நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று சொல்லியிருந்தார், நேட்டோ நாடுகளின் மீது மிக கடுமையான வரிகளை விதித்திருந்தார்,
நேட்டோநாட்டின் கிரீன்லாந்தை அபகரிக்கும் முயற்சியிலிறங்கி ஏறக்குறைய நேட்டோ அமெரிக்கா நேரடி ராணுவ மோதல் நிலையை உருவாக்கினார்,
உக்ரேனுக்கு இனி அமெரிக்கா உதவாது வீண் செலவு என்றிருந்தார், கனடா அமெரிக்காவின் ஒரு மாநிலமாக்கப்படும் என்றார், கடுமையான வரிகளை கனடாமீது விதித்து சீனா இந்தியா பக்கம் அவர்களை ஓட வைக்கும் அளவிற்கு செயல்பட்டார்,
சீனா ரஷ்யாமீது ஏற்றுமதிவரி கச்சாய் எண்ணெய் விற்க தடை என்று பொருளாதார ரீதியாக மிக கடுமையான அழுத்தம் கொடுத்தார்,
ஈரான்மீதான போரில் எந்த நாடுகளையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக போர் தொடுத்தார், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் , ஈரானின் கப்பற்படை விமானப்படை, ஏவுகணை தளங்கள் 90% அழிந்துவிட்டன, போரின் முடிவை அமெரிக்கா தீர்மானிக்கும் என்றார்.
இப்போ எல்லோரும் வாங்கோ அமெரிக்காவை காப்பாத்துங்கோ என்ற நிலையை நேரே சொல்லாமல் ஹோர்முஸ் நீரிணையைக்கு பின்னால் ஒழிந்து நின்றுகொண்டு அழுகிறார்.
இப்படி பல ...றார்............என்றுபோய் ...டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற நிலமை ஆச்சு.
நேட்டோ நாடுகள் இந்த போரில் அமெரிக்கா சறுக்கினால் டிரம்பின்மீது அமெரிக்க மக்களின் கோபம் திரும்பி கோட்டபாய ஓடினமாதிரி ட்ரம்பும் ஓடும் நிலை கண்டிப்பாக வரும் என்ற கணிப்பில் இந்த போரில் டிரம்பின் தோல்விக்காக காத்திருப்பதை போலவே நடந்து கொள்கின்றன,
ஈராக் ஆப்கான் உட்பட பல போர்களில் அமெரிக்காவுடன் ஆரத்தழுவி போருக்கு போன நேட்டோநாடுகள் இப்போ தூர நின்று வேடிக்கை பார்ப்பது அமெரிக்காமீதுள்ள கோபத்திலோ அமெரிக்க வீழ்ச்சியை ரசிக்கும் போக்கிலோ அல்ல மாறாக டிரம்பின் வீழ்ச்சி செய்திக்காக காத்திருப்பதாகவே உலகின் பார்வையில் தெரிகிறது.
ட்ரம்ப் அடிக்கடி எல்லோரையும் முட்டாள்கள் என்று திட்டுவார் இப்போ அவர் தேடிய முட்டாள் அவர் வசமே உள்ளதை முற்றுமுழுதாக உணர்ந்துவிட்டார் வெக்கத்தில் வெளியே சொல்லாமல் மீண்டும் வாய் வீரத்தில் டாக்டர் பட்டம் எடுத்தே ஆவேன் என்று நிக்கிறார்.
வெறும் பணபலமும் படை பலமும் இருந்துவிட்டால் எங்கும் எதையும் வென்றுவிடலாம் என்று நினைக்கும் உலகிற்கு , அது சாத்தியமில்லை அதனையும் மீறிய புத்திசாலித்தனம் எனும் மூன்றாவதாக ஒன்று இருக்கிறது என்று ஞாபகபடுத்த உலகிற்கு இறைவன் அனுப்பிய நினைவு பரிசு அண்ணன் ட்ரம்ப் சோணமுத்தன்.
By
valavan ·
Archived
This topic is now archived and is closed to further replies.