Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுரேஸ் எம்.பியிடம் 4 ஆம் மாடியில் 2 மணிநேரம் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5(1557).jpg

-சுமித்தி தங்கராசாஎஸ்.கே.பிரசாத்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் நான்காம் மாடியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் இரண்டு மணிநேரம் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணைக்காக நான்காம் மாடிக்கு வருகைதருமாறு கடந்த 12 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பு உரிய காலத்தில் கிடைக்காமையினால் அன்றைய தினம் அவரால் நான்காம் மாடிக்கு செல்லமுடியவில்லை. இந்நிலையிலேயே இன்றையதினம்  காலை 10 மணிமுதல் 12 வரை  விசாரணை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

'யாழ்ப்பாணத்தில் இராணுவ மயமாக்கல்' என்ற தலைப்பில் 'டைம்ஸ் ஒப் இந்தியா'  என்ற இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய  செய்தி தொடர்பாகவே விசாரணை மேற்கொண்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ ரகசிங்களை வெளியிட்டுள்ளமை தொடர்பில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இராணுவ இரசியங்களை வெளியிடவேண்டும் என்ற தேவை எமக்கு இல்லை என்றும் தேர்தல் காலத்தில் இவ்வாறான விசாரணைகளை மேற்கொண்டு அரசாங்கம் எங்களை முடக்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளே இவ்வாறான விசாரணை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/64406--4-2-.html

 

தமிழர்களின் இருக்கும் சுதந்திர குரல் வளையையும் நெரிக்கும் செயல்பாடுகளின் ஒரு அங்கமே இதுவும்.

 

இந்த சிங்கள பயங்கரவாதிகளுடன் வாழ முடியாது வாழ கேட்பதும் நியாயம் இல்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் தொடர்பில் கருத்து தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமை: சுரேஷ் பிரேமசந்திரன்


 

By M.D.Lucias

 

இலங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது கருத்துக்களை தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் இன்று காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை கொழும்பு 4ஆம் மாடியில் புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்தியாவிலிருந்து வெளியாகும் அச்சு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்று தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் இடம்பெற்றன. அந்த செவ்வியில் நாட்டின் பாதுகாப்பிற்கும் இராணுவத்தின் இரகசியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தாக கூறி இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த விசாரணைக்கு வருமாறு எனக்கு 12ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டது, எனினும் நான் இன்றே விசாரணைக்குச் சென்றிருந்தேன்.

யாழ்ப்பாணம் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கடமையில் உள்ளனர் என நான் அந்த செவ்வியில் தெரிவித்திருந்த விடயங்கள் ஏற்கனவே பல ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்தன. இருப்பினும் இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தும் வகையில் நான் கருத்து தெரிவித்திருந்ததாக கூறி இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.  ஆனால் நான் அவ்வாறு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இலங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது கருத்துக்களை தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4066

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.