Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக ஜனநாயக நாடுகளின் வரிசையில் 57ல் இருந்து 89க்கு பின்தள்ளப்பட்டது இலங்கை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்-

democracy-index-201207%20copy_CI.jpg

 

தி எகோனோமிஸ்ட் சஞ்சிகையின் துணை அமைப்பான உலக பொருளாதார புலனாய்வு பிரிவு அறிக்கையிட்டது:-

 

தி எகோனோமிஸ்ட் சஞ்சிகையின் துணை அமைப்பான உலக பொருளாதார புலனாய்வு பிரிவினரால் உலகில் உள்ள ஜனநாயக நாடுகளை பட்டியலிட்டுள்ளதில் 2012 ஆம் ஆண்டு இலங்கை 89 ஆவது இடத்தில் உள்ளது.

 

2011 ஆம் ஆண்டு அறிக்கையில் பிரகாரம் இலங்கை 57வது இடத்தில் இருந்ததுடன் கடந்த வருடத்தில் இலங்கை ஜனநாயகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

2011 ஆம் ஆண்டு ஜனநாயகம் பழுதடைந்துள்ள நாடுகளில் பட்டியலில் இலங்கை இருந்தது. எனினும் தற்போது சர்வாதிகார நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையானது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளப்படும் பிரதான அறிக்கை என்பது குறிப்பிடதக்கது. 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90940/language/ta-IN/article.aspx

உலகில் மோசமான 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் [ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 00:45 GMT ] [ தா.அருணாசலம் ] UK_Flag.jpgபிரித்தானியா வெளியிட்டுள்ள, உலகில் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால், ‘மனிதஉரிமைகளும் ஜனநாயகமும் 2012‘ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படும் நாடுகள் என 27 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பெலாரஸ், பர்மா, சீனா, கொலம்பியா, கியூபா, வடகொரியா, கொங்கோ, எரித்ரியா, பிஜி, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஆக்கிரமிப்பு பலஸ்தீனப் பிரதேசங்கள், லிபியா, பாகிஸ்தான், ரஸ்யா, சவுதி அரேபியா, சோமாலியா, தென்சூடான், சிரியா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்னாம், சிம்பாப்வே, சூடான் ஆகிய நாடுகளே மோசமான மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

http://www.puthinappalakai.com/view.php?20130419108129

 

சர்வாதிகார நாடுகளின் பட்டியலில் இணைந்தது இலங்கை!

[Friday, 2013-04-19 19:14:37]
Sl-flag-seithy-150.jpg

தி எகோனோமிஸ்ட் சஞ்சிகையின் துணை அமைப்பான உலக பொருளாதார புலனாய்வு பிரிவினரால் உலகில் உள்ள ஜனநாயக நாடுகளை பட்டியலிட்டுள்ளதில் 2012 ஆம் ஆண்டு இலங்கை 89 ஆவது இடத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு அறிக்கையில் பிரகாரம் இலங்கை 57ஆவது இடத்தில் இருந்ததுடன் கடந்த வருடத்தில் இலங்கையில் ஜனநாயகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஜனநாயகம் பழுதடைந்துள்ள நாடுகளில் பட்டியலில் இலங்கை இருந்தது. எனினும் தற்போது சர்வாதிகார நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளப்படும் பிரதான அறிக்கை என்பது குறிப்பிடதக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=80821&category=TamilNews&language=tamil

 

Obituary: Death of “O’Cracy: D.E.M. O’Cracy, beloved husband of T. Ruth, Father of L. I. Berty, father of Faith, Hope and Justice,

 

இது வைத்திய கலாநிதி ரைலி ஃபேர்னாண்டொவினால் 1974 ம் ஆண்டு பிரசுரிக்கபட்டது. இன்றுதான் லண்டொன் எகொனொமிஸ்ட் அதை விளங்கியிருக்கிறது.

இந்த அறிக்கையானது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளப்படும் பிரதான அறிக்கை என்பது குறிப்பிடதக்கது.

 

எவ்வளவு தான் பணத்தை செலவழித்தாலும் உண்மைகளை மறைக்க முடியாது !

 

 

ஜனநாயகமே இல்லாத நாட்டிற்கு எப்படி 89 வது இடம் உண்மையில் பார்த்தால் இந்த பட்டியலில் ஸ்ரீலங்கா இருக்க தகுதி இல்லை

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னேற்றம் கண்டிருக்கிரானுக......

உச்சரிப்பெல்லாம் அந்த மாதிரி கிடக்கு ...... :lol: :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.