Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த அரசுக்கு எதிராக இலங்கை முழுவதும் மாபெரும் போராட்டம்! - 700 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!!

Featured Replies

மஹிந்த அரசுக்கு எதிராக இலங்கை முழுவதும் மாபெரும் போராட்டம்! - 700 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!!

e10de7b5-9479-4612-9c71-31d1dc7d1e901.jp

 

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறுமாறு மஹிந்த அரசைக் கடுமையாக வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டத்தில் 700 தொழிற்சங்கங்கள் பங்கேற்பதுடன், இலங்கை முழுவதும் அரச எதிர்ப்புப் பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.

இதற்கமைய தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில், பொது எதிர்க்கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெறும் பிரதான பேரணி இரத்மலானை ஹெலிக்கடையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி கல்கிஸை வரை செல்லும். அத்துடன், விஸ்வரூபமெடுக்கும் இந்தப் போராட்டம் இன்று முதல் இலங்கை முழுவதும் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கும் என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தொழிற்சங்கங்களின் இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு ஆளுந்தரப்பு தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கத் தயாராக உள்ள நிலையில், அரச உயர்மட்டம் அவற்றுக்கு அச்சுறுத்தல் விடுத்துவருவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டின.

மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட நாள்முதல் அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்களும் பொது எதிர்க்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், கடந்த 15 ஆம் திகதி எதிர்ப்புப் பேரணியொன்றையும் நடத்தின.

அரச எதிர்ப்புப் போராட்டங்கள் எந்தளவிற்கு உக்கிரமடைந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத் தாம் செவ்வாய்க்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதுடன், நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி தமது மக்கள் செல்வாக்கையும் அரசுக்கு எடுத்துக்காட்டவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

மின் கட்டண அதிகரிப்பை அரசு வாபஸ்பெறவேண்டும் என வலியுறுத்தி தாம் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளால் அரசு பின்வாங்கியுள்ளது. இதுவே எமக்கு வெற்றிதான். எனினும், நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு எமது உச்சக்கட்ட எதிர்ப்பை இன்று வெளிப்படுத்தவுள்ளோம்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் 700 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. பல ஆளுந்தரப்பு தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்பகிஷ்கரிப்புக்குத் தயாராக உள்ள போதிலும் அரச உயர்மட்டத்திலிருந்து அவற்றுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

அரச நிறுவனங்களில் தொழில்புரிகின்றவர்கள் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை எடுக்கக்கூடாது என அரசால் அவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியவரும் அரச உத்தியோகத்தர்களிடம் மூன்று தடவைகள் வருகைப்பதிவு மேற்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் இன்றைய பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை தாம் வெற்றிகரமாக முன்னெடுப்பர் என்றும், இந்தப் போராட்டங்கள் இத்துடன் முடிவடைய மாட்டா என்றும் இவை புதிய பரிமாணங்களுடன் நாடுமுழுவதும் வெடித்துக்கொண்டே இருக்கும் என்றும் கூறினார் லால்காந்த.

இதேவேளை, தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் நாடுமுழுவதும் எதிர்ப்புப் பேரணிகளும் பொதுக்கூட்டங்களும் இடம்பெறவுள்ளன. இந்தப் போராட்டங்களின் பிரதான பேரணி தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் பொது எதிர்க்கட்சிகளின் பங்கேற்புடன் இரத்மலானை ஹெலிக்கடையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி கல்கிஸை நோக்கிச் செல்லவுள்ளது.

இந்தப் பேரணியில் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக்கட்சி, மௌபிம மக்கள் கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி, புதிய சிஹல உறுமய, ஐக்கிய சோஷலிஸக் கட்சி, ருஹணு மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி ஆகியன பங்கேற்கவுள்ளன.

 

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=e10de7b5-9479-4612-9c71-31d1dc7d1e90

 

தமிழர் அழிந்தவுடன் பாய் பாய் காட்டப்பட்டது இந்தியா அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல. மகிந்தாவை பதவியில் இருத்திய சிங்கள .......... 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.