Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மீது கடுமையாக தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலவாக்கலையில் இடம் பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்டாரவளை பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் சிலர் இன்று 7 ஆம் திகதி அதிகாலை வேளையில் இனந்தெரியாத குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக ஜனாதிபதியின் புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார்.

இந்தக்கூட்டத்திற்கு பதுளை, பண்டாரவளை போன்ற பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தத் தொழிலாளர்களை அழைத்து வந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட அமைப்பாளர்களுக்குக் கடந்த சில நாட்களாக பதுளை மாவட்ட தமிழ் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.

இந்த அச்சுறுத்தல் தொடர்பாக பதுளை மாவட்ட பொலிஸாரின் கவனத்துக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட தொழிற்சங்க பணிமனைகளின் மூலமாக கொண்டு வரப்பட்டிருந்தன.

இவ்வாறானதொரு நிலையில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் பண்டாரவளை பூணாகலை இலக்கம் மூன்று தோட்டத்துக்குச் சென்று காடையர் குழுவொன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் வீடொன்றினைத் தாக்கி அங்கிருந்தவர்களைக் கடுமையாக தாக்கியுள்ளனர்.

திகாம்பரம் கட்சியின் மேதினக்கூட்டத்திற்கு இனிமேல் போவீர்களா? என்று கூக்குரல் விட்டவாறும் எச்சரிக்கை விடுத்தவாறும் காடையர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தாக்குதலைத் தடுப்பதற்கு தோட்ட மக்கள் முன்வந்த போது காடையர்கள் சரமாரியாக கல்லெறிந்துள்ளனர்.

தாக்குதல் தொடர்ந்து கொண்டிருந்த போது பொலிஸ் அவசர சேவை இலக்கமான 119 அழைப்பு எடுத்த போதும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லையென தோட்ட மக்கள் தெரிவித்தனர். அத்துடன் பண்டாரவளை பொலிஸ் நிலையமுடனும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லையென தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதன் பின்பு தோட்ட மக்கள் கொஸ்லாந்தைப் பொலிஸ{க்கு அறிவித்துள்ளனர். அதன் பின்பு அவ்விடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் தோட்ட மக்களின் ஒத்துழைப்புடன் மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்த வந்தவர்களின் ஒரு வாகனத்தினைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 051- 4842 கெரவன் ரக வாகனமொன்று பாதையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

அந்த வாகனத்தில் கத்திகள், இரும்புத் துண்டுகள், போத்தல்கள் இருந்ததாக தோட்ட மக்கள் தெரிவித்தனர். இதன் பின்பு இந்த வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஒருவர் பெண்ணொருவரும் உள்ளடக்கப்படுகின்றார். இவர்களின் நிலைமை மோசமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான அருணகிரி தியாகராஜா ( வயது 25 ) பாரிய உடற்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 53 வயதுடைய கே.பார்வதிக்கு தலையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. 33 வயதுடைய சமாதானம் என்பவருக்கு உடற்காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆலோசனைக்கேற்ப தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பூணாகலைத் தோட்ட மக்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற மூவரை கொஸ்லந்தை பொலிஸ் நிலையத்திலிருந்து அப்புத்தலை பொலிஸ் நிலையத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேக நபர்களை பண்டாரவளை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் பதுளை மாவட்டத்திலிருந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டத்தில் பங்கு பற்றிய ஆதரவாளர்களுக்குப் பதுளை மாவட்ட அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்குறித்தும் காவல் துறையினரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பூணாக்கலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை வேளையில் மிகவும் கோழைத்தனமாக தொழிலாளர் வர்க்கத்தினரைச் சேர்ந்தவர்கள் தொழிலாளர்களைத் தாக்கியுள்ளமை மிகவும் மிலேச்சத்தனமான செயலாகும். உலகத்தொழிலாளர் தினத்தில் பங்கு பற்றிய தொழிலாளர்களைத் தாக்கிய இந்தச்சம்பவம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கம் தனது கண்டனத்தினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கெதிராக உடனடி சட்ட நடடிக்கைகளில் ஈடுபடுமாறும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலாளர் அங்கத்தவர்களைத் தாக்குவதற்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து குண்டர் குழுவொன்று அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் குறித்தும் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4415

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.