Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசினதும் தமிழக உறவுகளினதும் அழுத்தத்தை அடுத்து தமிழகத்தில் பயிற்சி பெற்றுவந்த இலங்கைப்படையினர் தமிழகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nam-thamilar.jpg

 

தமிழக மக்களினதும் தமிழக அரசினதும் அழுத்தத்தை அடுத்து தமிழ்நாடு வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரியில் பயிற்சி பெற்றுவந்த இரண்டு இலங்கையை சேர்ந்த படை அதிகாரிகள் நேற்று தமிழகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

கடந்த மே மாதம் 27 ஆம் திகதியில் இருந்து வெலிங்டன் பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரியில் ஒருவருட பயிற்சியை மேற்கொண்டு வந்த விங் கமாண்டர் எம்.எஸ் பண்டார திஸாநாயக்கா மற்றும் மேயர் சி.எஸ் கரிச்சந்திரகெட்டியாராய்ட்ச்சி ஆகிய இரண்டு அதிகாரிகளுமே அவர்களது குடும்பங்களுடன் பலத்தபாதுகாப்பின் மத்தியில் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

10 இராணுவண்டிகளில் ஆயுதம் தரித்த இந்திய இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் இரண்டு இலங்கை இராணுவ அதிகரிகளும் கோயம்புத்தூர் நகர விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

வெலிங்டன் பாதுகாப்பு சேவை கல்லூரிக்கு வெளியே இலங்கைப்படையினரை இலங்கைக்கு திருப்பி அனுப்பும்படி கோரி ம.தி.மு.க உள்ளிட்ட தமிழின உணர்வு அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தை அடுத்து மத்திய அரசு இலங்கை இராணுவ அதிகாரிகளை புனேயில் உள்ள இராணுவ தொழில்நுட்பக் கல்லூரிக்கு அனுப்பி இருக்கின்றது.

எனினும் சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இந்த இலங்கை படை அதிகாரிகளின் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளதாக தி ஜலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

தமது படை அதிகாரிகள் திட்டமிட்டபடி வெலிங்டன் பாதுகாப்பு சேவை பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி பெறாவிட்டால் இலங்கை அரசாங்கம் அவர்களை திருப்பி அழைக்கப்போவதாக பாதுகாப்பு செயலாளர் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி இருப்பதாக அந்தப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

 

(இது ஒருவித மிரட்டல் இந்திய அரசாங்கத்துக்கு…பார்ப்போம் இந்திய அரசாங்கம் தனது மக்களாகிய தமிழ்நாட்டு மக்களின் குரலுக்கு செவி சாய்க்கிறதா அல்லது தனது மக்களின் தொப்புள்கொடி உறவுகளை அழித்த இன அழிப்பு அரசின் வெற்றுக்கூச்சலுக்கு பணிகிறதா என்று.)

 

தமிழக உறவுகளின் போராட்டத்தின் உச்சகட்டமாக நேற்று முன்தினம் பலநூற்றுக்கணக்கான நாம் தமிழர் உறவுகள் சிங்கள அரசுக்கு எதிராக கோசமிட்டபடி இலங்கை சிங்கக்கொடியை கிழித்தெறிந்து சென்னை ரெஜிமண்ட் மைய வளாகத்தை சூழ முற்றுகையில் ஈடுபட்டிருந்தனர்.

 

தமிழகத்தில் இலங்கைப்படையினருக்கு பயிற்சி வழங்கப்படுவதை கடுமையாக எதிர்க்கும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய அரசை இலங்கைப்படைகளுக்கு இந்தியா பயிற்சி வழங்ககூடாது என்று பலமுறை வலியுறுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை இந்தியா இலங்கைப்படையினருக்கு பயிற்சி வழங்குவதை நிறுத்துவதை தடுக்கும் நோக்குடன் இந்திய மத்திய அரசை தமிழக மக்களின் குரலுக்கு செவிகொடுக்க வைக்காமல் திசைதிருப்பும் நோக்குடன், தமிழ்நாட்டின் எதிர்ப்பை அடுத்து தமது படையினருக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா பயிற்சி வழங்க முன்வந்துள்ளதாக சில கொழும்பு ஆங்கிலப்பத்திரிகைகள் எழுதி இருக்கின்றன.

 

http://www.ampalam.com/2013/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1/

Edited by சுபேஸ்

குன்னூரிலிருந்து இலங்கை ராணுவ வீரர்கள் வெளியேற்றம்

 

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்று வந்த இலங்கை ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

 

இலங்கையை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவும் இலங்கை வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

எதிர்ப்பு வலுத்ததையடுத்து, பயிற்சி எடுத்து வந்த இலங்கை ராணுவ வீரர்கள் கோவை வழியாக மும்பை அனுப்பப்பட்டனர். இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ தலைமையில் குன்னூரில் அனைத்துக்கட்சி போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. தங்களின் போராட்டத்தை திசை திருப்ப மத்திய அரசு நடத்தும் நாடகம் இது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/were-srilankan-army-staffs-evacuated-from-the-wellington-army-training-center

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.