Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் சிறையில் தாக்குதல் - இந்திய தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங் படுகாயம்! (தற்பொழுது மரணம்)

Featured Replies

2013-04-27

 

Sarabjit_Singh-2742013-150.jpg

 

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்தியர் சரப்ஜித் சிங் மீது, சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.

 

கடந்த, 1990ல், லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களில் நடைபெற்ற, தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, இந்தியர் சரப்ஜித் சிங், கைது செய்யப்பட்டார். 1991ல், அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனையை ரத்து செய்ய கோரி, சரப்ஜித் சிங், ஏற்கனவே, ஐந்து முறை கருணை மனுக்களை தாக்கல் செய்துள்ளார். எனினும், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இவருடன் அடைக்கப்பட்டிருந்த சில கைதிகள், அவரை கடுமையாக தாக்கியதில் சரப்ஜித் சிங் படுகாயமடைந்தார்.

 

தலையில் காயமடைந்த அவர், லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=81366&category=WorldNews&language=tamil

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங் கோமாவில்

27 ஏப்ரல் 2013

 

லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங், இரண்டு சக கைதிகளால் நேற்று கடுமையாக தாக்கப்பட்டார். அதில் தலையில் பலத்த காயமடைந்த சரப்ஜித்சிங் கோமா நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1990ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் சரப்ஜித் சிங் என்ற இந்தியருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கைது அந்நாட்டுப் போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர். குண்டு வெடிப்பில் சரப்ஜித்திற்கு தொடர்பு இருப்பதாக ஆவணங்களை பாகிஸ்தான் புலனாய்வு துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சரப்ஜித் சிங் பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷரப்புக்கு அவர் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. தற்போதைய அதிபர் சர்தாரிக்கும் அவர் கருணை மனு அனுப்பியுள்ளார்.

லாகூர் சிறையில் அவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர், இந்திய தூதரகமும் இதுபற்றி பேசியதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் லாகூர் சிறையில் உள்ள சரப்ஜித் சிங்கை, 2 பாகிஸ்தான் கைதிகள் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். அவர்கள் கத்தி மற்றும் செங்கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். தலையில் பலத்த காயம் அடைந்த சரப்ஜித் சிங், ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சரப்ஜித் சிங் கோமா நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக ஜின்னா மருத்துவமனை மருத்துவர்கள் வெளிப்படையாக எதுவும் கூற மறுத்து விட்டனர். இதனால் சரப் ஜித் சிங்கின் நிலை என்ன என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/27/1130427016_1.htm

 

  • தொடங்கியவர்

சரப்ஜித் சிங் ஐ பார்ப்பதற்கு  குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது..

 

உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சரப்ஜித் சிங்கை நேரில் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் விசா வழங்கி உள்ளது.

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சரப்ஜித் சிங், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை நேற்று சக கைதிகள் சிலர் கண்மூடித்தனமாகத் தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த சரப்ஜித் சிங், சுயநினைவு இல்லாமல் உயிருக்குப் போராடி வருகிறார்.

சரப்ஜித் சிங் தாக்கப்பட்டது குறித்து அறிந்ததும், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரைப் பார்க்க பாகிஸ்தான் செல்ல துடித்தனர்.

இதனையடுத்து அவர்கள், தங்களுக்கு விசா வழங்க வேண்டும் என்று கோரி அதற்கான கடிதத்தை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அளித்தனர்.

அவரது வேண்டுகோளை பரிசீலித்த பாகிஸ்தான் அரசு, விசா வழங்கி உள்ளது.இதனையடுத்து அவர்கள் பாகிஸ்தான் விரைகின்றர்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/28/1130428005_1.htm

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

சரப்ஜித் சிங் குடும்பத்தினர் இன்று பாகிஸ்தான் பயணம்.

சிறைக்கைதிகளால் தாக்கப்பட்டு லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர் சரப்ஜித் சிங்கை சந்திப்பதற்காக அவரது குடும்பத்தினர் இன்று பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்கின்றனர்.

சரப்ஜித் சிங்கின் மனைவி, இரு மகள்கள் மற்றும் சகோதரி ஆகியோருக்கு 15 நாட்களுக்கான விசா வழங்கப்பட்டுள்ளது. சரப்ஜித் சிங்கின் தலைப்பகுதியில் உள்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உள் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது, அவர் லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், தாக்குதல் சம்பவம் நடந்த சிறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோரை அந்நாட்டு அரசு இடை நீக்கம் செய்துள்ளது.

1990 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவருடைய தண்டனையை நிறுத்தி வைக்க கடந்த 2008-ஆம் ஆண்டு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டது.

இதனிடையே, சரப்ஜித் சிங் சிறையில் தாக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்க தொடர்ந்து முயற்சி செய்வோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/sarabjit-singh-admitted-in-hospital

 

  • தொடங்கியவர்

சரப்ஜித் சிங்கை இந்தியா அனுப்ப மனைவி கோரிக்கை
ஏப்ரல் 29, 2013

 

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங்கை, சந்திப்பதற்கு இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

மேலும், அவரது குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் சரப்ஜித் சிங்கை சந்திக்கலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் தங்குவதற்காக தனி அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் தற்போது தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

தலையில் பலத்த காயங்களுடன் லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித் சிங்கை அவரது மனைவி, மகள்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

சரப்ஜித் சிங்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சரப்ஜித் சிங்கை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/move-sarabjit-singh-to-india-for-treatment-family-demands

 

  • தொடங்கியவர்

சரப்ஜித்தை சிகிச்சைக்காக அனுப்பச் சொல்லி பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை
29 ஏப்ரல், 2013

 

பாகிஸ்தானின் லாகூர் சிறைச்சாலையில் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சரப்ஜித் சிங்கை மருத்துவ சிகிச்சைக்காக மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

சரப்ஜித் சிங்குக்கு இந்தியாவில் சிறப்பான மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு, அனுதாபத்துடனும், மனிதாபிமான நோக்கிலும் பாகிஸ்தான் இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும் என்று இந்தியா கேட்டுள்ளது.

 

சரப்ஜித் சிங் தற்போது சிகிச்சை பெற்றுவரும் லாகூர் ஜின்னா மருத்துவமனை அதிகாரிகளுடன் தற்போது இந்திய தூதர அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

லாகூர் சிறையில் மரண தண்டனைக் கைதியாக பல ஆண்டுகளைக் கழித்துள்ள சரப்ஜித் சிங், கடந்த வெள்ளிக் கிழமையன்று சக கைதிகள் ஆறு பேரினால் தாக்கப்பட்டார். செங்கற்கள் மற்றும் கூரான தகரத்தால் தாக்கப்பட்டதில் தலையில் காயமடைந்த சரப்ஜித் சிங் கோமா நிலைக்கு சென்றுள்ளார். தற்போது அவருக்கு அங்கே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சரப்ஜித் சிங்கின் உறவினர்கள் சிறப்பு விசா பெற்று லாகூர் சென்றுள்ளனர்.

கடந்த 1980ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 பேர் கொல்லப்படக் காரணமான ஒரு குண்டு வெடிப்புத் தொடர்பில் சரப்ஜித் சிங் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதன் பிறகு அவர் அளித்த கருணை மனுக்கள் நீதிமன்றத்தாலும், பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப்பாலும் நிராகரிக்கப்பட்டு விட்டன. சரப்ஜித் சிங் குற்றம் புரியவில்லை என்றும் அவர் இக்குற்றத்தில் தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/04/130429_sarabjith.shtml

 

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் சிறையில் இந்தியர் தாக்கப்பட்டது கவலை தருகிறது: மன்மோகன்
27 ஏப்ரல், 2013

 

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்துவருகின்ற இந்தியர் சரப்ஜித் சிங் சில கைதிகளால் தாக்கப்பட்டு சுயநினைவு இழந்து கோமா நிலையில் இருப்பது மிகுந்த வேதனைக்குரிய சோகம் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சரப்ஜித் சிங் சிறைக்குள் தாக்கப்பட்ட விதம் பற்றி முழு விவரங்களும் இன்னும் தெளிவடையவில்லை என்றாலும், செங்கற்களாலும், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களினாலும் அவர் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

லாகூரின் ஜின்னா சிறைக்குள் அவரும் வேறு சில கைதிகளும் ஒரு மணிநேரம் இடைவேளையில் தமது சிறை அறையிலிருந்து வெளியில் விடப்பட்டபோது இத்தாக்குதல் நடந்துள்ளது.

கொலை செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டு இரண்டு கைதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. சிறையின் அதிகாரிகள் இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் தலையில் மோசமான காயங்களும், உடலுக்குள் ரத்தக் கசிவுகளும் ஏற்பட்டுள்ள சரப்ஜித் சுயநினைவு இழந்து கோமா ஆழ்மயக்க நிலையில் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சரப்ஜித்துக்கு நேர்ந்ததை அறிந்து கவலைகொண்டுள்ள அவரது குடும்பத்தார் அவரைப் பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்றுவர அந்நாட்டு அதிகாரிகள் விசா கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

சரப்ஜித்துக்கு சில காலமாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவந்தது என்பதால், இது திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் என்று அவர்தம் குடும்பத்தார் கூறுகின்றனர்.

சரப்ஜித் தாக்கப்படலாம் என்று இந்திய அரசிடம் தாங்கள் புகார் தெரிவித்திருந்தும் தாக்குதலைத் தடுக்க இந்திய அரசு தவறிவிட்டது என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சரப்ஜித் சிங் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் சிறையில் இருந்துவருகிறார். இந்தியாவுக்காக பாகிஸ்தானில் வேவு வேலைப் பார்த்தார் என்றும் 14 பேர் கொல்லப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி இவர்.

பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங்.

தவறுதலாக பாகிஸ்தான் பகுதிக்குள் இவர் நுழைந்துவிட்டாரே ஒழிய இவர் குற்றமற்றவர் என அவரது குடும்பத்தினர் கூறிவருகின்றனர்.

கடந்த காலங்களில் சரப்ஜித் விவகாரம் பல முறை அரசியல் உயர்மட்டத்தில் அடிபட்டிருந்தது என்றாலும், இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவில் ஏற்பட்ட மாறுதல்களுக்கேற்ப இவரது நிலையும் அல்லாடி வந்துள்ளது.

சரப்ஜித் மன்னிக்கப்பட்டு, அவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கோரியிருந்தார்.

அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் சரஃப்ஜித்துக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை நிறுத்திவைத்திருந்தார்.

கடந்த காலங்களிலும்கூட பாகிஸ்தானின் இஸ்லாமியவாதக் குழுக்களிடம் இருந்து சரப்ஜித் எதிராக அச்சுறுத்தல்கள் வந்திருந்தன.

இந்தியாவில் நாடாளுமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் காஷ்மீரைச் சேர்ந்த அஃப்ஸல் குருவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலாளிகளில் உயிரோடு இருந்த ஒரே துப்பாக்கிதாரியான அஜ்மல் கசாப்பும் அண்மையில் தூக்கிலிடப்பட்டதை அடுத்து சரப்ஜித் சம்பந்தமாக பதற்றங்கள் அதிகரித்திருந்தன என்று அவரது குடும்பத்தார் கூறுகின்றனர்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/04/130427_indiaprisoner.shtml

 

  • தொடங்கியவர்

சரப்ஜித் சிங்குக்கு வெளிநாட்டில் சிகிச்சை? : குழு அமைத்தது பாகிஸ்தான்
ஏப்ரல் 29, 2013

 

பாகிஸ்தான் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர் சரப்ஜித்சிங்கை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவது குறித்து ஆராய வல்லுநர்கள் குழு ஒன்றை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.

சரப்ஜித் சிங்கை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் சரப்ஜித்சிங்கை இந்தியாவுக்கு கொண்டு வர அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய வெளியுறவுத்துறையும் கூறியிருந்தது.

சரப்ஜித் சிங்கை அவரது குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. தலையில் பலத்த காயங்களுடன் லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் , அவர் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://puthiyathalaimurai.tv/treatment-to-sarabjit-singh-in-foreign

 

  • தொடங்கியவர்

சரப்ஜித் சிங் உடல் நிலை தொடர்ந்து மோசம்

30 ஏப்ரல் 2013

 

சரப்ஜித் சிங் பாகிஸ்தான் சிறையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமாக உள்ளதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தானில் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்ட சரப்ஜித் சிங், கோமா நிலையில் உள்ளார். அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கலாமா என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க ஒருகுழு அமைக்கப்பட்டது அதில் பாகிஸ்தான் அரசு சார்பில் நான்கு நபர் குழுவை நியமித்து சரப்ஜித் சிங்கிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சரப்ஜித் சிங்கின் தற்போதைக்ய உடல்நிலை தற்போது மேலும் மோசமாக உள்ளதாகவும், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறப்பட்டுவருகிறது.

இதனை அடுத்து அவருக்கு தேவையான சிகிச்சையை அளிக்கும்படி பாகிஸ்தானிடம் இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/30/1130430015_1.htm

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

சப்ஜித்சிங் மரணம். உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும், மகள்களுக்கு அரசு பணி வழங்கப்படும்.

 

பாகிஸ்தானின் லாகூர் சிறையில் கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், மரணம் அடைந்த சரப்ஜித் சிங் உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரும் பட்சத்தில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

லாகூர் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், லாகூரில் இன்று காலை மரணம் அடைந்த சரப்ஜித் சிங் உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரும் பட்சத்தில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநில அரசின் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில், சரப்ஜித் சிங் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டால், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், சரப்ஜித் சிங் மகள்களுக்கு எதிர்காலத்தில் அரசுப் பணி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/1305/02/1130502004_1.htm

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

சரப்ஜித் சிங் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் - மன்மோகன் சிங்

 

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார் சரப்ஜித் சிங். இவரது மரணத்திற்குக் காரணமானவர்களை பாகிஸ்தான் அரசு தண்டித்து மரணத்திற்கு நீதி வழங்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

சரப்ஜித் சிங்கின் மரணம் வேதனை அளிக்கிறது; சரப்ஜித் சிங் வழக்கில் இந்தியாவின் கோரிக்கை மனுக்களை பாகிஸ்தான் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

இவ்வழக்கில் சரப்ஜித் சிங் குடும்பத்தினரை மனித நேயத்துடன் அணுக வேண்டும்; இந்த கொடூரமான, மனித தன்மையற்ற தாக்குதல் செயலுக்கு காரணமாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; சரப்ஜித் சிங்கிற்கு நீதி கிடைக்க வேண்டும்;

சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய அரசு செய்யும்; அவருக்கு உரிய இறுதி உரிமைகள் வழங்கப்படும்; சரப்ஜித் சிங், இந்தியாவின் வீரமகன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/1305/02/1130502002_1.htm

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சரப்ஜித் சிங் மரணம் - டிவிட்டரில் மோடி இரங்கல்

 

இந்தியாவை சேர்ந்த தூக்கு தண்டனை கைதியான சரப்ஜித் சிங் பாகிஸ்தானின் லாகூர் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயரிழந்த நிலையில், சரப்ஜித் சிங்- கின் மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவர வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் மருத்துவமனையில் இன்று காலை சுமார் 1.30 மணி அளவில் இந்தியாவை சேர்ந்த மரண தண்டனை கைதியான சரப்ஜித் சிங் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சரப்ஜித் சிங் மரணம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி,' இன்று அதிகாலை மரணமடைந்தாக அறிவிக்கப்பட்ட சரப்ஜித் சிங் விவகாரத்தில், அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவர வேண்டும்.

மேலும், “பாகிஸ்தானின் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு சரியான பதிலை மத்திய அரசு கொடுக்கவில்லை.

சரப்ஜித் சிங் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசும் சரி, இந்திய அரசும் சரி, மக்களிடம் தவறான தகவலையே அளித்து திசைதிருப்பியுள்ளன. இந்த விவகாரத்தில் பின்னணியில் உள்ள உண்மை நிலை நிச்சயம் வெளிவர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், சரப்ஜித் இழப்பு துயரம்தான். அவரது குடும்பத்துக்கு மன ஆறுதலை இறைவன் தரட்டும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் கூறியுள்ளார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/1305/02/1130502006_1.htm

Edited by துளசி

  • தொடங்கியவர்

சரப்ஜித்சிங் மரணம்: அரசு மரியாதையுடன் வெள்ளியன்று இறுதிச்சடங்கு

 

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட சரப்ஜித் சிங் மே மாதம் 2-ந்தேதி வியாழன் அன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் லாகூரில் இருந்து பஞ்சாபின் அமிர்தசரஸுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் சிலர் கடந்த 26ம் தேதி கொடூரமாக தாக்கினர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர், லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 6 நாட்களாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சரப்ஜித் சிங்கை சந்திப்பதற்காக லாகூர் சென்ற சரப்ஜித் சகோதரி, மனைவி மற்றும் 2 மகள்கள், புதனன்று இந்தியா திரும்பிய நிலையில், வியாழன் அதிகாலை ஒரு மணியளவில், சரப்ஜித் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவக் குழுவின் தலைவர் சௌகத் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், சரப்ஜித் உயிரிழந்த தகவலை ஜின்னா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து இந்தியாவில், பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்களும், சரப் ஜித் சிங்கிற்கான அஞ்சலி நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

உயிர் இழந்த சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு இந்திய அரசு 25 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. சரப்ஜித்சிங்கிற்கு குடும்பத்திற்கு ஒருகோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்றும் பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில அரசு, சரப்ஜித்சிங்கின் இரண்டு மகள்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரினீத் கவுர் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லியிருந்து புறப்பட்ட ஏர்-இந்தியா சிறப்பு விமானம் 2-ந்தேதி மாலை லாகூரை சென்றடைந்தது. எனினும், திட்டமிட்டபடி சரப்ஜித்சிங்கின் உடலை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் முறைப்படி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சரப்ஜித்சிங்கின் உடல் அம்ரித்சருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான பிஹிவிண்ட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதனிடையே, சரப்ஜித் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசத்தை நீக்குவதற்கு முன்பு இந்தியாவிடம் தகவல் தெரிவிக்கவில்லை என வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் அக்பருதீன் தெரிவித்துள்ளார். மேலும், சரப்ஜித் சிங் உயிரை காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார். சரப்ஜித் சிங்கை பிழைக்க வைப்பதற்காக பிரதமர் வரை அனைவரும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தியர் என்ற ஒரே காரணத்துக்காக தனது சகோதரர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் இதற்கு பாகிஸ்தான் அரசே பொறுப்பு என்றும் கூறியுள்ளார் சரப்ஜித் சிங்கின் சகோதரி.
எவ்வித தவறும் செய்யாத நிலையில் சரப்ஜித் சிங் பழிவாங்கப்பட்டிருப்பதாக சீக்கியர்களின் மதத் தலைமை அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி குற்றம்சாட்டி உள்ளது. சரப்ஜித் சிங்கின் மரணத்தால் பாகிஸ்தானுடனான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்தியா, சரப்ஜித் சிங்கைத் தாக்கியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

 

சரப்ஜித் கைது முதல் இறப்பு வரை

 

கடந்த 1990ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சிறையில் தவித்த சரப்ஜித் சிங், 22 ஆண்டுகளாக சந்தித்த சவால்களும், ஏமாற்றங்களும் ஏராளம்.

இந்தியாவின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங்.

  • கடந்த 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கசூர் எல்லைப் பகுதிக்கு அருகே, இந்திய - பாகிஸ்தான் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு, பாகிஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
  • பின்னர், அந்நாட்டின் லாகூர் மற்றும் பைசல்பாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சரப்ஜித் சிங் காரணம் எனக் கூறி, 1991ம் ஆண்டு அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
  • இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த நீதிமன்றம், அவருக்கான தண்டனையை உறுதி செய்தது.
  • பின்னர் 2006ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
  • தொடர்ந்து 2008ம் ஆண்டு மார்ச் மாதம், சரப்ஜித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரஃப் நிராகரித்தார்.
  • எனினும், அவருக்கு கருணை வழங்க வேண்டும் என சரப்ஜித் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவரைத் தூக்கிலிடுவதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
  • பின்னர் 2009ம் ஆண்டு இறுதியில், இங்கிலந்து வழக்கறிஞர் ஒருவர், சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.
  • பின்னர் மே 2012ம் ஆண்டு அதிபர் அசிஃப் அலி சர்தாரியிடம் சரப்ஜித் சிங் கருணை மனுத்தாக்கல் செய்தார்.
  • ஜூன் 2012ல், அந்த மனு மீதான விசாரணைக்குப் பின்னர், அவருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், ஒரு சில தினங்களுக்குப் பின்னர், சரப்ஜித் சிங்கிற்கு பதிலாக மற்றொரு இந்திய கைதியை விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அறிவித்தது, அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஒரு கருணை மனுவை, ஆசிஃப் அலி சர்தாரியிடம், சரப்ஜித் தாக்கல் செய்தார்.
  • கடந்த மாதம் 26ம் தேதி, சிறைக்குள் நடந்த மோதலில், சரப்ஜித் சிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.
  • மே 2ந்தேதி அதிகாலை ஒன்றரை மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு இருண்ட பயணம்.....

 

ஏப்ரல் 27ம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரப்ஜித் சிங்கை இந்திய தூதரக அதிகாரிகள் சென்று பார்த்தனர். அன்றைய தினமே சரப்ஜித் கோமா நிலைக்கும் சென்றார். சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அரசு குழு ஒன்றை அமைத்தது. மேலும், தாக்குதல் சம்பவம் நடந்த சிறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோரை அந்நாட்டு அரசு இடை நீக்கம் செய்தது.

 

பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானதற்கு இந்தியாவில் எதிர்கட்சிகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தன. சரப்ஜித் சிங் தாக்கப்பட்டதும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் பாகிஸ்தானின் திட்டமிட்ட செயல்கள் போலவே தோன்றுகின்றன. சரப்ஜித் சிங் ஏதும் அறியாதவர். இந்தியர்களுக்கு பாகிஸ்தான் சிறைகளில் பாதுகாப்பு கிடையாது என பா.ஜ.க செய்தித் தொடர்பாளர், ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

 

குடும்பத்தினர் சந்திப்பு:

 

தலையில் பலத்த காயங்களுடன் லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித் சிங்கை அவரது மனைவி, மகள்கள் உள்ளிட்டோர் 29ம் தேியன்று நேரில் சந்தித்தனர்.

 

வெளிநாட்டு சிகிச்சை:

 

பாகிஸ்தான் மருத்துவமனையில் ஆழ்ந்த கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியர் சரப்ஜித்சிங்கை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவது குறித்து ஆராய வல்லுநர்கள் குழு ஒன்றை அந்நாட்டு அரசு கடந்த 29ம் தேதியன்று அமைத்தது.

 

தொடர்ந்து 30ம் தேதியும் சரப்ஜித் உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வந்தன. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் அந்த தகவல் மறுக்கப்பட்டது.

 

பிரதமர் இரங்கல்:

 

பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக கோமா நிலையில் இருந்த சரப்ஜித் சிங்-ஐ சிகிச்சைக்காக மனித நேய அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் மறுத்தது தமக்கு வருத்தமளித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

"வெளியுறத்துறை கொள்கை தோல்வி"

 

பாகிஸ்தான் சிறையில் தாக்குதலுக்கு ஆளான சரப்ஜித் சிங் உயிரிழந்திருப்பது இந்திய அரசின் வெளியுறத்துறைக் கொள்கையின் தோல்வியை காட்டுவதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

 

மத்திய அரசு எல்லையில் ராணுவ வீரர்களை காக்க தவறிவிட்டதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/sarabjit-singh-dead-in-pakistan

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அப்சல் குருவின் தூக்குக்கு பழி வாங்கவே பாகிஸ்தான் திட்டமிட்டு இவரை கொன்று சிறையில் உள்ளவர்களால் கொல்லப்பட்டார் என கூறி தப்பிக்கவும் முயல்கிறது.

 

சர்வதேச பயங்கரவாதிகள் , சர்தார் உத்தம் சிங், சரப்ஜித் சிங்"

அடேங்கப்பா , வேற்று நாடுகளுக்கு போய் , குண்டுவைத்து , மக்களை கொன்றால், அவர்கள் , மகாத்மாக்கள், மாவீரர்கள், அதையே வேறு ஒருவன் இவங்க நாட்டுக்கு வந்து பண்ணினால், தீவிரவாதி, பயங்கரவாதி!
946855_649983968362022_1354693622_n.jpg
603786_649985088361910_114914925_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.