Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தேர்தலுக்கு முன்னர் சிவிலியன் ஆளுநர் தேவை: ரனில்

Featured Replies

வடக்கில் தேர்தலுக்கு முன்னர் சிவிலியன் ஆளுநர் தேவை: ரனில்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 ஏப்ரல், 2013 - 17:22 ஜிஎம்டி
130330165334_ranil_wikramasinghe_unp_sri

ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தலுக்கு முன்னர் அங்குள்ள இராணுவத்தைச் சேர்ந்த ஆளுநர் மாற்றப்பட்டு இராணுவத்தினர் அல்லாத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

அப்படி நியமிக்கப்படுபவர் வட மாகாண மக்களால் மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைவராலும் அங்கீகரிக்கப்படக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும். அது மிகவும் அவசியம் எனவும் ரனில் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க

"தேர்தல் நேர்மையாக நடந்தால் சர்வதேசம் இலங்கையை நம்பும்"

 

 

வட மாகாண தேர்தல் 2009 ஆம் ஆண்டு மற்ற மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெற்ற போதே நடைபெற்றிருக்க வேண்டும் ஆனால் அரசு எவ்வித காரணமும் இல்லாமல் தேர்தலை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தது என்று கூறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், அங்கு தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமான வகையிலும் நடைபெறும் சூழல் இல்லை என்றும் இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.

"சர்வதேச பார்வையாளர்கள் தேவை"
130215162554_jaffna_protest_sri_lanka_30

வட பகுதியின் நிலை குறித்து பல்கட்சித் தலைவர்கள் கவலை

வட மாகாண சபைக்கான தேர்தலை மேற்பார்வை செய்ய சர்வதேச பார்வையாளர்கள் அவசியம் தேவை எனவும் ரனில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த சர்வதேச பார்வையாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவது தொடங்கி, வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இருக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் உயர்மட்ட மாநாடு நடத்தப்பட்ட வுள்ள நிலையில், அந்த அமைப்பின் நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வர வேண்டும் என்றும் அவர் மேலும் வலியிறுத்தினார்.

அவ்வகையில் இலங்கை அரசு நேர்மையாக தேர்தலை நடத்தினால் சர்வதேச சமூகம் இலங்கையை நம்ப ஆரம்பிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிபந்தனைகள்
120627153037_north_lanka_304x171_gosl_no

எனினும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சுயாதீனமாகச் செயல்படக் கூடிய போலீஸ் ஆணையம், பொது சேவைகள் ஆணையம், தேர்தல் ஆணையம் மற்றும் நீதித்துறை ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், அவை அமைக்கப்படுவதற்கு தமது கட்சி ஆதரவு அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை தேர்தல் முறையாக நடைபெற்றாலே, அரசு உறுதியளித்த ஒரு விஷயத்தை செய்துள்ளது என்கிற எண்ணம் ஏற்படும் என்றும், அதன் பிறகு தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இதர பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலான பணிகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும் கூறும் ரனில் அவர்கள், தமது கட்சி அந்தத் தேர்தலில் போட்டியிடும் எனவும் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130425_ranil_northexens.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நரி..வடக்கிலை ..தன்னுடைய சுயனலத்தை காட்டி.....வாக்குகளை பிரித்து ..மஹிந்தவிற்கு....ஆதரவு வழங்கத்தான்..இவ்வளவு கதையும் கதைக்கிது....இவரை நம்பி நம்மவர்கள் ஏமாறாமல் விட்டால்..சரி...

இவ்வளவு நாளும் எங்கிருந்தார் இந்த இரணில் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.