Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: இனங்களுக்கு இடையிலான இயல்புநிலை திரும்புவதற்கு இராணுமயமாக்கல் தடைக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா: இனங்களுக்கு இடையிலான இயல்புநிலை திரும்புவதற்கு இராணுமயமாக்கல் தடைக்கல்
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 05:41 GMT ] [ நித்தியபாரதி ]


ஜனநாயக நாடொன்றில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான உறவானது, 'இராணுவத்தை பொதுமக்கள் கட்டுப்படுத்துதல்' என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது குறித்த நாட்டு இராணுவத்தை மக்கள் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையே இந்த உறவு முதன்மைப்படுகிறது.

இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் Dinesh D. Dodamgoda எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அப்பத்தியினை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அண்மையில் சிறிலங்கா இராணுவப் பயிற்சியாளர்களால் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்ட போது பாடசாலை அதிபர் ஒருவர் மரணித்ததைத் தொடர்ந்து, போருக்குப் பின்னான சிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும் என தொடர்ந்தும் பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

முப்பதாண்டுகளுக்கும் மேலாக சிறிலங்காவில் தொடரப்பட்ட இராணுவ நடவடிக்கையால் ஏற்கனவே சிறிலங்காவில் வாழும் சமூகங்கள் கலாசார மற்றும் சமூகக் கட்டமைப்புக்கள் ரீதியாக இராணுவமயமாக்கப்பட்ட நிலையில், போருக்குப் பின்னரும் தொடர்ந்தும் நிலவும் இராணுவமயமாக்கலானது இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இராணுவ மயமாக்கலானது ஒரு நாட்டில் வாழும் சமூகங்கள் மத்தியில் அதிகாரத்துவம் மிக்க சூழலை உருவாக்குகிறது. இதனால் தேசப்பற்று மற்றும் உறுதித்தன்மை போன்ற பல்வேறு விழுமியங்கள் பாதிக்கப்படுகின்றன.

இராணுமயமாக்கல் தொடரப்படும் போது குறித்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக மாறுகிறார்கள். இவ்வாறான இராணுவமயமாக்கலால் நாட்டில் இயல்புநிலை ஏற்படுவது பாதிக்கப்படுவதுடன், போரில் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மேலும் அடக்கப்படுவதற்கு அல்லது தோற்கடிக்கப்படுவதற்கு துணைபோகிறது. இதனால் நாட்டில் மீண்டும் வன்முறை ஏற்படுவதற்கான வழிகோலப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் விழுமியங்கள் அழிக்கப்பட்டன. பலவீனப்படுத்தப்பட்டன.

ஆசியாவில் மிகப் பழமையான ஜனநாயக நாடாக விளங்கிய சிறிலங்காத் தீவானது இராணுவமயமாக்கலால் பலவீனப்பட்டுள்ளது. ஜனநாயக நாடொன்றில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான உறவானது, 'இராணுவத்தை பொதுமக்கள் கட்டுப்படுத்துதல்' என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது குறித்த நாட்டு இராணுவத்தை மக்கள் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையே இந்த உறவு முதன்மைப்படுகிறது. இருப்பினும், சில அவசரகாலங்களில் பொதுமக்களின் விவகாரங்களில் இராணுவத்தினர் தலையீடு செய்கின்ற நிலை காணப்படலாம். ஆனால் இது ஒரு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

'சிறிலங்காவில் நிலவும் இராணுவமயமாக்கல்' தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் நிலூபர் டீமெல் மேற்கொண்ட ஆய்வில், "இராணுமயமாக்கல் தொடர்பான கருத்தியலானது சிறிலங்காவின் சமூகத்தையும் அதன் சிறப்பு வாய்ந்த பிரபலமான கலாசாரத்தையும் முற்றாக மாற்றியுள்ளது. நீண்ட காலமாக உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற சிறிலங்கா போன்ற நாடுகள் போர் முடிவடைந்த கையோடு இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் செயற்பாடுகளைக் கணிசமானளவு குறைக்க வேண்டும்" குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் யுத்தம் முடிவுற்றதானது நாட்டில் இயல்புநிலையைக் கொண்டுவருவதற்கான உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. அத்துடன் இதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், நிலக்கண்ணி வெடிகளை அகற்றுதல் மற்றும் மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு தரப்பட்ட சவால்களை முன்னெடுப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக் கொடுத்தல், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துதல், வீதிகளைப் புனரமைத்தல், நீர், மின்சாரம், சுகாதார வசதி, மின்சாரம், கல்வி போன்ற பல்வேறு வசதிகளையும் வழங்குதல், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் அதாவது விசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றை செயற்படுத்துதல், போராளிகளுக்கு புனர்வாழ்வளித்தல், மிக வெற்றிகரமான மீளிணக்கப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்தல் போன்ற பல்வேறு வகையான சவால்களை சிறிலங்கா அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டும்.

இவ்வாறான திட்டங்களில் பெரும்பாலானவற்றை உள்ளுர் மட்ட சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், நீண்ட காலப் போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவில் மீளவும் இயல்புநிலையைக் கொண்டுவருவதில் அரசாங்கமும் இணைந்து செயற்படுவதுடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மக்கள் அமைப்புக்களை சுயாதீனமாக இயங்குவதற்கும் இவ்வாறான பொதுத் திணைக்களங்கள் தமது கடமைகளைச் செய்வதற்கான வழிவகையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

"சிறிலங்கா இராணுவத்தினர் போருக்குப் பின்னான திட்டங்களை மேற்கொள்வதில் பங்களிக்கின்றனர். இவர்கள் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய பயிர் விதைகளை விவசாயிகளுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் பங்களிக்கின்றனர்" என ஒரு ஆண்டுக்கு முன்னர் அனைத்துலக கற்கைக்கான பண்டாரநாயக்க மையத்தில் பாதுகாப்புச் செயலர் வழங்கிய உரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா இராணுவமானது போருக்குப் பின்னான சூழலில் மக்களின் சகல நடவடிக்கைகளிலும் பங்களிப்பதைப் பாராட்டியே பாதுகாப்புச் செயலர் இவ்வாறு தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மக்களின் நாளாந்த வாழ்வியலில் சிறிலங்கா இராணுவத்தினர் கணிசமானளவில் தலையீடு செய்வதானது இராணுமயமாக்கல் மேலும் தீவிரமாவதற்கான வழியை உருவாக்குகிறது.

"சமூகப் பொறுப்புணர்வுகளில் தலையிடுதல், மக்களின் பங்களிப்புக்கு தடையாக இருத்தல், இராணுவக் கட்டளைச் சங்கிலிக்கு கீழ்ப்படிய வேண்டும் என வலியுறுத்துதல் போன்றன இராணுவமயமாக்கலால் ஏற்படும் விளைவுகளாகும். இராணுவமயமாக்கலானது சமூக அல்லது இனக் குழுக்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. சமூகங்கள் மத்தியில் சந்தேகங்களை உருவாக்கி முரண்பாட்டைத் தோற்றுவிக்க துணைபோகிறது" என லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் 'மோதல் மாற்றுகைக்கான ஆதரவு ஆணைக்குழுவால்' மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, போரால் பாதிக்கப்பட்ட சமூகமானது மேலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, இராணுவமயமாக்கல் தீவிரமடையும் போது அங்கே கலந்துரையாடல்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. இதனால் போரில் பாதிக்கப்பட்ட சமூகம் நிரந்தரமாக விரோதத்திற்கு உள்ளாவதால் நாட்டில் வன்முறை தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என மோதல் மாற்றுகைக்கான ஆதரவு ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் மிகவிரைவில் இராணுவமயமாக்கல் நீக்கப்பட்டு நாட்டில் இயல்புநிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். சிறிலங்காவில் வாழும் சமூகமானது சமூகக் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியாக இராணுவத் தலையீடுகளற்ற சுதந்திரமான இயல்பான சமூகமாக மிளிரவேண்டும். இதன் மூலம் மட்டுமே நாட்டில் நிரந்தரமான இயல்புநிலை உருவாக்கப்பட்டு சமாதானம் நிலைபெற வழிபிறக்கும்.

பிளவுபட்டுள்ள இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் உருவாக்கி வினைத்திறன் மிக்க மீளிணக்கப்பாட்டு முயற்சிகளை அறிமுகப்படுத்தப்பட்டு, சிவில் சமூகத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிறிலங்கா இராணுவப் பாதுகாப்பு நடைமுறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் சார் நடவடிக்கைகள் மீண்டும் மக்கள் அமைப்புக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் தமக்கான நிர்வாகத்தை தாமே கட்டுப்படுத்துவர்.

இவ்வாறான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதற்கு மிகப் பலமான அரசியல் உறுதித்தன்மை அறிமுகப்படுத்தப்படுவதுடன், இராணுமயமாக்கலை நீக்குவதற்கான வினைத்திறனான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

http://www.puthinappalakai.com/view.php?20130717108685

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.