Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

bt-300x200.jpg

1987 ஜூன் மாதம் -

 

முகாம்களுக்குள் விடுதலைப்புலிகளால் முடக்கப்பட்டு மூச்சுத்திணறிய சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மூர்க்க வெறியுடன் புறப்படுகிறது.தங்களை துட்டகைமுனுக்களாக கற்பனை பண்ணிக் கொண்டிருந்த விமல் விஜயவர்த்தினா, டென்சில் கொப்பேக்கடுவ ஆகியோர் தலைமை தாங்க பலாலி படைத்தளத்திலிருந்து தொண்டமனாறு வழியாக ஒரு அணியும் அச்சுவேலி வல்லை ஊடாக இன்னொரு அணியும் நகர்கின்றன.

தொண்டமானாற்றில் விடுதலைப்புலிகள், பெரும் எடுப்பில் விமானக் குண்டுவீச்சுக்கள், கவசவாகனங்களின் துணையுடன் முன்னேறிய இராணுவ அணியைத் தடுத்து சமராடுகின்றனர். கிடுகு வேலிகளும் பனை வடலிகளும் தெருவோர மரங்களும் கக்கிய நீர்ப் பிழம்பில் படையினர் சுருண்டு விழுகின்றனர். வல்வெட்டித்துறை நோக்கி ஒரு அடி கூட முன்னேற முடியாத நிலையில் ஒரு அணி உடுப்பிட்டியை நோக்கி ஊடறுக்கிறது.

வல்லை வழியாக வந்த இராணுவம் மண்டான் சந்திக்கு அப்பால் அசைய முடியவில்லை. அந்த அணி திசை திரும்பி துவாளி வயல்வெளி ஊடாக புறாப்பொறுக்கியின் உட் பகுதிக்குள் இறங்குகிறது.
கண்டவர்களையெல்லாம் சுடுதல், காண்பவற்றையெல்லாம் அழித்தல் என்ற வெறியுடன் நகர்ந்த இராணுவம் பெண்கள், குழந்தைகள், முதியோர் என்ற பாகுபாடின்றி எதிர்ப்பட்டவர்களையெல்லாம் கொன்று தள்ளுகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயங்களில் தஞ்சமடைகின்றனர். புலிகள், படையினர் ஆலயங்களை நெருங்கவிடாமல் தடுத்துச் சமராடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான படையினர் முன் சில நூறு புலிகளே களமாடிய போதும் படையினரை மோதி நெல்லியடி மத்திய கல்லூரிக்குள் ஒதுக்குகின்றனர்.

எனினும் அடுத்த நாள் படையினர் ஏதோ ஒரு பக்கத்தால் விமானக் குண்டு வீச்சுக்களினதும் உலங்குவானூர்திகளினதும் துணையுடன் உடைக்க முயல்வார்கள் என்பதை விடுதலைப் புலிகள் நன்கே புரிந்து வைத்திருந்தனர்.

எனவே -

கிளைகளை வெட்டுவதை விட மூல வேரையே தறித்துவிட விடுதலைப்புலிகள் முடிவெடுக்கின்றனர்.

கொல்லப்பட்ட மக்களின் குருதி வெள்ளம் ஏற்படுத்திய கொதிப்பு மில்லரின் நெஞ்சுக்குள் பெரும் தீயை மூட்டுகிறது. வெடி மருந்து வண்டியுடன் உயிராயுதமாக இராணுவ முகாமுக்குள் புகுந்து வெடிக்க முடிவெடுக்கிறான்.

1987 ஜூன் 5

மில்லர் செலுத்திய வெடிமருந்து வண்டி வேகமாக வெளிவாசல் தடையைத் தகர்த்துக் கொண்டு முகாமுக்குள் பாய்கிறது.

அருகிலுள்ள ஊர்களையே அதிரவைக்கும் ஓசையுடன் பெரு நெருப்பு எழுகிறது. கட்டிடங்கள் வெடித்துச் சிதறுகின்றன.

பல நூறு படையினர் செத்து விழுகின்றனர். உயிர்தப்பியவர்கள் வேலி பாய்ந்து தோட்ட வெளிகளால் ஓட சுற்றி நின்ற போராளிகள் சுட்டுத்தள்ளுகின்றனர்.

வெற்றிக் கனவுடன் திமிர் கொண்டு நின்ற ஒரு படை முகாம் சரிந்து விழுகின்றது.

இம் மாபெரும் சாதனையின் நாயகன் கப்டன் மில்லர் தனது உயிரையே ஆயுதமாக்கி விடுதலைப் போருக்குப் பெரும் உரமூட்டிய முதற் கரும்புலி அவன். தான் தாயக விடுதலைக்கு அர்ப்பணமாகும் நாளை நேரத்தைத் தெரிந்து கொண்டே மாபெரும் தியாக வரலாற்றை இம் மண்ணுக்கு விட்டுச் சென்ற ஒப்பற்ற விடுதலை வீரன் மில்லர்.

அந்த முதல் வித்து தன்னை விடுதலை வேள்விக்கு ஆகுதியாக்கிய அந்த வரலாற்றுப் பெருமை மிக்க நாளையே நாம் கரும்புலி நாளாக நெஞ்சிருத்தி நினைவு கூருகிறோம்.

மில்லர் வழியில் மாங்குளத்தில் லெப்.கேணல் போர்க், சிலாவத்துறையில் மேஜர் டாம்போ, கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி என உலகப் போர் வரலாற்றுக்கு ஒரு புதிய அத்தியாயம் உருவாக்கப்படுகிறது.

இந்த முதல் வித்துக்கள் செத்துப் போய்விடவில்லை.

கரும்புலி அணி என ஒரு பெரு விருட்சமாக மேலெழுந்தது. அதன் ஒவ்வொரு விழுதும் ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு பழமும் எதிரியின் முள்ளந்தண்டெலும்பை முறிக்கும் வலிமை மிகு ஆயுதங்களாகின.

மில்லரின் முதல் கரும்புலித் தாக்குதல் ஒரு பெரும் வரலாற்றுத் திருப்புமுனையை உருவாக்கியது.

அத் தாக்குதல் சிங்களப் படையினரின் மனோ வலிமையை உடைத்தது. அதன் போரிடும் ஆற்றலைக் கேள்விக்குள்ளாக்கியது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்திய உதவிக்கு ஓட வேண்டி வந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படையை இறக்கவேண்டியளவுக்கு ஜே.ஆர்.பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் பொருளாதாரமே நிலைகுலைந்தது.

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதல் வெற்றி காரணமாக இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அனுராதபுரம் எல்லாளன் நடவடிக்கையில் இலங்கை விமானப் படையின் ஒரு பகுதி அழிந்து போனது.

எத்தனையோ போர்க்கப்பல்கள், டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன; இன்னும் பல பாவனைக்கு உதவாமற் போயின.

இனக் கொலை வெறியாட்டம் போட்ட எத்தனையோ படைத் தளபதிகள்; பாதுகாப்புச் செயலர்கள் கரும்புலிகள் வெடிப்புக்களில் சிதறிப் போனார்கள்.

முன்னாள் இராணுவத் தளபதியும் வட பகுதியின் கட்டளைத் தளபதியாகவுமிருந்த சரத் பொன்சேகா, ரணில் – விடுதலைப்புலிகள் பேச்சுக்களின் போது வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட வேண்டுமானால் கரும்புலிகள் அணி கலைக்கப்பட வேண்டும்” என நிபந்தனை விதித்திருந்தார்.

இதிலிருந்து கரும்புலிகள் இலங்கைப் படைத்தரப்பை எவ்வளவு தூரம் கலக்கினார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

கரும்புலிகள் தமது உயிர்களை ஆயுதமாக்கி விடுதலைக்கு ஆகுதியானவர்கள். பரந்து கிடக்கும் தாயக மண்ணில் எழுந்து அலை அடிக்கும் எங்கள் கடலில் தவழ்ந்து எம்மை வருடும் காற்றில் அவர்கள் கரைந்து கிடக்கிறார்கள்.

அவர்கள் கல்லறைக்குள் இல்லை!

ஆனால் – காவியங்கள் உண்டு; இன்னும் காவியங்கள் விரியும்.

தமிழினம் உள்ளவரை கரும்புலிகள் வாழ்வார்கள்! அவர்களது ஒவ்வொரு வரலாறும் தமிழ் நெஞ்சங்களில் கோவில்களாக குடியிருக்கும்.

“நீங்கள் உங்கள் சாவைத் தோளில் சுமந்தவர்கள்
நீங்கள் எங்கள் விடுதலையை நெஞ்சில் தாங்கிய வேர்கள்”

-தமிழ்லீடர்

http://tamilleader.com/?p=15303

 

Edited by கலையழகன்

இணைப்பிற்கு நன்றி ....

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.