Jump to content

திருப்பூரில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னைய‌ நகரம் கண்டுபிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18-tirupur-village-600.jpg

 

திருப்பூரில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு.

 

திருப்பூர்: திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம் 2,500 ஆண்டுகளுக்கு முன் வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன.

 

திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையில் நொய்யல் ஆற்றின் கரையில் உள்ளது கொடுமணல் கிராமம். சங்க காலத்தில் வணிக பெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான் அருங்கலம்' என்ற பாட்டில் மிகச் சிறந்த தொழிற்கூடங்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது, சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், வணிக தொடர்புக்கு பயன்பட்ட மேலைக்கடற்கரை துறைமுகமான முசிறி பட்டணத்தையும் இணைக்கும் கொங்கப்பெருவழி'யில் அமைந்துள்ளது.

 

கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறை செம்மொழி உயராய்வு மையம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உதவியுடன் அதன் பேராசிரியர் ராஜன் தலைமையிலான குழுவினர் கடந்த இரண்டு மாதமாக ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின்போது, தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

தமிழ்பிராமி எழுத்துக்கள், இலக்கண பிழையின்றி உள்ளன. 2, 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் படிப்பறிவில் சிறந்தவர்களாக இருந்ததற்கு சான்றாக இவை கிடைத்துள்ளன. பிற நாடுகளுடன் வணிக தொடர்புகளை வைத்திருந்ததற்கு சான்றாக வெள்ளி முத்திரை நாணயங்கள், வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. மேலும் விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல் நூற்க பயன்பட்ட தக்களி, தந்தத்தால் செய்யப்பட்ட நூல் நூற்க பயன்படும் உபகரணம், இறந்தவர்களை புதைக்கும் ஈமக்காட்டில், பெருங்கற்படை ஈமச்சின்னங்கள், சுடுமண் தக்கலி, சுடுமண் மணிகள், தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், கூரை ஓடுகள், கார் நீலியன் எனப்படும் சூதுபவள மணிகள், பளிங்கு கற்கள், வைடூரியம், வீடு, தொழிற்கூடங்கள், 218 மணிகள், சங்கு அணிகலன்கள் என நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

மொத்தம் 50 ஏக்கர் பரப்பளவுள்ள வாழ்விட பகுதியில் 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில், நடுகல், வட்ட கல் என 100 ஈமச்சின்னங்கள் உள்ளன. இதில் ஒரு ஈமச்சின்னமும் தோண்டப்பட்டுள்ளது. இதில், மூன்று அறைகள், வடமேற்கு மூலையில் உயர் வெண்கல குவளை, கீழ் பகுதி சல்லடை போல் அமைப்பும் இருந்தது.

 

வணிகர்கள் அதிகளவு வந்து தங்கியிருந்ததும் 1912ம் ஆண்டு, ஐந்து கல் தொலைவில் உள்ள கத்தாங்கண்ணியில் கிடைத்த ரோமானிய நாணய குவியலும், வணிக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. தமிழ் பிராமி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள் கிடைத்ததும், எழுத்து இலக்கண பிழையில்லாமல் உள்ளதால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் கல்வி அறிவை விளக்குகிறது.

 

வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்கள் பிராகிருத மொழியில் பெயர் பொறித்து ஆட் பெயர்கள், பெருங்கற்படை சின்னங்கள், இனக்குழு சார்ந்த வாழ்வியலையும், அவர்களுக்கு தேவையான உணவு உற்பத்திக்கு வேளாண் தொழில் மேற்கொண்டதற்கான உழவு, அறுவடைக்கான உபகரணங்கள், சேமிப்பு கிடங்குகள், கால்நடை எலும்புகள் அதிகளவு கிடைத்துள்ளதால் கால்நடை வளர்ப்பும் சிறந்து விளங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

 

400 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள் கண்டுபிடிப்பு:

 

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள பூலாம்பட்டியில் பாழடைந்த கிணற்றில் ஓலைச்சுவடிகள் கிடந்தன. தொல்லியல் ஆர்வலர் நந்திவர்மன் இதனை கண்டுபிடித்து எடுத்துள்ளார். இந்த ஓலைச்சுவடிகள் 400 ஆண்டுகள் பழமையானவை என தெரிய வந்துள்ளது.

 

இது குறித்து நந்திவர்மன் கூறுகையில்,

 

இதில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், உலகநீதி, மூதுரை, விநாயகர் அகவல், பழநி முருகன் காவடி சிந்து, பெரியநாயகி அம்மன் துதி, ராமாயண உரைநடை, மருத்துவச்சுவடிகள், திருமண மொய் கணக்கு, திருமண அழைப்பு, வரவு, செலவு ஓலைச்சுவடிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. இவற்றில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்றவை நகல்களுக்காக எழுதப்பட்டவை.

சிலவற்றில் இதுவரை அச்சில் வராத தெய்வப் பாடல்கள் தூய தமிழில் உள்ளன. திருமண சுவடியில் மணமக்களின் பெயர் மற்றும் மொய் அளித்தவர்களின் விபரங்கள் உள்ளன. வரவ, செலவு சுவடியில் வட்டிக்கு பணம் கொடுத்த விபரம், அதற்கு ஈடாக பெற்ற பொருட்களின் விபரங்கள் உள்ளன. ஓலைச்சுவடிகள் 40 செமீ நீளம், 3 செமீ அகலத்தில் உள்ளன. வடமொழி சொற்கள் ஆங்காங்கே அரிதாக உள்ளன. இந்த சுவடிகள் அருங்காட்சியக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண சுவடியில் மணமக்களின் பெயர் மற்றும் மொய் அளித்தவர்களின் விபரங்கள் உள்ளன. வரவ, செலவு சுவடியில் வட்டிக்கு பணம் கொடுத்த விபரம், அதற்கு ஈடாக பெற்ற பொருட்களின் விபரங்கள் உள்ளன. ஓலைச்சுவடிகள் 40 செமீ நீளம், 3 செமீ அகலத்தில் உள்ளன.

 

 

 

எந்த ஒரு கொம்பனும், இது தமிழனின் நகரம் இல்லையென்று கூற முடியாது! :D

 

இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்பும், புலத்தில் வாழும் தமிழர்களிடம், மேல்வரும் குணவியல்புகள் இன்னும் மாறாது அப்படியே இருப்பது, மிகவும் வியப்புக்குரியது! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.