுதியாகவே மாந்தை கிழக்கு பிரதேசமுள்ளது. மின்சாரம் இல்லை. இருக்கின்ற வைத்தியசாலை கூட எந்நேரமும் இழுத்து மூடப்படலாம். உரிய வீதி வசதிகள் இன்மையால் அம்புலன்ஸ் வண்டியை கூட அனுப்ப மறுக்கிறார்கள். அதே போன்று போக்குவரத்து சபையின் ஒரு பேருந்து மட்டும் சேவையிலீடுபட்டுள்ள நிலையில்  அதனையும் வீதியை காரணங்காட்டி நிறுத்தப்போகிறார்கள். இறுதியில் பார்க்கப்போனால் ஆபிரிக்கா நாடுகளில் மனித நடமாட்டமில்லாத சில பகுதிகள் இருப்பதை போல எமது பிரதேசங்களும் இருக்கப்போவதாக அவர் எச்சரித்தார்.

 

நாங்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே. எமது கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளையாவது ஏற்படுத்தி வழங்க முற்படுகின்றோம். ஆனால் அரசோ அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடுகின்றது. அரசினது அமைச்சரான றிசாத் மற்றும் அவரது கட்சி எம்பியான முனைஸ் பாறுக்கிற்கு இதுதான் வேலையாக இருக்கிறது. எதனை முன்வைத்தாலும் அதனை நிராகரிக்கிறார்கள்.

எமது பகுதிகளை இருளினுள் தள்ளிவிட்டு எஞ்சியிருக்கிற மக்களையும் விரட்டிவிடுவதுதான் அவர்களது நோக்கமென அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

 

ஓட்டுமொத்தத்தில் இலங்கை அரசு எமது பகுதிகளை கட்டியெழுப்ப எதனையும் செய்யாது என்பதனை நாம் புரிந்தேயிருக்கின்றோம். அதனால் உள்ளுர் மற்றும் சர்வதேச தொண்டர்மைப்புக்களிடம் நாம் உதவிகளை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் புலம்பெயர் உறவுகளை உதவ முன்வருமாறு அழைக்கின்றோம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90875/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாந்தை பிரதேச சபைக்கான அதிகாரங்களை அமைச்சர் றிசாட் பறிக்கின்றார்: தவிசாளர்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013 17:42 0 COMMENTS

-சுமித்தி தங்கராசா

முல்லைத்தீவு, மாந்தை பிரதேச சபைக்கான அதிகாரங்களை அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகிய இருவரும் பறிக்கின்றனர் என மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் அம்;பலவாணர் தனிநாயகம் தெரிவித்தார்.

பிரதேச சபைக்கான அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றன. கடந்த 2010ஆம் ஆண்டு பிரதேச சபைக்கென ஒதுக்கப்பட்ட 107 மில்லியன் ரூபா நிதியில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் உதவிகள் பெரிதாக கிடைப்பதில்லை. உள்ளுராட்சி சபைகளினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக்களுக்கு தகவல்களுக்கு அனுப்பலாமே தவிர, அனுமதிக்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவிற்கும் அனுப்புவது என்ற நடைமுறை வட மாகாணத்தில் மட்டுமே இருக்கின்றது.

ஏனைய மாகாணங்களில் உள்ள பிரதேச சபைகளில் இந்த நடைமுறை இல்லை. திட்டமிட்டு குழப்புகின்றார்கள். அத்துடன், இங்கு வழங்கப்படும் நிதிகளை வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சியை தான் அங்கு இருக்கின்றவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

காணி பகிர்ந்தளிப்பு விடயங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விகிதாசாரத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றம் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக எந்தவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மக்கள் முன்னெடுக்கவில்லை. அதற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், அரசியல் நோக்கோடு முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்து அதனூடாக தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றி அமைக்க கூடிய விடயத்திற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். அவ்வாறான விடயங்களுக்கு நாங்களும் ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கைகளுக்கு முடியுமான அளவு உதவிகளை வழங்கி வருகின்றோம். இதில், முக்கியமான விடயம் என்னவென்றால் வளப்பங்கீடுகள் பகிர்ந்தளிப்பதற்கான செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியள்ளாhர்கள். இதனூடாக திட்டமிட்ட சதி வேலை என்றே சந்தேகிப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

2010 மீள்குடியேற்றம் செய்யப்படும் பொழுது மின்சாரம் எந்த இடத்தில் இருந்ததோ அந்த இடத்தில் இருந்து 1 இஞ்சி கூட நகரவில்லை. வட மாகாண சபையின் ஒத்துழைப்புக்கள் இன்மை, துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் இல்லை. வட மாகாண சபையிடம் துறைசார்ந்த உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு கேட்டபோதும், நியமிக்கப்படவில்லை. பரிசீலனைகள் மேற்கொள்வதாக கூறுகிறார்கள். ஏனைய வளங்கள் இன்றியும் வாழ்கின்றார்கள்.

பல்வேறு திணைக்கள அதிகாரிகளிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் மக்கள் பெரும் விரக்தியின் மத்தியில் வாழ்கின்றார்கள்.அத்துடன், முல்லைத்தீவு பகுதி மக்களின் கணிசமான வளங்கள் அநுராதபுரம் மாவட்டத்துடன் இருந்த வெலி ஓயா என்ற சிங்கள பிரதேசத்தின் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. முல்லை மாவட்ட உணவுத்திட்டம் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

மிகவும் ஒரு சிக்கலான காலகட்டத்தில் இருப்பதோடு, மிகவும் ஒரு திட்டமிட்ட தமிழ் மக்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமன்றி அந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதார நிலமைகளும் மழுங்கடிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலைகளும் தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் மாகாண சபை கூடுதலாக பங்களிப்பு வழங்கி வருகின்றதென்பதனையும் சுட்டிக் காட்டினார்கள்" என்றார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் சிவலோகநாதன் செந்தூரன் உட்பட வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/64162-2013-04-17-12-15-54.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.