Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஶ்ரீலங்கா விடயத்தில் மேற்குலகம் இன்னமும் தீவிர நிலைக்க வரவில்லை!

Featured Replies


 
ஶ்ரீலங்கா விடயத்தில் மேற்குலகம் இன்னமும் தீவிர நிலைக்க வரவில்லை!
by Editor on 19th-April-2013
 

Tamil-civilians.jpgஇலங்கைத் தீவின் 2012 ஆம் ஆண்டுக்குரிய நிலவரம் மிகப் பாதகமான திசைவழியைக் கொண்டதாக அறிக்கையிட்டுள்ள லண்டன், 2013 இல் தனது தேசிய விமான சேவையான பிரிட்டிஷ் எயார்வேர்ஸ்சை கடந்த திங்களன்று கொழும்பு ஓடுபாதையில் சாதகமான திசைவழியில் தரையிறக்கியுள்ளது.

மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் மிக மோசமாகப் பயணித்துச் செல்லும் ஒரு நாடெனவும், பொறுப்புக் கூறலுக்குரிய தார்மீகத்தை துச்சமென மிதிக்கும் தேசமெனவும் அடையாளப்படுத்தும் அதே நாட்டில் தமது பயணிகள் விமானத்தை இறக்க அனுமதித்த லண்டனின் துணிவையும் சற்று வியப்புக்குரியதாக நோக்கலாம். ஆயினும் பொருளாதார நலன்களை முன்னிறுத்திய தேசிய நலன்களுக்கும், அரசியல் தடங்களுக்கும் உள்ள இடைவெளியையும் இது சற்று பகிரங்கப்படுத்துவதை மறுக்க முடியாது.

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை சிறப்பு விமானங்களில் அனுப்பிய லண்டனுக்கு அதே இலங்கைத்தீவின் விமான ஓடுபாதையில் தனது தேசிய விமான சேவை விமானங்களை இறக்குவது ஒரு கடினமான விடயமும் அல்ல. இதேசமயத்தில் இலங்கை தொடர்பாக முடிவெடுக்கும் லண்டனின் தீர்மானமெடுக்கும் சக்தியில், ஈழத்தமிழ் மக்களின் திரள்நிலை அரசியலின் தாக்கம் இன்னமும் பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இது வெளிப்படுத்துகின்றது.

ஶ்ரீலங்கா போன்ற நாடுகள் மேற்கொள்ளும் இன்னொரு தேசிய இனத்தின் மீதான மிகக் குரூரமான நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் திட்டமிடல்கள் குறித்த மேற்குலகின் அளவுமானிகள் பொதுவாகவே உண்மை நிலையை விட சற்றுக் கீழ்நிலையில் பேணப்படுவதே வழமை! இறையாண்மையுடைய நாடு என்ற ஶ்ரீலங்காவின் ஒரேயொரு தகுதியும் இதற்குக் காரணமாகும். இதனால்தான் தமிழ் மக்கள் கோரும் ஶ்ரீலங்கா மீதான பொருளாதாரத் தடை குறித்து இன்னமும் மேற்குலகம் பரிசீலிப்பதற்காக வேளையொன்று உருவாகவில்லை.

ஐ.நா.வின் சாசனத்திலுள்ள 47 ஆம் இலக்க சரத்து, மற்றும் அதன் தொடக்கவுரை ஆகியன சில உள்ளக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பொருளாதாரத் தடைகள் உதவுவதாகக் குறிப்பிடுவதும், இதனைவிட அடிப்படை மனித உரிமைகள், ஆண் பெண் சமத்துவம், நல்ல அயலவர்களாக ஒன்றிணைந்த அமைதியான வாழ்வு, பொதுநலனுக்கு முரணான ஆயுதப் பலப்பிரயோகம் சம்பந்தமான கட்டுப்பாடு, எல்லா மக்களினதும் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கான அனைத்துலக மட்ட ஊக்குவிப்பு ஆகிய விடயங்களில் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவே பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாக ஐ.நா.வின் சாசனம் மேலும் விபரிக்கின்றது.

ஆயினும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறான முரண்நிலைகளை வெளிப்படுத்தும் கொழும்புக்கு எதிராக மட்டும் இன்னமும் பொருளாதாரத் தடைகள் என்ற பேச்சே எடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் அறிக்கையிடல்களில் மட்டுமே மேற்குலகம் கவனம் செலுத்துகிறது. ஶ்ரீலங்கா விடயத்தைப் பொறுத்தவரை இன்னமும் மேற்குலகின் அரசியல் மற்றும் இராஜதந்திர முன்னெடுப்பின் ஒரு அங்கமாக ஒரு தீவிர நிலை உருவாகவில்லையெனிலும், கொழும்பின் தொடர் ‘நட்டாமுட்டித்தனம்’ விரைவில் அவ்வாறன ஒரு நிலையை உருவாக்கும் எனவே ஊகிக்கப்படுகிறது.

1995 இல் ‘Dayton Agreement’ எனப்படும் டேரொன் ஒப்பந்தத்தை சேர்பியர்கள் வேறுவழியின்றி ஏற்றுக்கொள்ள பொருளாதாரத் தடைகள் பெரும் பங்கு வகித்தபோது, அப்போதைய அமெரிக்க அரச தலைவர் பில் கிளிங்டன் ‘நாம் விரும்பிய முடிவை இராஜதந்திரமும் பொருளாதாரத் தடைகளும் ஏற்படுத்தியதாக’ குறிப்பிட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆகையால், பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானங்கள் 13 வருடங்களுக்குப் பின்னர் கொழும்புக்குப் பறந்ததன் ஊடாக அதிகமான கேள்வி எழுப்பி நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதற்குமாறாக உலக ஒழுங்கின் சில நீக்குப் போக்குத் தன்மைகளை உள்வாங்க வேண்டும். அமெரிக்கா – சீனா, வடகொரியா – தென்கொரியா, வெனிசூலா – அமெரிக்கா போன்ற நேரெதிர் நாடுகள் கூட தமக்கிடையே சில வணிக உறவுகளை பேணியபடியே முரண்படுவது உங்களுக்கு உதவி செய்யக்கூடும்.

ஆனால் பிரிட்டிஷ் எயார்வேஸ் தனது சேவைகளை மீண்டும் இலங்கைத் தீவுக்காக ஆரம்பிக்கத் துணிந்தமைக்கு ‘வீதிப் போராட்டங்களில் மட்டும் கவனமெடுக்கும் தமிழ்த்தரப்புகள்’, முடிவெடுக்கும் அதிகாரத்திலுள்ள ‘பிரித்தானியர்களை’ முறையாக அணுகத் தவறியமை ஒரு காரணமென்பதையும் மறுக்க முடியாது.

இதேபோல ஊடகப் பரப்புகளில் வளையவந்த லண்டனின் இலங்கை தொடர்பான அறிக்கையில் கூட பொதுநலவாய மாநாட்டில் லண்டன் பிரசன்ன மறுப்புப் குறித்துத் தெளிவாக சுட்டிக்காட்டப்படவில்லை. அதற்கு மாறாக சட்டவிரோக ஆட்கடத்தல்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறைகள் உட்பட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் கடந்த ஆண்டிலும் நீடித்ததாக கொழும்பு மீது லண்டன் குற்றஞ்சாட்டுகிறது.

அத்துடன் முடிவுரையாக மனிதவுரிமை மேம்பாடு, ஜனநாயகம் போன்ற விடயங்களில் பொதுநலவாக அமைப்புக்களின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை பின்பற்றுமாறும் கொழும்பை அது வலியுறுத்துகிறது. அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாயத் தலைவர்களின் கொழும்பு மாநாடு ஆரம்பமாவதற்கு இடையில் தான் கோரும் கடப்பாட்டுக்கு கொழும்பு மசியாவிட்டால் ‘பொதுநலவாய’ முடிவு ஒன்று எடுக்கப்படுமென்பதை லண்டன் கோடிடுகிறது.

ஆனால் அண்மையில் இந்தியக் குழு மேற்கொண்ட இலங்கைப் பயணத்தின் பின்னர் ‘எழும்’ தமிழ் மக்களுக்குரிய இடைக்கால நிர்வாக அலகு குறித்த பேச்சுக்களில் கோத்தாபய காட்டும் சீற்றம், கொழும்பு மயில் ‘இறகு’ போடுவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை. வடக்கு கிழக்கிற்கு தனியான நிர்வாக முறையை பொருத்தமற்றதெனக் கூறும் கோத்தா, இவ்வாறான தனியான நிர்வாக அலகொன்றை உருவாக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் அவதானம் செலுத்துவதாகவும் அணண்மையில் இடம்பெற்ற இந்தியக் குழுவின் பயணத்தின்போது கூட்டமைப்பு இவ்வாறான யோசனையைப் பரிந்துரைத்தாகவும் கூறுகிறார்.

ஆனால், இதிலுள்ள வேடிக்கையென்னவென்றால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான ஒரு இடைக்கால நிர்வாக அலகு குறித்த யோசனைகளை தாம் முன்வைக்கவில்லையென கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் அடித்துக் கூறுகிறார். அத்துடன் ‘இடைக்கால நிர்வாக அலகு’ குறித்தல்ல, வட மாகாண சபைத் தேர்தலிலேயே தமது கவனம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அவ்வாறாயின் இடைக்கால நிர்வாக சபை கோரிக்கையை விடுக்கும் தமிழர் தரப்புக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவுநிலை முரண்பாட்டுக்குரியதென கூட்டமைப்பு அடையாளப்படுத்துகின்றதா என்பதும் தெரியவரவில்லை. இதனால் மலிந்தால் :சந்தைக்கு வருமென்ற நம்பிக்கையுடன் இடைக்கால நிர்வாக சபை குறித்த விடயத்திலும் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை.

http://tamilworldtoday.com/archives/5612

 

 

 
தொடர்ந்து வாசிங்கோ... -------------   களவிதிகளின் படி இணைப்பு முற்றாக கொடுக்கப்பட வேண்டும்.

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் நிறுவனத்தை பிரித்தானிய அரசு இயக்குவதாய் இருந்தால் இந்தக்கேளவியைக் கேட்கலாம்..

பிரயாணிகள் கூடுகிறார்கள் எயர் லங்க்கா தனது தேவைக்கு மேலான பயணிகளை மற்றைய மற்றவற்றுக்கு விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும் இனி எல்லோரும் BA யிலாவது பறவுங்கள் கட்டாயம் இலங்கை போயேயாக வேண்டுமாயின்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.