Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவனைக் கொண்டு தமிழனை விரட்டிய அகதித் தமிழன் - நீங்க நல்லா வருவீங்க..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ராணுவத்தின் உதவியுடன் குடியிருப்பாளரை வெளியேற்றிய புலத்து உரிமையாளர்.

 

புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்று யாழிற்கு சென்று ராணுவத்தின் உதவியுடன் தமது வீட்டில் குடியிருந்த குடும்பம் ஒன்றை பலாத்காரமாக வெளியேற்றியுள்ளது.

.
நேற்றுச் செவ்வாய்க்கிழமை மதியம் பொன்னையா வீதி, ஆறுகால்மடம், ஆனைக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றது.
.
வெளியேற்றப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் பாடசாலைச் சீருடையில் வீதியில் நின்றிருந்ததோடு மற்றைய சிறுவர்கள் பசியினால் அழுதவண்ணம் வீதியில் நின்றிருந்தனர்.    குறிப்பிட்ட வீட்டில் வாடகைக்கு குடி யிருந்து வந்த குடும்பத்தை அந்த வீட்டுக்கு முன்னால் வசிக்கும் குடும்பத்தினரே அங்கு குடியமர்த்தியுள்ளனர்.
.
உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அவர்களிடமிருந்து வீட்டைத் தாம் விலைக்கு வாங்கி விட்டதாகவும் கூறியே தமக்கு வீடு வாடகைக்குத் தரப்பட்டு வாடகைப் பணம் அறவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினர்.
.
வெளிநாட்டிலிருந்து அண்மையில் யாழ்ப்பாணம் வந்த வீட்டின் உரிமையாளர்களான தாயும் மகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரின் உதவியுடன் அங்கு வந்து வீட்டில் குடியிருந்தவர் களை வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர்.   இச்சூழ்நிலையில் நேற்றுக் குறித்த வீட்டுக்குச் சென்ற யாழ்ப்பாணப் பொலிஸார் மதியம் சமைத்த சாப்பாடு உட்பட அனைத்தையும் தூக்கி வெளியே வீசினர். பின்னர் வீட்டிலிருந்தவர்களை வெளியேற்றிவிட்டுக் கதவைப் பூட்டித் திறப்பை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.
.
பாடசாலைக்குச் சென்று திரும்பிய இரு சிறுவர்களும் மாற்றுடை இன்றி வீதியில் நின்றதுடன் மற்றைய இரு சிறுவர்கள் உண்ண உணவின்றி பசியால் அழுதவண்ணமிருந்தனர். இதனைப் பார்த்து அவ்விடத்தில் ஒன்றுகூடிய அயலவர்கள் பொலிஸாரின் இந்த அராஜகச் செயலை வன்மையாக் கண்டித்தனர்.   தம்மை வீட்டில் இருந்து வெளியேற்றியமை மற்றும் பொருள்களைத் தூக்கி வீசியமை தொடர்பான முறைப்பாட்டைப் பதிவு செய்யச் சென்ற குறித்த குடும்பத் தலைவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று தெரியவருகிறது.

 

http://www.eelanatham.net/story/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D

Edited by நிழலி
தலைப்பு திருத்தப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம்  அருகி  வருகிறது

சுயநலங்கள் ஆட்சி  செய்கின்றன

பணம் பலம்  பெற்றுவருகிறது............ :(  :(  :(

நாட்டை விட்டுச் சென்ற வீட்டின் உரிமையாளர்கள்  பொறுப்புடன், உரிய கால அவகாசத்தை கொடுத்து தமது வீடுகளை  மீளப்பெற முயற்சிக்க வேண்டும்.

சிங்கள போலீஸ்காரர்களின் துணையுடன் அடாத்தாக செயற்பட்டது அவரின் மிருக குணத்தை காட்டுகிறது. இத்தகைய மிருகங்களுக்கு காலப்போக்கில் யாழ் மண்ணில் இடம் கிடைக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.