Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனு-அற்று (Vanuatu)

Featured Replies

  • தொடங்கியவர்

குளிக்கும் போது கடலின் அடியில் இருப்பதினைப்பார்க்க சுழியோடுபவர் அணியும் கண்ணாடியினை தந்தார்கள். அதனூடாக கடலின் அடியில் பார்த்தேன்.

p3060189gs0.jpg

  • Replies 290
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அப்பொழுது கடலில் ஒரே ஆரவாரம் கேட்டது. ஒருபடகில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் English survivors, French survivors னைப்பார்த்திருப்போம். படகில் திரிந்தவர்கள் French Survivors. அவர்களினை இத்தீவில் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் கொஞ்சக்காலம் வெளித் தொடர்பற்று இத்தீவில் சீவிக்க வேண்டும்.கனகாலம் இருப்பவருக்கு அதிக பணம் கிடைக்கும்.

p3060183ir8.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் சார்

நானும் நீங்களும் எடுத்த படம் எங்கே

தணிக்கை செய்யப்பட்டுள்ளதினால் யாழில் அரவிந்தன் இடவில்லை

  • தொடங்கியவர்

Barbiqueவில் செய்த அசைவ,சைவ உணவுகளுடன் சோற்றினையும் பரிமாறினார்கள். அதன் பின்பு பழங்களும் தந்தார்கள். மீன் பிடிப்பதற்கு மட்டுமே அச்சுற்றுலாக்கு வந்த சிலர் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் கரைக்கு வர அவர்களுக்கும் உணவு உண்டதும் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் இத்தீவில் சுற்றுலா பார்க்க எங்களுடன் கலந்து கொள்ளவில்லை. கிட்டத்தட்ட 3மணித்தியாலம் அக்கரையில் இருந்த பின்பு படகின் மூலம் அத்தீவின் இன்னொரு கறைக்கு வந்தோம். அங்கே 5 நிமிடங்கள் மரங்களின் ஊடாக நடக்க குகை ஒன்றை அடைந்தோம்.

p3060195xp8.jpg

  • தொடங்கியவர்

குகைக்குள் செல்லச் செல்ல ஒரே இருண்டாக இருந்தது. கூட்டிக்கொண்டு சென்றவர் மெழுகுதிரியில் உதவியுடன் வெளிச்சம் ஏற்படுத்தி, போகும் வழியில் நிலத்தில் மெழுகுதிரிகளினை வைத்து அதன் வெளிச்சத்தின் உதவியுடன் நடந்து சென்றோம்.

p3060199ge2.jpg

p3060200rl6.jpg

குகைக்குள் செல்லச் செல்ல உடலில் இருந்து வியர்வை பெருக்கெடுத்துச் சென்றது. போகப்போக குகையின் உயரம் மிகவும் குறைவாக இருந்தது.

p3060202uk7.jpg

  • தொடங்கியவர்

இக்குகையில் சிலர் தங்கியிருந்த அடையாளங்களினைக் கண்டேன்.எங்களைக்கூட்டிச் சென்றவர் மூலம் 'French Survivors இக்குகையில் இரவில் தங்கியிருந்தார்கள்' என்று அறிந்தேன்.

படத்தில் தெரியும் கை அடையாளம் இத்தீவில் வாழ்ந்த மூதாதையர்களின் கை அடையாளம் என எங்களைக் கூட்டிச் சென்றவர் சொன்னார்.

p3060206gj5.jpg

  • தொடங்கியவர்

குகைக்குள் செல்லசெல்ல பாதையின் உயரம் குறையக்குறைய தவழ்ந்து செல்ல வேண்டும். செல்லும் பாதை வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது.

சில நிமிடங்களில் பாதையின் முடிவில் சிறு துவாரத்தின் ஊடாக வெளிச்சம் தெரிந்தவுடன் மீண்டும் வந்த பாதை வழியாக, ஏற்றி வைத்த வெளிச்சத்தினை அணைத்துக் கொண்டு வந்தோம். குகையினை விட்டு வந்ததும் அடர் மரங்களின் ஊடாக நடந்து வந்து படகில் ஏறி இத்தீவினைச் சுற்றி வரும் போது இன்னுமொரு குகையினைக் கண்டோம்.

p3060211vo3.jpg

இங்கும் உள்ளே சென்று பார்க்கலாம். ஆனால் முதல் குகை போன்று இதனுள் நடப்பதற்கு ஏற்ற இலகுவான பாதை இல்லை

  • தொடங்கியவர்

படகோட்டி(சுற்றுலா வழிகாட்டி) மீன்கள் அதிகமாக உள்ள இடத்தில் படகை நிற்ப்பாட்டினார். நீச்சல் தெரிந்தவர்கள் நீரினுள் சென்று கடல்வளத்தினைப்பார்க்க, சுழியோடிகள் அணியும் கண்ணாடிகளை எங்களுக்கு படகோட்டி தந்தார். எனினும் கடல் தண்ணீர் அலைகள் அற்று தெளிவாக உள்ளதினால் படகில் இருந்தே கடலினுள் மீன்களினைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

p3060213ja1.jpg

p3060215pl3.jpg

p3060219og1.jpg

p3060224ze0.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

எங்களுக்கு இத்தீவில் சுற்றுலா காட்டியவர் படகில் இருந்தவாறே தனது கையினால் ஒரு மீனைப்பிடித்துக்காட்டினார்.

p3060225mo2.jpg

  • தொடங்கியவர்

இத்தீவில் இரண்டு கிராமங்கள் உள்ளது. அதனால் இரண்டு கிராமத்தலைவர்கள். இத்தீவினைப் இயந்திரப் படகில் சுற்றிவர கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் எடுக்கும்.

p3060229rl3.jpg

இத்தீவிற்கு நாங்கள் சென்றசமையத்தில் ஒரு கிராமத்தலைவர் இறந்து விட்டதினால், இத்தீவில் உள்ள மக்களில் பலர் இவரது வீட்டில் அஞ்சலி செய்யப் போய் விட்டார்கள். இவருக்குப் பிறகு இவரது மகன், பிறகு கிராமத்தலைவராக உள்ளார்.

  • தொடங்கியவர்

படகு இன்னொரு கரைக்கு வந்தது.கடற்கரையில் கோழிகள், குச்சுகளினைக் காணக்கூடியதாக இருந்தது

p3060231ve5.jpg

p3060232gg5.jpg

p3060233ao9.jpg

  • தொடங்கியவர்

அக்கரையில் உள்ள ஒரு வீட்டினை அடைந்ததும், அங்கே எங்களுக்கு விசுக்கோத்துடன் தேனீரும் தந்தார்கள். அவ்வீட்டில் உள்ளோர் ஒலைகளினால் வேயப்பட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்கள். குறைந்தது ஒரு பொருளாவது வாங்கி அவர்களுக்கு உதவுமாறு சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார். பொருட்களும் மிகவும் மலிவு விலையில் இருந்தன.

untitled7tb0.png

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

வரும் தமிழீழத்திலும் உள்ளூர் தயாரிப்புக்களினை சுற்றுலா வரும் வெளினாட்டுப் பிரயாணிகளுக்கு விற்பனை செய்யலாம்தானே.

தகவல் படங்கள் இணைப்புக்கு நன்றி அரவிந்தன்

  • தொடங்கியவர்

நன்றிகள் இலக்கியன்

வணக்கம் அரவிந்தன் அண்ணா இன்று தான் பார்க்க முடிந்தது வனு - அற்று பற்றி உண்மையிலே பார்த்தவுடன் அங்கு செல்லனும் போல ஒரு ஆசை பிறக்கிறது நல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

நன்றிகள் சந்தியா. வனு-அற்றினைப்பற்றி இன்னும் பல தகவல்கள் உள்ளன. 2ம் உலகப்போர், இம்மக்களின் பழக்கவழக்கங்கள் போன்றவற்றினையும் இனி வரும் நாட்களில் தருகிறேன்.

இப்ப 1600 டொலருக்கு ரிக்கட் வந்திருக்கு அதைவிட எவ்வளவு செலவாகும் அண்ணா

  • தொடங்கியவர்

விமானச்சீட்டுடன், 5 நாட்கள் மிகவும் சிறந்த விடுதியிலும் தங்குவதற்கும், அவ்விடுதியில் காலை உணவினை இலவசமாக உண்ணவும், அரை நாள் இலவசமாக போட் விலாவினை குளிரூட்டப்பட்ட வாகனத்தில் சுற்றிப்பார்ப்பதற்கு 1300 வெள்ளிக்கு(டொலர்) சீட்டினை வாங்கலாம். றனா(Tanna) என்ற தீவில் தோன்றும் எரிமலையினைப் பார்ப்பதற்கு விமானத்தில் பயணம்செய்ய ஒரு நாளுக்கு 100 வெள்ளிகள் தேவை. ஆடம்பரச் செலவு இல்லாவிடில் 2000 வெள்ளிக்குள் எல்லாவற்றினையும் பார்க்கலாம்(விமானச்சீட்டு உடன்).

விமானச்சீட்டு 700 வெள்ளிக்கும் பெறலாம். ஒரளவு வசதியுடைய விடுதியில் தங்கிக்கொண்டு இடம் பார்க்க 1600க்குள் செலவு செய்யலாம்(வீமானச்சீட்டுடன்).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப 1600 டொலருக்கு ரிக்கட் வந்திருக்கு அதைவிட எவ்வளவு செலவாகும் அண்ணா

ஈழவா

நான் ரெடி, நீங்க ரெடியா

ஈழவா

நான் ரெடி, நீங்க ரெடியா

இப்ப காசு கையைகடிக்குது டிசம்பர்மாதம் கட்டாயம் போகப்போகிறேன் :lol:

படங்களை பார்க்க ஆசையாக இருக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை பார்க்க ஆசையாக இருக்கு :lol:

போயிற்று வாரதுதானே தூயா..... :lol::lol::lol::lol:

இன்றுதான் முழுமையாக படித்தேன். எங்களின் பெரும்பாலானோருக்கு தெரியாத ஒரு இடத்தனை சுவையாக அறிய தந்திருக்கின்றீர்கள். இந்த தீவினை குறித்து நீங்கள் அறிந்த மேலதிக தகவல்களையும் தொடர்ந்து எழுதுங்கள்.

தகவல்களுக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி அரவிந்தன்.

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.