Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பழையாறை" மாநகரம்.

Featured Replies

21464_639805069371080_551440398_n.jpg
கி.பி. 830ல் பிற்கால சோழ பேரரசிற்கு வித்திட்டு வளர்த்த மாமன்னன் விசயலாய சோழன் உருவாக்கிய தலைநகர் தான் இந்த "பழையாறை" மாநகரம். சோழ மாமன்னர்கள் சிறு வயதினில் தவழ்ந்து விளையாடி, இளவரசுப் பட்டங்களை சுமந்து, ஆயகலை 64 கினையும் கற்று, முடிசூடி பாராண்டு, இறுதிக்காலங்களில் ஓய்வெய்தி, வின்னுலகம் சென்ற அத்துனையும் கண்டது இம்மாநகரமே. கட்டிட கலைநுட்பம், சிற்பக்கலை நுணுக்கம், ஓவியக்கலை வண்ணமும், விஞ்சிய தெய்வத்தன்மையும் சிறப்புடன் அமையப்பெற்று இராசகம்பீர மிடுக்குடன் நிமிர்ந்து நின்ற மாநகரமும் பழையாறை என்பது சான்றோர் சாற்றிய வரலாறு.

"தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து

பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை"

-சேக்கிழார்.

இந்த இடத்தை நெருங்கும் போதே மனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. தஞ்சை கடந்து, தமிழகம் கடந்து, கடல் கடந்து, கடாரம் வரை சென்று புலிக்கொடியை நாட்டிய சோழ வல்லரசின் அன்றைய தலைநகர்! உலக வரலாற்றில் இதுவரை எந்த அரசும் செய்திடாத நீண்ட நெடிய காலமான தொடர்ந்து 430 ஆண்டு கால ஆட்சி! அப்படிப்பட்ட ஊரில் ஒரு கோயிலை கண்டு ஆச்சர்யம் கொண்டேன்.

சோழர்களின் சிற்பக் கலை உச்சத்தை எட்டிய கோயில் என்று சொல்லகூடிய யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தாராசுரத்தில் உள்ள "ஐராவதேஸ்வரர் கோயில்", பழையாறையில் உள்ள "சோமநாத சுவாமி கோயிலின் மாதிரி தான் என்பதே உள்ளே நுழைந்த பின் தான் தெரியவந்தது, விஜயலாய சோழனின் மகன் " ஆதித்ய சோழனால்" (871-907 CE) கட்டப்பட்டது தான் இந்த "சோமநாத சுவாமி கோயில்".அவருக்கு பின் வந்த அரசர்கள் இந்த கோயிலை திருப்பணி செய்து மிக பிரமாண்டமான கோயிலாக மாற்றியுள்ளனர்.

தன் மூதாதையர்கள் கட்டிய கோயிலை அப்படியே மையமாக வைத்து அதை இன்னும் சிறப்பாக அதில் எங்கு பார்த்தாலும் சிற்பங்களை நிறைத்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் கட்டியது தான் இந்த "தாராசுரம்".ராஜ ராஜ சோழன் இங்குள்ள "கைலாசநாதரை" தான் தினமும் வந்து வழிபட்டதாக தெரியவருகின்றது. இப்படிப்பட்ட சிறப்புக்கள் மிக்க இந்த கோயிலைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனையான விசயம்.கவனிப்பாரற்று செடி கொடிகள் முளைத்து இடிந்து போய் கிடந்த இந்த கோயிலை தற்போது அரசு திருப்பணி செய்து வருகின்றது.கும்பகோணம் செல்லும் போது இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு மறவாமல் செல்லுங்கள் நண்பர்களே.

நன்றி : சசிதரன்

Visit our Page -► தமிழால் இணைவோம்

 

  • தொடங்கியவர்

1005195_509779995756763_1231042870_n.jpg
தமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் குப்பையில்..?!

தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது .

இங்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையெழுத்து படிகள், பழமையான நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1627 அச்சிடப்பட்ட பழமையான் அச்சு புத்தகம் இங்கு பாதுகாக்கப் பட்டு வருகிறது .

தமிழர் நாட்டில் உள்ள பண்டைய ஓலை சுவடிகளில் 50 மட்டுமே இது வரை படித்து அறியப்பட்டுள்ளன. அதற்குள் அடங்கியவை தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூற, புறநானூறு, பதிற்று பத்து, எட்டு தொகை, நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு சீவக சிந்தாமணி, பரி பாடல் போன்றவை.

இதில் சில இலக்கியங்களின் செழுமையும் தொன்மையையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.

மூன்று லட்சம் ஓலை சுவடிகளையும் படித்தறிந்தால் தமிழனின் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் செழுமையும் பற்றி நாம் அறிந்து கொள்ள எதுவாக இருக்கும்.

உலகில் தோன்றிய மொழிகளில், மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழினம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த ஓலை சுவடிகள் உதவும்.

செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கியங்களை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு

இதற்கு வெறும் நூறு கோடி ரூபாய் ஒதுக்கினால் போதுமானது.

 
நன்றி முகனூல் 

 

 

 
தமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் குப்பையில்..?!

 

3 லட்சம் ஓலைச் சுவடிகள் !!  இந்தச் செய்தியின் நம்பகத் தன்மை  கேள்விக் குறிதான் !!??

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.