Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டைதீவில் மனித எலும்புக் கூடு தீவிர விசாரணை தேவை

Featured Replies

மண்டைதீவில் மனித எலும்புக் கூடு தீவிர விசாரணை தேவை

மண்டைதீவில் வீட்டிற்கு அத்திபாரம் வெட்டும் போது, மனித எலும்புக் கூடு கண்டறிப்பட்ட விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப் படவேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் திகதி மண்டைதீவுக்குள் நுழைந்த இராணுவத்தினர், அங்கு இளைஞர்கள் பலரைக் கைது செய்து இருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இன்று வரை எந்தத் தகவலும் இல்லை. மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய இடங்களைச் சேர்ந்த சுமார் 71 இளைஞர்கள் இதன்போது காணாமல் போயினர். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந் தாயிற்று என்ற விடயம் 23 ஆண்டுகள் கடந்தும் தெரியாமல் இருப்பது துன்பத்திலும் துன்பம்.

1990-ம் ஆண்டு புலிகளின் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணக் கோட்டையில் அகப்பட்டிருந்த இராணுவத்தினரை மீட்பதற்காக அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊர்காவற்துறைப் பகுதியில் இருந்து இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த படையினர் மண்டைதீவுக்குள் ஆகஸ்ட் 25-ம் திகதி நுழைந்து சுமார் ஒரு மாதம் வரை அங்கு தங்கியிருந்தனர். இப்படை நடவடிக்கையால் மண்டைதீவு, அல்லைப்பிட்டி மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். மீண்டும் 90 ஒக்டோபரில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பியபோது மனிதப்பேரவலம் நடந்திருந்ததற்கான அடையாளங்களைக் கண்டிருந்தனர். அந்த காலப்பகுதியில் மண்டைதீவில் உள்ள தோட்டக்கிணறுகளுக்குள் மனித சடலங்கள் இருப்பதை அறிந்து அவற்றை தோண்டி எடுத்துப் பகுப்பாய்வு செய்யும் முயற்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடமும் அப்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியாக இருந்த டாக்டர் சரவண பவானந்தனுமாக கடும்முயற்சி செய்திருந்தனர்.

அவர்கள் மேற்கொண்ட பகுப்பாய்வுகள் பல விடயங்களுக்கு பதில் கூறுவதாக இருந்த போதிலும் அந்த அறிக்கைகள் வெளிவராமல் போனமை அதிர்ச்சியான செய்தியாயிற்று. எதுவாயினும் இப்போது மண்டைதீவில் கண்டறியப்பட்டுள்ள மனித எலும்புக்கூடு தொடர்பில் மரபணுப் பரிசோதனைகள் மேற்கொள் வதனூடாக 1990 களில் மண்டைதீவில் காணாமல் போன இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய முடியும். இந்த விடயத்தை அரசியல் மயமாக்காமல், அனைத்துத் தரப்பும் இணைந்து உண்மையை கண்டறியும் நோக்கில் செயற்படுவது அவசியமாகும். சில வேளைகளில் இன்னும் சில இடங் களை தோண்ட வேண்டி சூழ்நிலை இருந்தால் அதனையும்’செய்வது கட்டாயமானதாகும்.

http://bit.ly/1bn7nHi  

1012375_212111422276225_1706329449_n.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.