Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களை அழிக்கும் திட்டமே நாட்டில் உள்ளது; எச்சரிக்கிறது பொது பல சேனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

fd462318d2c2aa8f24e2d4f56df30322.jpg

சிங்கள பௌத்த மக்களை ஏமாற்றி நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வரும் மதமாற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
'
நாடளாவிய ரீதியில் உள்ள சிங்கள மக்களை மதம் மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிகவும் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே பொலிஸ் மா அதிபர் தலையிட்டு அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புத்தசாசனம் என்ன என்பதை விளக்கி கூற கூட முடியாத, நாட்டின் புத்தசாசன அமைச்சினால், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்படி ஹங்வெல்ல, கந்தானை, பேருவளை உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான மாற்று மதங்களின் ஜெப நிலையங்கள் செயற்பாடுகள் காரணமாக பல பௌத்த மக்கள் இடையூறுகளுக்கு முகம் கொடுப்பதுடன், ஏமாற்றப்பட்டும் வருகின்றனர்.

இந்த மாற்று மதத்தினர், மக்களின் வறிய நிலைமை பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி, மத மாற்றத்தினையும் செய்து வருகின்றனர்.  

அடிப்படை வாத சமய அமைப்புகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை இலங்கையில் மாத்திரம் செயற்பட அனுமதித்திருப்பது மிகவும் கவலைக்குரியது எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தற்போது அவர்களின் இனத்தை கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட அனைத்து துறைகளிலும் தமது விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே இதன் ஊடாக உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு நாட்டை கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம்.

அத்துடன், முஸ்லிம் வர்த்தகத்தை பகிஷ்கரிக்குமாறும் முஸ்லிம் மருத்துவர்களை நிராகரிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=589542138501460022

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.