Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்காளர் பட்டியலை கோரும் ராணுவம்; தேர்தல் மோசடிக்குத் திட்டம்

Featured Replies

வாக்காளர் பட்டியலை கோரும் ராணுவம்; தேர்தல் மோசடிக்குத் திட்டம்
செவ்வாய்க்கிழமை, மே 21, 2013
army%20attrocities.jpg

2002 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம சேவகர்களிடம் இருந்து படைப் புலனாய்வாளர்கள் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

தற்போது நாடளாவிய ரீதியில் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு கிராம சேவையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் நகரப் பகுதிக் கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு வழங்கப்பட்ட வாக்காளர் பெயர்ப் பட்டியலை இராணுவ முகாம்களில் இருந்து வந்து தம்மைப் புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்துபவர்கள் பெற்றுச் செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பெறப்படும் வாக்காளர் பட்டியலைக் கொண்டு செல்லும் புலனாய்வாளர்கள் அவற்றைப் போட்டோ பிரதி செய்துவிட்டு மீண்டும் கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் 2012 ஆம் அண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உள்ளவர்களில் வெளிநாடு சென்றவர்கள் வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்கள், இறந்தவர்கள் ஆகியோரின் விவரங்களையும் கிராம சேவையாளர்களிமிருந்து புலனாய்வாளர்கள் பெறுவதாக கூறப்படுகிறது.
வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலின் பிரகாரம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவப் புலனாய்வாளர்களின் இந்த நடவடிக்கை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிய இராணுவம் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவுடன் தொடர்பு கொண்டபோது அரை மணி நேர்தின் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு கூறினார். அரை மணிநேரத்தின் பின்னர் தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.

 

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=new_post&f=40

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.