Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தேர்தல்

இந்த தேர்தலில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள்? 17 members have voted

  1. 1.

    • 1) ரணில்
      10
    • 2) சந்திரிகா
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இந்தமுறை இலங்கை தேர்தலில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள்? உங்கள் பொன்னான வாக்குகளை மேலே போடுங்கள்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் தேர்தல் ஆணையாளரின் வாக்கு யாருக்கு என்று தெரியவேண்டும்

  • தொடங்கியவர்

முதலில் தேர்தல் ஆணையாளரின் வாக்கு யாருக்கு என்று தெரியவேண்டும்

எனது வாக்கு இரண்டு கெட்டவர்களில் தற்சமயம் ஓரளவு கெட்டவராக உள்ள ரணிலுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடியானால் எனது வாக்கு சந்திரிகாவிற்கு ஓரளவு கெட்டவரை பதவியைக் கொடுத்து ஏன் இன்னும் கெட்டவராக ஆக்கவேண்டும் கொஞ்சமாவது நல்லவராக இருந்துவிட்டுப் போகட்டும்

குட்டிச் சுவரில் இருக்க கழுதை தான் தகுதி

  • தொடங்கியவர்

வோட்டு போடுவதோடு யார் ஆட்சியை கைப்பற்றுவார். ரணில் கைப்பற்றினால் என்ன நடக்கும், சந்திரிகா கைப்பற்றினால் என்ன நடக்கும் என்பது பற்றிய உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

அப்பிடியானால் எனது வாக்கு சந்திரிகாவிற்கு ஓரளவு கெட்டவரை பதவியைக் கொடுத்து ஏன் இன்னும் கெட்டவராக ஆக்கவேண்டும் கொஞ்சமாவது நல்லவராக இருந்துவிட்டுப் போகட்டும்

குட்டிச் சுவரில் இருக்க கழுதை தான் தகுதி

ஆனால் அந்த குட்டி சுவரோடுதானே நம் வாழ்க்கை. சந்திரிகா ஜேவிபி கூட்டணி வென்றால் போர் திரும்பவும் ஆரம்பிக்க கூடிய அபாயம் இருக்கின்றது அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது அறிவுக்கு எட்டியவரை மீண்டும் ஒரு போர் இப்போதைக்கு சாத்தியமில்லை ஆயினும் ஜே,வி.பியினர் சும்மா இருக்க மாட்டார்கள்

ரணில் ஆட்சிக்கு வந்தால் பழைய பல்லவி தான் இப்போது மாதிரி புலிகளுடன் பேசுவோம் பேசுவோம் என்று கூறிக் கொண்டிருப்பார்

சந்திரிகா வந்தால் அடுத்த வருடம் முடியப் போகும் ஜனாதிபதிப் பதவிக்கு எப்படி ஆப்பு வைக்கலாம் என்று யோசிப்பார் டக்ளசுக்கு மீண்டும் வடக்கு கிழக்கு புனர் வாழ்வு புனரமைச்சு கிடைக்கும் சங்கரியார் சிலவேளை அம்மாவுடன் ஒண்டிக்கொள்வார் அமைச்சு இல்லாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது தூதுவர் பதவி அல்லது திணைக்கள தலைவர் பதவி

நாம் அடுத்த தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருப்போம் இந்த முறையாவது தமிழர் ஒன்றுபடமாட்டார்களா? என்ற கேள்வியுடன்

எனது அறிவுக்கு எட்டியவரை மீண்டும் ஒரு போர் இப்போதைக்கு சாத்தியமில்லை ஆயினும் ஜே,வி.பியினர் சும்மா இருக்க மாட்டார்கள்

இன்றைய உறவுப்பால செய்தியில்.. மேலும் 8 மணி செய்தியில் வன்னிதரப்பு சண்டைக்கு தயாராகும்படி மட்டக்களப்புத்தரப்புக்கு அறிவித்தல் விடுத்தார்களே.. நீங்கள் சண்டையே இல்லையென்கிறீர்கள்..

:lol: :P :D

ஆ...சண்டை எண்ட உடன இரத்தக்காட்டேறிக்களுக்கு சந்தோசத்தப் பார்....தாங்கள் மட்டும் லண்டனில பதுங்கிக் கிடந்து கொண்டு....!

:evil: :lol: :cry:

இன்றைய உறவுப்பால செய்தியில்.. மேலும் 8 மணி செய்தியில் வன்னிதரப்பு சண்டைக்கு தயாராகும்படி மட்டக்களப்புத்தரப்புக்கு அறிவித்தல் விடுத்தார்களே.. நீங்கள் சண்டையே இல்லையென்கிறீர்கள்..

:lol: :P :D

ஆ...சண்டை எண்ட உடன இரத்தக்காட்டேறிக்களுக்கு சந்தோசத்தப் பார்....தாங்கள் மட்டும் லண்டனில பதுங்கிக் கிடந்து கொண்டு....!
குருவிகாள்.. சண்டைக்கு கூப்பிட்டது இவங்கள்.. கவனிச்சியளோ..?

:D :P :D

யார் எண்டாலும் சண்டை வேணாம்...நிலைமையை உணர்ந்து ஒட்டுமொத்த தமிழ்மக்களின் தேவைகருதிச் விவேகமாய்ச் செயற்படுதலே இப்போ அவசியம்...!

சண்டை எண்டு கனைக்கிறது அவ்வளவு நல்லதில்ல...! மற்றவனின் துன்பத்தின் ஏன் இந்த மகிழ்ச்சி உங்களுக்கு...!

:evil: :idea:

யார் எண்டாலும் சண்டை வேணாம்...நிலைமையை உணர்ந்து ஒட்டுமொத்த தமிழ்மக்களின் தேவைகருதிச் விவேகமாய்ச் செயற்படுதலே இப்போ அவசியம்...!

சண்டை எண்டு கனைக்கிறது அவ்வளவு நல்லதில்ல...! மற்றவனின் துன்பத்தின் ஏன் இந்த மகிழ்ச்சி உங்களுக்கு...!

சண்டைக்கு கூப்பிடுறது இவங்கள் பேச்சு வேண்டுறது நான்போலை..

:lol: :P :D

இந்தமுறை இலங்கை தேர்தலில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள்? உங்கள் பொன்னான வாக்குகளை மேலே போடுங்கள்.

என்று BBC தொடங்கிய கருத்துக்கு மதிவதனன் கெர்டத்த பதில்.

இன்றைய உறவுப்பால செய்தியில்.. மேலும் 8 மணி செய்தியில் வன்னிதரப்பு சண்டைக்கு தயாராகும்படி மட்டக்களப்புத்தரப்புக்கு அறிவித்தல் விடுத்தார்களே.. நீங்கள் சண்டையே இல்லையென்கிறீர்கள்..

:lol: :P :D

இப்படியே கருத்தை திருப்புவதிலும், கதைவிடுவதிலும் விண்ணர் இவர். :P :P :P

என்று BBC தொடங்கிய கருத்துக்கு மதிவதனன் கெர்டத்த பதில்.

  • தொடங்கியவர்

தற்போதைய நிலைமையில் சந்திரிகாதான் முண்ணணியில் நிற்கின்றார் ???

  • தொடங்கியவர்

இலங்கையில் அண்மையில் வெளிடப்பட்ட ஒரு கருத்துகணிப்பின்படி சந்திரிகா முண்ணணியில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த கருத்துகணிப்பு சந்திரிக்காவுக்கு சார்பானவர்களால் வெளியிடப்பட்டதாக ரணில் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

moorthy.gif

tnx : thinakural

தற்போதைய சூழ்நிலையில் யார் வெல்லுவார் என்று கூறுவது கடினம்.

இலங்கை அரசியலை பார்த்தால் சந்திரிகாவின் பக்கம் தான் காத்து வீசுவதாக தெரிகிறது.

தற்போதைய சூழ்நிலையில் யார் வெல்லுவார் என்று கூறுவது கடினம்.

இலங்கை அரசியலை பார்த்தால் சந்திரிகாவின் பக்கம் தான் காத்து வீசுவதாக தெரிகிறது.

எல்லாக்குதிரையிலும் ஏறி ஓடியாச்சு.. இந்தக்குதிரை வெண்டாலென்ன அந்தக்குதிரை வெண்டாலென்ன.. இஞ்சாலை வெடிகொழுத்துறது இருக்குமட்டும் குதிரை எகிறி விழுத்தத்தான் செய்யம்.. விடுப்புப்பார்க்கும்.. உலகத்துக் குதிரையளெல்லாம் அதுக்குத் துணைபோகும்.. ஜெக்கி எப்படி ஒப்பாரி வைத்தாலும் மாற்ற முடியாது..

:lol: :P :D

கொசுத்தொல்லை தாங்கமுடியலைப்பா?

தாத்தா நான் ஒன்றும் வெல்லோணும் என்று சொல்லவில்லை.

ரனில் விட்ட தவறுகளால் மீண்டும் சந்திரிகாவின் கட்சி ஆட்சியைப்பிடிக்ககூடிய சூழ்நிலையே உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் யார் வெல்லுவார் என்று கூறுவது கடினம்.

இலங்கை அரசியலை பார்த்தால் சந்திரிகாவின் பக்கம் தான் காத்து வீசுவதாக தெரிகிறது.

எல்லாக்குதிரையிலும் ஏறி ஓடியாச்சு.. இந்தக்குதிரை வெண்டாலென்ன அந்தக்குதிரை வெண்டாலென்ன.. இஞ்சாலை வெடிகொழுத்துறது இருக்குமட்டும் குதிரை எகிறி விழுத்தத்தான் செய்யம்.. விடுப்புப்பார்க்கும்.. உலகத்துக் குதிரையளெல்லாம் அதுக்குத் துணைபோகும்.. ஜொக்கி எப்படி ஒப்பாரி வைத்தாலும் மாற்ற முடியாது..

:lol: :P :D

கொசுத்தொல்லை தாங்கமுடியலைப்பா?

தாத்தா நான் ஒன்றும் வெல்லோணும் என்று சொல்லவில்லை.

ரனில் விட்ட தவறுகளால் மீண்டும் சந்திரிகாவின் கட்சி ஆட்சியைப்பிடிக்ககூடிய சூழ்நிலையே உள்ளது.

:D :P :D

எனக்கு வோணிங் வாறது வளமை.. எதுக்கு தந்ததெண்டே தெரியாத நிலை.. அதை ஒருபக்கம் தூக்கிப் போட்டிட்டு..

கண்ணனுக்கு ஏன் வோணிங் கிடைச்சது சொல்லுங்கோ..? கண்ணன் எங்கை கோவில்மாடுமாதிரி தலையாட்ட மறுத்தார்.. சொல்லுங்கோ..

:D :P :D

அது வோணிங்கில்லை தாத்தா மெடல்

அது வோணிங்கில்லை தாத்தா மெடல்

:lol: :P :D

இலங்கைத் தேர்தலுக்குப் பின் பிரபாகரன் -கருணா மோதல் அபாயம்

கொழும்பு, மார்ச் 27:

இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ள கருணாவை ஒடுக்குவோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர்.

இதை அடுத்து, இலங்கையில் தேர்தலுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் இரு கோஷ்டிகளுக்கும் இடையில் மோதல் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில், இலங்கை கிழக்குப் பகுதியில் உள்ள போராளிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி முன்னதாக போர்க்கொடி எழுப்பினார் கர்னல் கருணா என்ற வி. முரளீதரன். இதை அடுத்து அந்த இயக்கத்திலிருந்து கருணா நீக்கப்பட்டார். பின்னர் அவருக்குப் புலிகள் தலைமை பொதுமன்னிப்பு வழங்கியது. அதைக் கருணா நிராகரித்தார். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் விரிசல் வலுத்துள்ளது.

இந்நிலையில், "கருணாவை ஒடுக்குவோம்' என்று புலிகள் சபதம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்தி:

புலிகள் இயக்கத்துக்கு பெரிய ஊறு ஏற்படுத்திவிட்டார் கருணா. அவரது ஆதரவாளர்கள் அவரைக் கைவிட்டு வெளியேற வேண்டும்.

மட்டக்களப்பு, அம்பாறை மக்களைக் கருணா தொடர்ந்து ஏமாற்றுவதைத் தேசிய தலைவர் பிரபாகரன் இனியும் அனுமதிக்க மாட்டார்.

எமது மக்களையும் எமது மண்ணையும் காப்பதற்காக கருணாவை எங்கள் மண்ணிலிருந்து ஒடுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தான் செய்த துரோகம், குற்றச் செயல் ஆகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கருணா தனது ஆதரவாளர்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்.

நாங்கள் எடுக்கும் நடவடிக்கையின்போது, எந்த ஒரு போராளியும் உயிரிழக்கக் கூடாது என்று பிரபாகரன் கருதுகிறார். அவரது நல்லெண்ணத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதை அவர்கள் கைவிட வேண்டும்.

இந்த வேண்டுகோளையும் மீறி அவருக்கு ஆதரவாகச் செயல்படுவோர், மோசமான விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

அவருடன் இருப்போர், புலிகளின் நடவடிக்கையில் உயிரிழக்க நேர்ந்தால், மாவீரர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்று புலிகளின் செய்தி தெரிவிக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது. அதில், புலிகள் நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும் அதன் ஆதரவு பெற்ற தமிழர் தேசிய கூட்டணி போட்டியிடுகிறது.

எனவே, தேர்தலுக்குப் பிறகு கருணா மீது புலிகள் ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கருணாவின் ஆதரவாளர் வரதன் தெரிவித்தார்.

தங்களிடம் 5 ஆயிரம் போராளிகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வலுத்தபோது, புலிகள் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கிழக்குப் பகுதியில் உள்ள வெருகல் ஆற்றின் கரையில் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆற்றின் மறு கரையில் கருணாவின் போராளிகள் நின்றிருந்தனர்.

அப்போதே இரு தரப்பினருக்கும் மோதல் வெடிக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால், இலங்கை ராணுவம் உஷார் நிலையில் இருந்ததால், அப்போது தவிர்க்கப்பட்டது.

- தினமணி

இலங்கையில் வீதியிலிருந்து வீட்டுக்குள் வந்த பிரசாரம்

இரா. சோமசுந்தரம்

கொழும்பு, மார்ச் 27: இந்தியாவைப் போன்றே இலங்கையிலும் இது தேர்தல் காலம்.

ஏப்ரல் 2-ம் தேதி வாக்குப்பதிவு. ஆனால், இந்தியத் தேர்தல் களத்தின் பரபரப்பு இலங்கையில் இல்லை. கொழும்பு நகரில் கூட்டணிக் கட்சிகளின் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள்கூட, தேடினாலும் கிடைக்காது. ஒலிபெருக்கி இரைச்சல் இல்லை. நகருக்கு வெளியே மிக அரிதாகவே சில சுவரொட்டிகளைக் காணமுடிகிறது.

ஆனால், வீதியில் இருக்கும் இந்த அமைதி, வீட்டுக்குள் இருப்பதில்லை. ஊடகங்கள் அனைத்திலும் தேர்தல் பிரசாரம் படு தீவிரமாக இருக்கிறது.

நாளிதழ்களில் பெரும்பகுதியான செய்திகளும். விளம்பரங்களும் தேர்தல் தொடர்பானவை.

""நீலத்துக்குப் போட்டா செகப்பாகும்'', ""செகப்புக்குப் போட்டா நீலமாகும்'', ""பாதைகள் மூடப்படவில்லை'' ""கடவுளே!'' என்பது போன்ற ஒருவரி பிரசார விளம்பரங்கள் ஐக்கிய தேசீய முன்னணியில் (ரணில் விக்கிரமசிங்க) அதிகமாக வெளியாகின்றன.

""பகலில் பேச்சு நடத்தி இரவில் அச்சத்துடன் வாழ்வதுதான் நீங்கள் தரும் சமாதானமா, பிரதமரே?'' ""யுத்த செலவுகள் இல்லாதபோது வாழ்க்கைச் செலவு கூடியது ஏன்?'' என்று கேள்விகளை எழுப்பும் சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விளம்பரங்கள். ஒரு பத்திரிகைப் பேட்டியில் ""இரு கட்சிகளுமே சமாதானத்தை முன்வைக்கிறீர்கள். அப்படியிருக்க உங்கள் இருவருக்கும் எங்கே பிரச்சினை தொடங்குகிறது?'' என்ற கேள்விக்கு, சந்திரிகா அளிக்கும் பதில்: ""அவரது மரபணுவிலிருந்து தொடங்குகிறது''.

""நிதியுதவி வழங்கும் நாடுகளுக்காக ஒரு தேர்தல் அறிக்கை, இலங்கை மக்களுக்காக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார் சந்திரிகா'' என்று காரசாரமாக மேடையில் விமர்சிக்கிறார் ரணில்.

விளம்பரம், பேட்டிகளில் ""சொல்லடி'' வலுவாகவே இருக்கிறது

தனியார் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக வருகின்றன தேர்தல் விளம்பரங்கள். முந்தைய காலகட்டங்களின் வன்முறை தற்போது இல்லை என்று விளக்கும் படக்காட்சிகளை ஐக்கிய தேசீய கட்சி விளம்பரம் செய்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் சந்திரிகா குமாரதுங்கவின் தீர்மானங்கள் கிழித்து, எரிக்கப்படும்போது ரணில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் நாடாளுமன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி, ""இதுதான் சமாதானமா?'' என்ற கேட்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.

இந்த விளம்பரங்களைத் தொடர்ந்து "இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்' என்ற அறிவிப்பு தனியாகத் தோன்றி மறைகிறது.

தனியார் வானொலியிலும் பாடல்களுக்கு இடையில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தேர்தல் பிரசாரங்கள் ஒலிக்கின்றன.

அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள் அனைத்திலும் சந்திரிகா, ரணில் விக்ரமசிங்க இருவரது பேட்டிகளும் பிரசாரக் கூட்டச் செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த தேர்தல்களில் வன்முறை, படுகொலை, குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இருந்தன. தற்போதைய தேர்தல் இத்தனை அமைதியாக நடைபெறுவது ஏன்?

தேர்தல் ஆணையத்தின் இதே விதிமுறைகள் முன்பும் இருந்தன. ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையால் ஏற்பட்டுள்ள அமைதி கெடுவதை யாரும் விரும்பவில்லை. இன்றைய அமைதியான பிரசாரத்துக்கு முக்கிய காரணம் இதுதான்.

முன்னெப்போதும் இல்லாதவகையில் இலங்கைக் காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் ரூ. 80 லட்சம் அளித்துள்ளது. விதிகள் மீறப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டினால், தோரணங்கள் கட்டினால், பேனர்கள் வைத்தால் அவற்றை அகற்றும் கூடுதல் பணிக்காக இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. (இலங்கைத் தேர்தலின் மொத்தச் செலவு ரூ.6.5 கோடி)

இலங்கைத் தேர்தலை முன்னிட்டு மார்ச் 25-ம் தேதி கொழும்பு வந்திருந்த பார்வையாளர் குழுவின் பெண்உறுப்பினர் கூறுகையில், ""பிரசாரம் இப்படி அமைதியாக நடந்தால்தான் எதன் தாக்கமும் இல்லாமல் மக்கள் சிந்தித்து வாக்களிக்க முடியும்'' என்றார்.

ஊடகங்கள் நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்று தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகவுக்குப் புகார்கள் வந்துள்ளன.

""ஊடகங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். அல்லது தங்கள் சார்பு எது என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என்று எச்சரித்துள்ளார் தேர்தல் ஆணையர் திசநாயக.

-தினமணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.