Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனு-அற்று (Vanuatu)

Featured Replies

தம்பீ அரவிந்தன் நீர் ஓடித்தான் வந்தனீர் அடுத்த முறை துயா பிரதட்டை பண்ணிக்காட்டுவா எரிமலைக்கற்களினூடாக

அதுவும் நீர் செய்ததை விட 3 மடங்கு சூட்டுடன் கூடிய கற்க்களின் ஊடாக

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

கொலை வெறியோடை தான் திரியிறுங்க போல...சி*5 அப்படி நான் செய்வதாக இருப்பின்..உங்களையும் அதில் தள்ளிவிட்டுட்டு தான் நான் பின்னால வருவன்... :twisted:

அரவிந்தன், மேலும் தகவல்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றம்..

  • Replies 290
  • Views 37.1k
  • Created
  • Last Reply

என்ன அண்ணா உங்கள் ஆக்கம் மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கோ

:mellow::rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்

வாசித்துக்கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் யமுனா

  • தொடங்கியவர்

எரிமலைக்கற்கள் உள்ள 'VETETAP FIREWALK' இருந்து, இயற்கைக் காட்சிகளினைப் பார்த்தவாறு பயணத்தினை தொடர்ந்தோம்.

p3050105hy4.jpg

அமெரிக்கா இராணுவம் 2ம் உலகப்போரில் பாவித்துக்கைவிட்ட இராணுவ இயந்திரத்தினை மரங்களுக்கிடையே கடலில் கண்டோம்.

p3050106ti5.jpg

நன்றி அரவிந்தனண்ணா வாழ்த்துக்கள்

கந்தப்பு தாத்தாவை தமிழ்ழீழ சுற்றுலா பொருப்பாளராக்கிவிடுவமோ

என்ன நினைகிறீங்கள் அரவிந்தனண்னா மற்றும் துயா :rolleyes:

ஈழவன்..நான் அதையே தான் நினைத்து கொண்டிருந்தேன்

  • தொடங்கியவர்

எமது வாகனம் பிரதான வீதியில் இருந்து(போட்விலாவினைத் தவிர்ந்து ஈவேட் தீவில் ஒரே ஒரு பிரதானவிதிதான் இருக்கிறது. அதுவும் தார் வீதி இல்லை, குன்றும் குழியுமாக உள்ளவிதி), திரும்பி புற்கள் உள்ள பாதைகளின் ஊடாக சென்றது.

p3050107fg1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அரவிந்தனண்ணா வாழ்த்துக்கள்

கந்தப்பு தாத்தாவை தமிழ்ழீழ சுற்றுலா பொருப்பாளராக்கிவிடுவமோ

என்ன நினைகிறீங்கள் அரவிந்தனண்னா மற்றும் துயா :lol:

வனு-அற்றுச்சுற்றுலாவினை வாசிக்கும்போது, தீ மிதித்தல், தேங்காய் பிடுங்குதல் என பலவற்றினை சுற்றுலா காட்டு வதினை அறியக்கூடியதாக இருக்குது. அதனால் தான் தமிழீழத்திலும் சுற்றுலாக்களில் இவற்றினைக்காட்டினால் வெள்ளைக்காரர்களும் வந்து பார்ப்பார்கள் தானே. வேகமாக செல்லும் படகில் சிட்னி ஒப்ரா கவுசுக்கு அருகில் பல சுற்றுலாக்கள் நடாத்துகிறார்கள். நாங்களும் மூதூர் குடாவிலும், தீவகக்கடலிலும் இது போலச் செய்யலாம் தானே. உலங்கு வானூர்தியிலும் வானத்தில் இருந்து யாழ்ப்பாணத்தினையோ, தமிழீழத் தலைனகர் திருமலையையோ காட்டலாம் தானே. எதோ வாசிக்கும் போது தோன்றிய எண்ணங்கள். அதற்காக தூயாவும், ஈழவனும், என்னைத் தமிழீழச் சுற்றுலாப் பொறுப்பாளர் ஆக்கிவிட்டது கொஞ்சம் கூடச் சரியில்லை

வனு-அற்றுச்சுற்றுலாவினை வாசிக்கும்போது, தீ மிதித்தல், தேங்காய் பிடுங்குதல் என பலவற்றினை சுற்றுலா காட்டு வதினை அறியக்கூடியதாக இருக்குது. அதனால் தான் தமிழீழத்திலும் சுற்றுலாக்களில் இவற்றினைக்காட்டினால் வெள்ளைக்காரர்களும் வந்து பார்ப்பார்கள் தானே. வேகமாக செல்லும் படகில் சிட்னி ஒப்ரா கவுசுக்கு அருகில் பல சுற்றுலாக்கள் நடாத்துகிறார்கள். நாங்களும் மூதூர் குடாவிலும், தீவகக்கடலிலும் இது போலச் செய்யலாம் தானே. உலங்கு வானூர்தியிலும் வானத்தில் இருந்து யாழ்ப்பாணத்தினையோ, தமிழீழத் தலைனகர் திருமலையையோ காட்டலாம் தானே. எதோ வாசிக்கும் போது தோன்றிய எண்ணங்கள். அதற்காக தூயாவும், ஈழவனும், என்னைத் தமிழீழச் சுற்றுலாப் பொறுப்பாளர் ஆக்கிவிட்டது கொஞ்சம் கூடச் சரியில்லை

சும்மா பகிடிக்கு கோபப்படாதீங்க தாத்தா :lol::D:D:D

  • தொடங்கியவர்

புற்கள் உள்ள பாதையினால் சென்ற வாகனம் World War II Relics Museum என்ற இடத்தினை அடைந்தது.

p3050108uz3.jpg

அங்கே 2ம் உலகப்போரில் அமேரிக்காப்படைகள் உபயோகித்து கைவிட்டுச் சென்ற, துருப்படைந்த தற்பொழுது பாவிக்க முடியாத மோட்டார்கள், எறிகணைகளினைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. வரைபடங்கள், புகைப்படங்கள், அருகில் உள்ள ஆழம் குறைந்த ஏரியில் விழுந்து உடைந்த விமானத்தினைப் பார்த்தவர்களின் சாட்சியங்கள்,விமானத்தின் சில பாகங்கள் போன்றவற்றினையும் பார்த்தோம். மேலதிக விளக்கங்களையும் சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குத் தந்தார்.

2ம் உலகப்போரில் 1942ம் ஆண்டில் யப்பான் படைகள் வனு-அற்றின் அருகில் உள்ள சொலமன் தீவுகளைக் கைப்பற்ற, அமெரிக்காப்படைகள் வனு-அற்றில் மேமாதம் 1942ல் தளம் அமைத்தார்கள். யப்பான் விமானம் ஒரே ஒரு முறை தான் வனு-அற்றில் குண்டினைப் போட்டது. அக்குண்டினால் ஒரு மாடு மட்டுமே உயிர் இழந்தது. பிறகு அவ்விமானம் அமெரிக்காப்படைகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அருகில் உள்ள ஆழம் குறைந்த ஏரியில் விழுந்த விமானத்தின் பகுதிகளினைப் பார்ப்பதற்கு ஏரியில் படகில் செல்ல வேண்டும்( போய் வர 1 மணித்தியாலம் எடுக்கும்). ஈவெட் தீவில் சுற்றி வரும் இச்சுற்றுலாவில் இப்பயணம் இடம் பெறவில்லை. அப்படிப் பார்க்கவேண்டும் என விரும்பினால் இதற்கு 1200 வனு-அற்றுப் பணம் மேலதிகமாகச் செலுத்த வேண்டும். அத்துடன் விமானத்தினைக் கிட்டச்சென்று பார்ப்பதற்கு நீரினுள், அடிக்கு நீந்திச் செல்லக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். இதனால் எங்களுடன் வந்தவர்கள், இதற்கு செல்வதற்கு பெரிதாக விருப்பம் தெரிவிக்கவில்லை.

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பகிடிக்கு கோபப்படாதீங்க தாத்தா :lol::lol::(:lol:

பேராண்டி, நான் எங்கே கோவிச்சனான்?

  • தொடங்கியவர்

மீண்டும் பிரதான வீதியை அடைந்த வாகனத்தில் எங்களை சிறிய 3 குன்றுகள் இருந்த இடத்துக்குக்கூட்டிக்கொன்று சென்றார்கள். ஒவ்வொரு குன்றும் முறையே U,S,A என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவில் அமைந்திருந்தன. யப்பான் விமானப்படைக்கு குழப்பம் விளைவிப்பதற்காகவே(Psychological Pain) அந்தக் குன்றுகளினை அமெரிக்காப்படைகள் அமைத்தனர்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

பிறகு வாகனத்தில் பயணம் சென்று அமெரிக்கப்படைகள் அமைத்து, உபயோகித்த (தற்பொழுது கைவிடப்பட்ட) விமான ஒடுபாதையினை அடைந்தோம். முன்பு வென்னீர் ஊற்று உள்ள நீர்ப்பரப்பினை கற்களினாலும், மண்களினாலும் முடி, B52 வகையிலான குண்டு வீச்சுவிமானங்கள் ஒடுவதற்கு ஏற்றவாறே இவ் ஓடு பாதையினை அமைத்தார்கள். இப்படியான ஒடுபாதை, தற்காலத்தில் உலகில் மிகவும் சிறிய விமானங்கள் ஒடுவதற்கு உபயோகப்படுத்தப் படுகிறது. இவ் ஒடு பாதையில் விமானம் எத்திசையில் இருந்து இறங்குவது பற்றியும் விளங்கப்படுத்தினார்கள்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மதியம் 1 மணி ஆக எல்லோருக்கும் நல்ல பசி. எங்கள் வாகனம் Beachcomber என்ற இடத்தை அடைந்தது. ஈவெட் தீவைச்சுற்றி ஒருநாள் பயணம் என்ற இச்சுற்றுலாவை நடாத்தும் அவுஸ்திரெலியாக்காரரின் சொந்தமான விடுதியான Beachcomber lodgeம் அங்குதான் இருந்தது. நாங்கள் உண்பதற்கு உணவு அங்கே தயார் செய்யப்பட்டிருந்தது.

p3050112kb3.jpg

நாங்கள் அங்கே செல்ல, வரவேற்புக் கீதங்களினை இசைக்கருவிகளின் உதவியுடன் பாடி எங்களை வரவேற்றார்கள்.

p3050113xh9.jpg

எல்லோருக்கும் பசித்திருந்தாலும், அங்கே இருந்த மூன்றுவகையான வெப்பனிலையில் உள்ள நீர்னிலைகளினைக் கண்டதும் பசியினை மறந்து அதில் நீந்தச் சென்றோம்.

untitled1yd4.png

p3050116rc3.jpg

p3050115eh5.jpg

untitled2af5.png

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

குளித்துவிட்டு மதிய உணவு உண்ணச்சென்றோம். மீன், இறால் உட்பட பலவிதமான கடல் உணவுகளுடன், மரக்கறி உணவுகள், கோழிக்கால்கள், மாட்டிறச்சி என சோற்றுடன் உணவுகள் அங்கே இருந்தன. இதை விட இத்தாலி நாட்டின் உணவுகளும் அங்கே இருந்தன. விருப்பமானவற்றினை உண்டபின்பு, வாழை இலையில் இருந்த சிறு துண்டுகளாக்கப்பட்ட வெவ்வேறு விதமான பழங்களினை உண்டோம். அதன்பிறகு சுவையான குளிர்களி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. சாப்பிட்டதும் சிலர் மீண்டும் நீர் நிலைகளில் நீந்தச்சென்றார்கள். சிலர் கடலில் சிறு படகில் சென்றார்கள். நான் கடலில் coral போன்ற கூரிய கற்கள் இருந்ததினால், அவதானித்து கவனமாகச் சென்று கடலில் குளித்தேன்.

kitesurfinginfrontofunixt3.jpg

upintheairkitestf1.jpg

கடற்கரையில் பல உயிர் உள்ள சோகிகளும், சங்குகளும் ஊர்ந்து திரிவதினை காணக்கூடியதாக இருந்தது.

p3050122jq0.jpg

Edited by Aravinthan

:lol::lol::lol: உயிரோடா???
  • தொடங்கியவர்

:rolleyes::lol::lol: உயிரோடா???

ஆமாம்

ஓ மேலும் சொல்லுங்கள் அரவிந்தன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான விடயம் அரவிந்தன் அண்ணா.. மிக்க நன்றி தகவலுக்கு..

இன்றுதான் முழவதும் வாசித்தேன்.. என்ன என்னுடைய 1 மணித்தியாலத்தை செலவழித்துவிட்டேன்.. மிக்க நன்றி!

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துப் பகிர்ந்த கிஷானுக்கு நன்றிகள்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

குளித்தபின்பு Beachcomber அடைந்ததும், எங்கள் வாகன ஓட்டி, வனு-அற்று மக்கள் விரும்பி உண்ணும் தேங்காய் நண்டினைப்(Coconut Crabs) பற்றி விளக்கம் தந்தார். ஏற்கனவே நான் இந்நண்டு பற்றி முன்னர் விளக்கம் தந்து இருக்கிறேன்.( http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=209694 ) (தற்பொழுது நான் யாழில் உபயோகிக்கும் Avatarலும் இந்த நண்டின் படத்தினைக் காணலாம்)

p3050120ze9.jpg

இந்நண்டினைத் தூக்கி பாருங்கள் என்று எங்களிடம் அவர் சொல்ல, கடித்துவிடும் என்ற பயத்தில் நாங்கள் ஒருவரும் நண்டுக்குக் கிட்டச் செல்லவில்லை.

p3050121ye0.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

வனு-அற்றில் பல இடங்களில் மனித உறுவில் செய்யப்பட்ட கறுத்த நிறமுடைய, தலைப்பகுதி பெரிதாகவுள்ள ஒரே மாதிரியான சிலைகளைக் கண்டேன்.இச்சிலையினை Beachcomberவிலும் கண்டேன். இச்சிலைகள் முன்பு வாழ்ந்த கிராமத் தலைவர்களினைக் குறிக்கும் என அறிந்தேன்.

p3050119qx4.jpg

p3050114mp7.jpg

Edited by Aravinthan

துயா உம்முடைய நண்டுகறிக்கு நல்ல நண்டு :P

அரவிந்தன் அண்ணா போல அந்த இடத்துக்கு துயா போனால் கோதோட நண்டு கறி வச்சு வன_அற்று மக்களையே நாட்டைவிட்டு துரத்தி இருப்பார் :D :P :(

:icon_idea: நண்டா இது? பார்க்க பயங்கரமா இருக்கு....அரவிந்தன் நீங்கள் அதை பிடித்து பார்க்கவில்லையா??

ஈழவன், நீங்கள் பிடித்து வெட்டி தந்தால் கறி என்ன...பொரியலே வைக்கலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.