Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்கு அரசியலை முன்னெடுப்பதாக வன்னியின் முன்பள்ளி ஆசிரியர்கள் குமுறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு அரசியலை முன்னெடுப்பதாக வன்னியின் முன்பள்ளி ஆசிரியர்கள் குமுறல் -
28 ஜூலை 2013

குளோல் தமிழ் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்


வடக்கு மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து அவசர அவசரமாக நியமனங்கள் வழங்க்கப்பட்ட நிலையில் சுகந்திரக்கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை முன்பள்ளி ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கண்டிப்பான உத்ததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இராணுவதிதின் சிவில் (சி.எஸ்.டி) பாதுகாப்பு பிரிவினராலேயே அனைத்து முன்பள்ளிகளுக்குமான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளதுடன் அவ் ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகள் இவர்களுக்கூடாகவே வழங்கப்பட்டுவருகின்றன.

இந் நிலையில் முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் தமது தலைமைக் காரியாலையம் விசுவமடுவிற்கு இன்று (28.07.13) அழைத்து ஆசிரியைகளின் வாக்காளர் அட்டை பதிவினை பார்வையிட்டு உறுதிப்படுத்தியதுடன் ஆசிரியைகள் அனைவரையும் தாபால் மூலமான வாக்களிப்பினை மேற்கொள்ளுமாறும் கட்டளையிடப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளருக்கு சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் அட்டை வந்ததும் தம் முன்னே கொண்டுவந்து காண்பித்து பின்னர் தம்மால் குறிப்பிடப்படும் இலக்கத்திற்கே புள்ளடியிட்டு அனுப்பப்படுதல் வேண்டுமென்றும் குறிப்பிட்டதுடன் இவ்வாறு செய்யாது தவறும்பட்சத்தில் உரிய ஆசிரியைகளுக்கான நியமனத்தினையும் கொடுப்பனவினையும் உடன் தம்மால் இரத்துசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இச் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் பலர் தமது இன உணர்வுக்கு ஏற்படடுள்ள அச்சுறுத்தலாகக் கருதியதுடன் இவர்களின் இவ்வாறான தேர்தல் மோசடிச் செயற்பாடுகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவ்வாறே சமுர்த்தி உத்தியோகத்தர்களிடமமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமத்து வாக்களிக்க மறுக்கும் பட்டசத்தில் தற்காலிக நியமனங்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மிடம் நியமனங்களையும் சலுகைகளையும் பெற்றுவிட்டு கூட்டமைப்புக்கே வாக்களித்து வருவதாக தெரிவித்துள்ள நியமனங்களை வழங்கிய தரப்பினர் இதனை இனிமேல் அனுமதிக்க முடியாது என்றும் அதற்கு எதிராக கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94548/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.