Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Featured Replies

மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள்

 

கலந்துரையாடலுக்கு தமிழ்ப்படைப்பாளிகள் கழகம் அழைப்பு

 

மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிதி சேர்ப்பு மற்றும் திரு பழ. நெடுமாறன்  எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீடு ஆகியவை பற்றிய ஒரு கலந்துரையாடலை  தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒழுங்கு செய்துள்ளது.

 

(1)   மூதூர் கிழக்கு நவரத்தினபுரம் மற்றும் கூனித்தீவு கிராமங்களில் மீள்குடியேற்றம்

 

2006 மே மாதம் 25 ஆம் நாள் காலை கொழும்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அன்று மாலை 5.15 மணி அளவில் மூதூர் கிழக்கைச் சேர்ந்த சம்பூர், கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக்குடா, கடற்கரைச் சேனை ஆகிய கிராமங்கள் மீது கண்மூடித்தனமான எறிகணை, பல்குழல் பீரங்கி, விமானத் தாக்குதல்கள் இடைவிடாது நடந்தன. இதனால் இப் பிரதேச மக்கள் உடுத்த உடையுடன் உறவுகளை இழந்து, வீடுவாசல் உடைமைகளை இழந்து ஏதிலிகளாக மட்டக்களப்பு வரையும் ஓடி ஏதிலி முகாம்களில்  சொல்ல முடியாத துன்ப துயரங்களுடன் வாழந்து வந்தார்கள்.

இவர்களில் ஏழு ஆண்டுகள் கழித்து 24 - 03 - 2013 இல்  நவரத்தினபுரம், கூனித்தீவு மக்கள்  மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சம்பூர், கடற்கரைச்சேனை மக்கள் தொடர்ந்தும் ஏதிலி முகாம்களிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

 

நவரத்தினபுரம், கூனித்தீவு மக்கள்  வாழ்ந்த வாழ்நிலங்கள்

 

) புற்களும் மரங்களுமாக வளர்ந்து காடாகக் காட்சியளித்தன.

)வீடு வாசல்கள் உடைக்கப்பட்டு முற்றாகச் சேதமாக்கப்பட்டிருந்தன.

 

இந்நிலையில் மக்களே தம் சொந்த முயற்சியில் பலநாட்களாக கடினமான துப்பரவுப் பணிகளை மேற்கொண்டனர்.

ஒஃபர் (OFFER) அமைப்பு நவரத்தினபுரம் மக்களுக்கு 139 தற்காலிக கொட்டில்கள் ஒவ்வொன்றும் 18 அடி தர 14 அடி அளவில் அமைத்துக் கொடுத்துள்ளது.

அரசாங்கம் ஒவ்வொரு தற்காலிக வீட்டுக்கும் 12 கூரைத்தகடுகள், 4 சிமெந்துப் பைகள் வழங்கியுள்ளது. நீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. வேறு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.

இந்த மக்களுக்குத் தேவைப்படும் இன்றியமையாத வாழ்வாதாரத் தேவைகள்:

 

(1)   மக்களின் வாழ்வாதாரங்கள் சீராகும் வரை  உலர் உணவுகளை வழங்கல்.

(2)   வாழ்வாதார உதவிகள்

)  வீட்டு வளவினைச் சுற்றி வேலி அமைத்தல்

) விவசாய உபகரணங்கள்  வழங்கல்

இ)  பயிர் விதைகளை வழங்கல்

ஈ)  ஆடு, மாடு, கோழி வளர்ப்பு வசதிகளைச் செய்து கொடுத்தல்

உ) சுயதொழில் வழிகாட்டல், பயிற்சி, நிதி போன்றவற்றை கொடுத்து உதவுதல்.

 

நவரத்தினபுரம் மக்களுக்கு ஒரு குடும்பத்திற்குத் தொடக்க உதவியாக உரூபா 10,000 வீதம் 139 குடும்பங்களுக்கு (139 x 10,000)  உருபா 1,390,000.00 வும் 293 குடும்ப உறுப்பினர்களுக்கு மாணவர்கள் உட்பட உரூபா 1,000.00 வீதம் உரூபா 293,000.00 வும் தேவைப்படுகிறது.

 

கூனித்தீவு மக்களுக்கு 89 தற்காலிக குடிசைகள் மற்றும் கழிவறைக் கூடம் கட்டிக்கொடுக்க உரூபா 12,905,000.00 தேவைப்படுகிறது.

 

(2)   தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

 

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்ற பெயரில் ஒரு நினைவாலயம் எழுப்பப்பட்டு வருகிறது. 2010, டிசெம்பர் 15 இல் கட்டுமானப் பணி தொடக்கப்பட்டது.  இந்த நினைவு முற்றம் தஞ்சையில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் உள்ள விளார் கிராமத்தின் நுழைவில் பான்செக்கூர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது. பல ஊர்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான சிற்பிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இரவு பகல் பார்க்காமல் சிற்பங்கள் செதுக்கும் பணியில் ஈடுபட்டு நிறைவு செய்துள்ளனர்.  சோழப் பேரரசன் இராசராசன் எழுப்பிய கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே வகைக் கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டன.

 

முள்ளிவாய்க்கால் அவலக் காட்சிகளை ஓவியர் வீரசந்தானம் கல்லில் வரைந்து கொடுக்க சிற்பிகள் அதற்கு உயிர்வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.  உலகமெலாம் உள்ள தமிழர்கள் வந்து வழிபடும் புனித இடமாக இந்தக் கற்கோயில் உருவாகிறது. இதன் கட்டுமானப் பணிக்கு இதுவரை 9 கோடி உரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட கட்டுமானப் பணிக்கு மேலும்  2 கோடி உரூபா தேவைப்படுவதாகவும் அதனை தந்துதவுமாறு  உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கனடிய தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

(3)           பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்

 திரு பழ நெடுமாறன்  பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற பெயரில் 1208 பக்கம் கொண்ட நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூலை கனடாவில் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட உள்ளது.

 

மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளது..

இடம்   -  Scarborough Civic Centre

             150 Borough Drive    

         (North-west corner of McCowan Road and Ellesmere Road)

 

காலம்மே 05 (ஞாயிற்றுக் கிழமை)

 

நேரம் -  காலை 10.00 மணி

 

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு தேசியத்தை நேசிக்கும்  உறவுகளுக்குத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்பு -  647 829 4044, 416 854 5015, 416 281 1165

 

மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது 

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.