Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய மாநாட்டைத் தடுக்கும் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள்! ஶ்ரீலங்கா

Featured Replies

CHOGM-Logo-lg.jpgபொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறுவதைத் தடுப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களே உள்ளனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரு ஊடகவியலாளர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்

ஊடகவியலாளர் : 'இலங்கையைப் பொதுநலவாய அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துமாறு வலியுறுத்தி தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே! இதுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?'

அமைச்சர் : 'பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அதனைத் தடுப்பதற்கும், குழப்புவதற்குமாக பல சக்திகள் செயல்பட்டு வருகின்றமை தெரிந்த விடயமாகும். இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கனடா தான் அறிவித்துள்ளது. பிரித்தானிய மகாராணியார் சமூகமளிக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு விதமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் முட்டுக் கட்டைகளை மேற்கொண்டு வருகின்றனர். தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

குறிப்பாக இந்த முயற்சிகளின் பின்னணியில் புலம்பெயர் மக்களே உள்ளனர் என்பதும் தெளிவாகிறது. ஆனால், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறும் என்பதை பொதுநலவாய செயலகம் இலங்கைக்கு உறுப்படுத்தியுள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் பல விடயங்களையும் குறிப்பிடலாம். ஆனால் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது' என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பதிலளித்தார்.

Edited by Kashni

இதுவும் நடந்து புதிதாக நாட்டிற்கும் வரும் பிரயாணிகளை இராணுவம் தொடரும் என்ற செய்தியையும் இணைத்து பார்த்தால்.....

 

 

கோடை விடுமுறைக்கு வரும் புலம்பெயர் தமிழர்கள் பாடு ஆபத்தாகலாம் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.