Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவுடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு!

Featured Replies

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் முக்கிய இராஜதந்திரி ஒருவர், அண்மையில் வன்னி பகுதிக்குச்சென்று முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவினருடனும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட ஆதரவாளர்களுடனும் சமகால நிலைவரங்கள் தொடர்பில் பேச்சுகளை நடத்தியுள்ளமை சிறீலங்கா அரசுக்கு கடும் கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மைக்கேல் ஏர்வின் அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்கு பயணத்தை மேற்கொண்டு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடனும், பிரஜைகள் குழுவினருடனும் இருவேறு சந்திப்புகளில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்ற சந்திப்பில், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் காப்பாளரும் மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர் தலைமையிலான முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவினர், ஆதிக்க சக்திகளால் பறி போகின்ற தமது நிலம் கடல் வளம் பற்றியும், தமிழ் எல்லைக்கிராமங்கள் சிங்கள கிராமங்களாக்கப்படுவது பற்றியும், தமிழரின் பூர்வீக நிலபுலங்களை இராணுவ தேவைக்காக பறித்தெடுத்துக்கொண்டு விருப்பத்துக்கு மாறாக வேறொரு இடத்தில் கொண்டு சென்று மக்களை குடியமர்த்தும் மீள்குடியேற்றம் பற்றியும், தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்களைச்சூட்டி தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுக்கூறுகளை சிதைக்கும் சிங்கள மேலாதிக்க மனோநிலை பற்றியும், தமிழர் பிரதேசத்தில் நடைபெறும் சிங்கள அதிகாரிகளின் முறையற்ற அரச நியமனங்கள் பற்றியும்.

சட்டவிரோதமாக காடுகளையழித்து நடைபெறும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் குடியேற்றங்கள் பற்றியும், இயற்கை வளச்சுரண்டல்கள் பற்றியும், சிவில் சமுக செயல்பாடுகளில் இராணுவ தலையீடுகள், கெடுபிடிகள் பற்றியும் புள்ளிவிவரங்களுடன் எடுத்துக்கூறியிருந்தனர்.

கிளிநொச்சியில் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் வடக்கு மாகாண சபை தேர்தல், தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள், வேட்பாளர்களின் பாதுகாப்பு, குடியியல் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு உள்ளிட்ட விடையங்கள் குறித்து கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எடுத்துக்கூறியிருந்தனர்.

இந்த கலந்துரையாடல்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறீலங்கா அரசின் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர், உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் இருப்பதை தாம் விரும்பவில்லை எனவும், புள்ளி விவரங்களுடன் தகவல்கள் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளமை சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும், இவை தொடர்பில் தாம் கவலை கொண்டுள்ளதாகவும், தம்மிடம் முன் அனுமதி பெற்றே இராஜதந்திரிகள் வடக்கு பகுதிக்கு சென்று சமுக மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்த வேண்டுமெனவும் கடுமையாக பொரிந்து தள்ளியுள்ளார்.

அதேவேளை சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தக் கவலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகப் பேச்சாளர் உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்தந்த நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வை நடத்துவது வழக்கமான பணியே என்றும் அதுபோன்றே சிறிலங்காவிலும் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக நாம் உள்ளூர் அரச அதிகாரிகள் குடியியல் சமூகத்தினர்தனியார்துறையினரை சந்தித்து வருகிறோம். இதன்மூலம் தற்போதைய நிலைமையை நன்றாக விளங்கிக் கொள்ள முடிகிறது. 

வடக்கு மாகாணசபைத் தேர்தல் சுதந்திரமாகநீதியாகவன்முறைகளின்றி கருத்து வெளிப்பாட்டு அடிப்படைச் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்' என்றும் அவர் கூறியுள்ளார்.

mulli%20us%20400.jpg

mulli%20us%201.jpg

 

http://www.sankathi24.com/news/31622/64//d,fullart.aspx

இதைக் கிட்ட தெற்கிலை நிறையப் பேருக்கு டெங்கு காய்ச்சலே வந்திடும்.

ஹிந்திய தூதரக அதிகாரிகள் போர்க் குற்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் விருந்து கொடுத்து மகிழ, அமெரிக்க தூதரக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாக சந்திக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.