Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் உள் விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்கிறது அமெரிக்கா! – மகிந்த ராஜபக்ச காட்டம்!

Featured Replies

 

நாட்டின் உள் விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்கிறது அமெரிக்கா! – மகிந்த ராஜபக்ச காட்டம்!!

15957567-07f0-4378-9c18-816cab31e4f51.jp

 

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்து வருவதாக சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த ஜனாதிபதி மஹிந்த, சில தரப்புகளின் தேவையற்ற தலையீடுகளும், அழுத்தங்களும் நாட்டுக்கு எதிராக சதி செய்யும் ஒரு தரப்பு இருப்பதையே காட்டுவதாகவும், அமைச்சர்கள் இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் நடந்துகொள்ளவேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் தலையீடுகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விலாவாரியாக எடுத்துக்கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் மின்கட்டண அதிகரிப்பு விடயத்திலும் அமெரிக்கா தலையிட முயற்சிகளை எடுத்ததாகவும், இவ்வாறானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுயாதிபத்திய இறைமையுள்ள ஒரு நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நாம் அனுமதியளிக்கப் போவதில்லை.

எமது நாட்டின் மீது மேற்குலக நாடுகள் தலையீடுகளைச் செய்வது சாதாரண விடயமல்ல. நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் ஒரு சதி நடக்கிறதா என்றே நாம் சந்தேகிக்கவேண்டியுள்ளது. எனவே, அமைச்சர்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்ற சாரப்பட ஜனாதிபதி மஹிந்த கருத்துகளை முன்வைத்தார் என அரச வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=15957567-07f0-4378-9c18-816cab31e4f5

மாதங்கள் குறைந்தது 60000 டாலர்களை செலவழித்தாலும் நிலைமை மாறாதா?

 

இல்லை சீனாதான் கைவிடுமா?? 

  • தொடங்கியவர்

    US-CEB powwow likely on electricity price hike
April 18, 2013, 12:00 pm 

By Shamindra Ferdinando

In the wake an unprecedented electricity tariff hike from April 20, the US Embassy is expected to request a meeting with Ceylon Electricity Board (CEB) Chairman W. B. Ganegala and CEB General Manager Nihal Wickremesuriya to discuss the impact of the massive price hike on consumers.

The Public Utilities Commission of Sri Lanka (PUCSL), the regulatory body, on Wednesday (April 17) gave the green light to the CEB to go for an electricity tariff hike though the government intervened later in the day to delay the latest increase by nine days.

Sources said that the government felt it would be unfair to impose a backdated tariff increase.

Domestic users will have to pay some 68 per cent more on their monthly electricity bills, while others will have to pay more than 26 per cent.

A US Embassy official told The Island yesterday said that they hadn’t thought  of asking for a fresh appointment with the CEB officials. "We have been busy with some other issues," the official said, acknowledging that the embassy had sought a meeting in the run-up to Wednesday’s announcement made by the PUCSL.

In a letter dated April 5, 2013, Ms Allison Areias–Vogel, Counselor, Economic and Commercial Affairs, has sought to meet Ganegala and Wickremasuriya on April 9, 10 or 11, though the CEB chiefs avoided the meeting.

The External Affairs Ministry has asserted that the request should have been made through Secretary to the EAM.

Sources said that the US Embassy had also raised the contentious issue of the Ceylon Petroleum Corporation (CPC) refusing to supply fuel until the CEB settled its dues. Responding to a query byThe Island, sources pointed out that the US sanctions targeting Iran had caused a situation where Sri Lanka had to negotiate with new suppliers to obtain oil.

However, Opposition political sources said that there always routine discussions between commercial officers of Embassies and senior government officials. Sources said that the government had been talking to the US about ways to work around the Iranian oil embargo and the resulting cost escalation to the CPC and CEB.

 

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=77107

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.