Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய உறுப்புரிமையை இழக்கும் நிலைக்கு ஶ்ரீலங்கா வந்துவிட்டது!

Featured Replies

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்புரிமையை இழக்கும் கட்டத்திற்கு சிறிலங்கா வந்துவிட்டதாகவும் அரசாங்கத்தின் தீர்க்கதரிசனமற்ற செயல்பாடே இதற்குக் காரணம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்காவைப் பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்த வேண்டும் என்று கோரி பொதுநலவாயச் சட்டத்தரணிகள் சங்கம் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளமை குறித்து கருத்துரைக்கும்போது, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடனும், ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடனும் அரசாங்கம் முரண்பட்டுக்கொண்டுள்ளது. இதனால் நாட்டுக்குப் பாரியளவில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை கொண்டுவந்த போது அது பொதுநலவாய விழுமியங்களுக்கு எதிராக உள்ளது என்றும், எனவே அதனை முன்னெடுக்க வேண்டாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி பல முறை வலியுறுத்தியது. எனினும், அரசாங்கம் அதனை செவிமடுக்காமல் தீர்க்கதரிசனமற்ற முறையில் செயல்பட்டமையினால் இன்று நெருக்கடி நிலைமைக்கு நாடு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடனும் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடனும் அரசாங்கம் முரண்பட்டுக் கொண்டுள்ளது. எமது நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையானது அந்தளவுக்குப் பலவீனமடைந்துள்ளது.

பொதுநலவாய அமைப்பில் தற்போது இவ்வாறான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆச்சரியமடையவில்லை. காரணம் பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை விடயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட முறையினால் இவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்று எங்களுக்குத் தெரியும். அதனால் தான் பொதுநலவாய விதிமுறைகளை மீறிச் செயல்பட வேண்டாம் என்று நாங்கள் வலியுறுத்தினோம் என லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamilworldtoday.com/archives/5706

Edited by Kashni

ஐ.தே.கட்சி தான் இராணுவத்தை காப்பாறுவதாக கூறிகொண்டு அரசைக் காப்பாற்றிவருகிறது. தமிழ் மக்களால் நடத்தப்படும் பரப்புரைகளில் கிடைக்கும் பலனை தான் பெறுவதற்காக இடைக்கிடை இப்படிக் கதைகளை சொல்லி வருகிறது. சிராணி விவகாரத்தில் கூட நீதி மன்றம் அழைத்த போது தெரிவுக்கு குழுவுக்கு சிராணியை நீக்கும் அதிகாரம் இருப்பத்த கூறி நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்படவில்லை.

 

பின்னர் இப்போது எதற்கு பொதுநலவாயத்தை காட்டி மகிந்தாவை மிரட்டப்பார்க்கிறார்கள். "பேயிற்கு பயந்தவன் சுடலைக்குள் வீடுகட்டுவத்தில்லை". மகிந்தா இந்த கோமாளைகள் கட்சியான ஐ.தே.கட்சியை கவனத்தில் எடுக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சிங்களவங்க எல்லாரும் கேம் கேக்கிறாங்க ..... குடுக்கோணும் இவங்களுக்கு கேம்.... :)
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.