Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபைத் தேர்தலும் பகிஸ்கரிப்பு அரசியற்பம்மாத்தும்

Featured Replies

ஐயா மகாஜனங்களே உங்ககிட்ட கொஞ்சம் மனம்விட்டு பேசனுங்கய்யா. சில வெப்சைட்டுகள்ள வர்ற நியூசுகளை வாசிக்க காளமேகம் றொம்ப கடுப்பு ஆயிடுச்சு. ஏதோ நம்ம அரசியலப்பற்றிச் சொல்லியிருக்கிறாங்கள், பாத்துப் பயனடைவம் எண்டு இந்த லிங்கை கிளிக் பண்ணினால்........ http://inioru.com/?p=36664
 
ஏம்பா இப்பிடி? ஒண்ணும் புரியலீங்க, அதுதான் நம்மளுக்கு தெரிஞ்ச தமிங்கிலத்தில நாம நினைக்கிறத விசயத்தை சொல்லியிடலாம் என்டு நினைக்கிறனுங்கய்யா.
 
மாகாண சபைத்தேர்தலில நம்ம நீதவான் விக்கினேஸ்வரன் ஐயா முதலமைச்சரா போட்டி போடப்போறார் என்று முடிவாயிடிச்சுங்கய்யா. நீதவான் சொல்லுறாருங்கய்யா ‘விட்டுக் கொடுப்பை நிர்ப்பந்திக்கும் கடுமையான அழுத்தம் வெளியில் இருந்தோ அல்லது உள்நாட்டில் இருந்தோ அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது வராமல் இந்த இன முரண்பாடுக்கான தீர்வெதுவும் உடனடியாக சாத்தியமில்லை’ என்டும் ‘வடக்கு கிழக்கின் நிர்வாகத்தினை தமிழர்களிடம் ஏன் ஒப்படைக்கக்கூடாது? தடையாய் இருப்பது என்ன?’ என ஆரோக்கியமான விவாதத்தை தொடங்கியிருக்காருங்க. 
 
முள்ளிவாய்க்காலில் எல்லாத்தையும் துலைச்சுப்போட்டு வெளியேறிய பின், நம்ம தமிழ் அரசியல் சூழலில் நம்ம ஈழத்தமிழனுக்கான அரசியல் பாதை எது வென்று தெரியாமல் ஆரோக்கியமற்ற குற்றஞ்சாட்டும் அரசியல் நிலைமை தான் தொடருதுங்க. நம போட்ட அரசியல் விடுதலைப்பாதை சக்கரம் சுழன்று திருப்பவும் ஆரம்பப்புள்ளியிலேயே வந்து நிக்குதுங்க. திருப்பிச்சுத்தவேண்டும். முள்ளிவாய்க்காலுக்குப்பிறகு நாலு வருசமா நடக்கிற வெப்;சைட் அரசியல் யுத்தம் முடிவுக்கு வரேல. நாம ‘அடைந்தால் மகாதேவி அல்லது மரணதேவி’ என்டு இருந்தமன்னா, இடுப்பில இருக்கிற கோவணத்தையும்; இழுத்துட்டுப் போடுவாங்கய்யா. கோவணம் போயிடும் என்டுறதுக்காக கொள்கையை விடச்சொல்லேல. முதல்ல கோவணத்தை காப்பாத்துங்க அப்புறமா மத்ததுகளை பெறுவதற்கான வழிகளைப்பாருங்க. அல்லாட்டி கோவணத்தைப்பாதுகாக்கிறவன் பாதுகாக்கட்டும் கொள்கையை பாதுகாக்கிறவங்கள் அதுக்கான வேலையை பாக்கட்டும்.
 
கூட்டமைப்பு ராங்கா போகுதென்டால் நீங்க உங்கபாட்டுக்கு றைற்றான வழியைத் தெரிவு செய்யுங்கய்யா.  அந்த வழியை ஜனங்களிற்கு சொல்லி, மக்களையும் சேர்த்துகிட்டு உங்க றூட்டைப் போடுங்க. அதில்லாமல் இவுங்க போறது ராங் எண்டு சொல்லி நாம புதியவழியைக் கண்டுபிடிக்கனும் என்றீங்க. எதுவழியெண்டு கேட்டா அதை இனிமேல்தான் டிஸ்கஸ் பண்ணணுமுன்னு சொன்னா? நாம என்ன காதில பூ வைச்ச ஆளுங்க மாதிரியா தெரியுது. நம்ம அரசியல் அடிபாதாளத்துக்குள்ள விழுந்து கொண்டிருக்கு. எதாவது ஒருவழி பண்ணி முதல்ல தடுத்து நிறுத்தனும். பிறகு அதில இருந்து கட்டியெழுப்பவேணும் அதுக்கு ஒன்றுமில்லாத மாகாணசபைத்தேர்லை பயன்படுத்துவதைத்தவிர வேறு வழியில்லை என்டு சொல்லுறாங்க அது சரியென்று தான் நானும் நினைக்கிறனுங்க.
 
இல்லையென்டால், தமிழ்மக்களின் அரசியல் உரிமை பற்றிக் கதைக்கும் நபர்களை அப்புறப்படுத்தி, தங்களிற்கு சார்பானவர்களை ஆட்சிக்குக் கொண்டுவந்து எல்லா ஜனங்களும் நம்மளுடன் ஒன்னா குடும்பம் நடத்துறாங்க. இங்க இனஜக்கியம், இனசமத்துவம் ஏற்பட்டிருக்கு. என்று ஜனநாயக போர்வைக்குள் இருந்து கொண்டு அரசியல் பேசும் சருவதேசத்திற்கு சொல்லிடுவாங்கய்யா. 
 
தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடையாளம் தானுங்க அந்த மக்கள் உரிமைபற்றி பேசுவதற்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கான தகுதியைக் கொடுக்கும். ஒரு எம்பசியிலயோ அல்லது சருவதேச நடுகளில் போய் நம்மட உரிமை பற்றிப்பேச ஒரு அடையாளம் விசிற்றிங்காட் தேவைங்க. நம்ம விக்கினேஸ்வரன் ஜயா தேர்தலில் தெரிவு செய்யப்படாம போய் கதைக்கக்கேட்டால் நீங்க யார் என்று கேட்பாங்க. அவரால் நான் நீதவான் என்று தான் சொல்லமுடியும் அவுங்க சொல்லியிடுவாங்கய்யா நாங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறதில்லை எண்டு. 
 
பகிஸ்கரிப்பு அரசியலைச் செய்து தானுங்க டக்லஸ்சை பெரியாள் ஆக்கினாங்கள். அதுக்காக நான் சொல்லேலிங்க மாகாண சபை தேர்தல்ல வென்று கூட்டமைப்பு பெரிசா சாதிச்சிடும் என்டு. அப்ப நீங்க கேட்கிறீங்களா பெரிசா சாதிக்காட்டி ஏன் தேர்தல்ல நிக்கனும் என்டு? அதுதானே திருடங்கள் புகுந்துடுவாங்களே. அப்புறம் நாங்கள் தான் மக்கள் பிரதிநிதிகள் என்டு உள்ள அரசியலையும் நாசப்படுத்திடுவாங்கப்பா. அதனால நாம கூட்டமைப்புக்கு எதிர்பார்ப்பில்லாம புல் சப்போட்டை கொடுக்கனுங்க.
 
அப்புறம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காகத்தான் தேர்தலை நடத்துறாங்கன்னு புரியுது. கூட்டமைப்பு பகிஸ்கரிக்கிறதால நடத்தாமலா போய்விடுவாங்க சிங்கள கவர்மன்ட். ஆனா ‘இனியொரு’ விதி செய்வதற்காக புதிய அரசியல் வெளியை உருவாக்க புறப்பட்ட புத்திசீவி இணையத்தளங்கள் சொல்லுதய்யா ‘தமிழ்மக்களை தேர்தலை ஏறேடுத்துப்பார்க்க வேண்டாம் என்று. அப்புறமா சிங்களம் தனது அடியாட்களை மக்கள் பிரதிநிதியாக்குது என்டும் இன்ரலெச்சுவல் புறப்பகண்டா செய்யிறாங்களாம். இன்ரலெச்சுவல் புறப்பகண்டா எண்ட என்னென்டு தெரியுமாங்கய்யா? பொலிற்றிக்கலில நம்மட ஜனங்களுக்குப்புரியாத லாங்குவிச்சில, புரியாத விடயத்தை சில இங்கிலீங் எழுத்தையும் கட்டங்கட்டி எழுதினா இன்ரலெச்சுவல் ஆட்டிக்கலாங்குமய்யா. (அதால தானுங்க நாமளும் கீழ்ப்பந்தியள்ள அப்பிடி எழுதிபுட்டனுங்க)
 
சிறிலங்கா கவர்மென்ற் இன்னா நினைக்குதுண்ணா இந்த சர்வதேச உதவி நிறுவனங்கள் இருக்கிறதால நம்ம எத்னிங் கிளின்ஸ்சிங்(இனச்சுத்தீகரிப்பு) வேகமா செய்யமுடியாது. அப்புறமா விக்கினேஸ்வரன் ஜயா மாதிரி ஆட்கள் மக்கள் பிரதிநிதிகளாக செலக்ற் பண்ணுப்பட்டால், நம முழுச்சட்டப்புத்தகததையும் துசுதட்டி திருப்பிவாசிக்கச் சொல்லனும், நம்பளுங்கு இதெல்லாம ஆகாதுப்பா. நாம எப்பிடி நோகாம நொங்கு சாப்பிடலாம் என்டு சோட்டா, பொலிற்றிக்கலா யோசிச்சு நாம்மட அடியாட்களை எப்பிடி மக்கள் பிரதிநிதியாக்கலாம் என்டு ரூட் போடனும்’ மக்கள் சப்போட் இருக்கிற கூட்டமைப்பை எப்படி எலக்சனில நிக்காமப்பண்ணலாம் இதுக்கு என்ன பண்ணலாம் என ராஜபக்ச பமிலி றூம் போட்டு பிளான் பண்ணிக்கொண்டு இருக்காங்கய்யா. 
 
அதுக்கு வாய்ப்பா, இங்குதான் கடையைத் திறந்துபுட்டு கொஞ்ச இணையத்தளங்கள்  மார்க்சியம், கொமினிசம், முதலாளித்துவம் இதைப்பற்றிக் கதைத்த சில தத்துவாசிரியர்களிட்ட மூளைய அடகுவைச்சிட்டு, விடுதலைக்கு வழி கேட்டா, இதுக்கு விடை மார்க்சியத்துக்குள்ளாள காணலாம் இல்லாட்ட கொமினிசத்துக்குள்ள காணலாம். முதலாளித்துவம் சீ சீ நம்மளுக்கு ஒத்துவராது என்டு கதைச்சுக்கொண்டு திரியிறவங்கள் இருக்கிறாங்களே, அவுங்களே அவுங்கட பாட்டுக்கே பொறுப்பு எடுத்துட்டாங்களோ என்று நினைக்கத் தோணுதுங்கய்யா.
 
அப்படி சில தமிழ் இன்ரலெச்சுவல்ஸ் தானுங்கய்யா கண்டு பிடிச்சிருக்காங்கள் ‘தேர்தலில் நிற்கும் கூட்டமைப்பு பிரதம வேட்பாளருக்கும் சிங்கள கவர்மென்ட்டுக்கும் உள்கூத்து இருக்கெண்டு. அதுவும் உங்கவுட்டு எங்கவுட்டு உள்கூத்தில்ல இன்ரநசனல் உள்கூத்து இருக்காமுங்க(தமிழ் சீரியல் பாத்துப்பாத்து அதுமாதிரி யோசிக்கத் தொடங்கியிட்டாங்கள் நம்ம ஆளுங்க). நம்ம தமிழன் தான் அறுக்கிறதில் கெட்டிக்காறனில்ல. ஒரு பொய்யை திருப்பித்திருப்பிச் சொல்லி உண்மையாக்கிறது, பொய்யுக்குமேல் பொய்களைக்கட்டி உண்மையாக்கிற விடயங்களில புறபிசனல்ஸ் ஆச்சே. 
 
அவுங்க தான் தெடங்கியிருக்காங்க கிசு கிசு எழுத. நம்ம விக்கினேஸ்வரன் ஜயா சிங்கள கவர்மென்டின்ட ஏஜன்ட், இன்ரநசனல் பிறசரை இல்லாமல் செய்ய இலங்கை நாட்டின் ஒற்றையாட்சிச் சட்டத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு சேலூசன் எடுக்கலாம்  என்டு பிளான் பண்ணிறாங்கள். அதால மக்கள் எல்லாம் தேர்தலை புறக்கணிக்கனுமாம்.
 
தேர்தலை புறக்கணிச்சுட்டு ஒன்றைக் கண்டுபிடிப்பம் என்டு கழுதைக்கு புல்லுக் கட்டி விடுறது மாதிறி தமிழ்மக்களிற்கும் கட்டிவிடப்பாக்கிறாங்களய்யா. கழுதைக்கு புல்லுக் கட்டுறதுண்ணா என்னென்டு தெரியுமாங்க ‘கழுதை பொதி சுமக்கப்பண்ண, கழுதையின்ற தலைக்கு முன்னால புல்லைக்கட்டி விடுவாங்கய்யா. கழுதை புல்லைச்சாப்பிடுகிற ஆசையில எழும்பி நடக்கத் தொடங்குமாம். அதுன்ற கென்சன்றேசன் எல்லாம் புல்லுக்கட்டில இருக்கிறதால முதுகில இருக்கிற சுமையைப்பத்தியும்; நினைக்காதுங்கய்யா. அப்பிடித்தான் நம்ம ஜனங்களுக்கு புல்லுக்கட்டி விடப்பாக்கிறானுங்கய்யா. 
 
இன்னைக்கு டயஸ்புறா தமிழர்களும் தமிழகத்தலைவர்களும் ஈழ அரசியலுக்கான வலுவான பலமுங்கய்யா. டயஸ்புறாவின் கடுமையான முயற்சியின் பலனாகத்தான இனப்படுகொலை விவகாரம் சர்வதேச கவனத்தைப்பெற்றதும் அப்புறமா சர்வதேச அழுத்தம் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்டதும் அதனால தானுங்க. அதோட இந்திய நடுவன் அரசிற்கு அழுத்தம் பிரயோகிக்க இருக்கும் ஒரே வாய்ப்பு தமிழகமுங்க. அவற்றை யாரும் இல்லேன்னு சொல்லமுடியாது. அவை ஈழத்தமிழருக்கான அரசியல்ப் பலங்களாகத்தான் பார்க்கமுடியும். 
அரசியல்க்கூடாரம் என்பது சந்தியாசிகளின்(பற்றற்றவர்களின்) கூடாரமல்ல. அரசியல் என்றாலே நலன்கள் சார்ந்து தேவைகருதி சொந்த இலாபத்தின் அடிப்படையில் ஒன்றுபடும் அல்லது உதவி செய்யும் குண இயல்பைக் கொண்டதுங்க. தமிழநாட்டுத் தலைவர்கள் அவர்களது அரசியல் சுயநலனுக்காக ஈழத்தமிழர்கள் விடயத்தைப் பேசுகிறார்களோ இல்லையோ என்பதல்ல முக்கியம் அது எங்களுக்கு தேவை இல்லீங்கய்யா. நம்மளுக்கு அது எந்தளவிற்கு பலம் சேர்க்கின்றது என்று பார்த்தால் ஜ.நா மனித உரிமைச்சபையில் இந்தியா தடம்புறளாமல் இருந்ததற்கு பிரதான காரணம் தமிழகம் என்பதை மறந்து விடக்கூடாதுங்க.
 
புலம்பெயர்ந்தவர்கள். அரசியலுக்காக தங்களது வேர்வையையும் இரத்தத்தையும் சிந்தியவர்களுங்க, சிந்திக்கொண்டிருக்கிறார்களுங்க. அவர்களிற்கு விடுதலையின் வலி தெரியுமுங்க. அவர்கள் தங்களால் முடிந்தளவிற்கு தாயகத்திற்காக புலம்பெயர் தேசங்களில் இன்னமும் உழைத்துக்; கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கய்யா.
 
நமக்கு இப்ப இருக்கிற வழியை பாவிச்சு, நம்மட அரசியல் இலக்கை நோக்கி முன்னேற வழிபாக்கனும். விக்கினேஸ்வரன் ஜயா, தான் சொல்லும் கருத்துக்களை நிறைவேற்ற, சர்வதேச அளவில் கருத்துக்களை உருவாக்க இதை வாய்ப்பாக பயன்படுத்துவதற்கு அவுங்களை வெற்றி வெறவைக்கனுங்கய்யா.
 
அப்புறம் மக்களின் வாழ்வாதார மேம்பாடு பற்றி சில கருத்துக்களை முன்வைக்கிறாங்களய்யா. 
 
ஒன்னு, ‘சிறிலங்கா இராணுவம் மரக்கறி போன்ற சில்லறை வியாபாரத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிச்சிட்டுது’ என்டுறானுங்க. ‘இராணுவம் விற்பனை செய்யும் மலிவு விலைப் பொருட்களோடு உள்ளுர் உற்பத்தியாளர்கள் போட்டி போட முடிவதில்லை இதனால் வறிய விவசாயிகள் பிச்சையெடுக்கிறானுங்க. ஆனா மத்தியதர வர்க்கத்துக்கு இது வசதியைக் கொடுக்கிறதால ஆமிக்காரனுங்க வெளியேறக்கூடாதுன்னு கூட்டமைப்புக்காரனுங்க பேசுகின்றார்கள்’ என்கிறானுங்கய்யா.
 
ஏனுங்க சாமி, சிங்கள கவர்மண்ட் நம்ம தமிழ்மக்களை பொருளாதார ரீதியா வீக்பண்ணுற தந்திரோபபாயத்தை ஒன்னும் புதிசா பண்ணலையே, காலம் காலமா ஏதோவொரு வகையில செஞ்சிகிட்டுத்தானே இருக்காங்க. ஆனா சமூகம் நம்முடையதுங்கய்யா. நாம நம்ம சமூகத்துக்கு விழிப்புணர்ச்சி குடுக்காம, மோறல் சப்போட் குடுக்காம கவர்மன்ரின்ட தந்திரோபாயத்தை எதிர்கொள்ளாம, ஏனுங்கய்யா புண்ணியவாளனுங்களே மார்க்சியம், கொமினிசம், முதலாளித்துவச் சிந்தனைக்குள்ளாள இதுக்கு என்ன சொல்லியிருக்கானுங்க வாசிச்சு சொல்லமாட்டிங்களாய்யா. இதுல இருக்கிற சலஞ்ச்சை எப்பிடி கையாளுவது எப்படின்னு பார்த்து, நம்மட சமூகத்துக்கு சின்னதா உங்களுக்கு புரியுதோ புரியேலையோ புத்தகத்தில இருக்கிறதை மொழிபெயர்த்து அப்பிடியே போட்டீங்களன்னாககூட நம்ம ஜனங்க சுதாகரிச்சுடுவாங்கய்யா. அதைவிட்டுட்டு சும்மா ஏப்பா ‘உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்கும்’ முடிச்சுப்போடுறமாதிரி கூட்டமைப்புக்கும் ‘பொலிற்றிக்கல் பெனிபிற்’ இருக்குன்னு புழுடாவிடுகிறீங்க.
 
அப்புறமா ‘சருவதேச அரச சாரா நிறுவனங்கள் நுண் நிதி (Micro finance) சிறுதொழில் தொடங்குபவர்களிற்கு சிறிது சிறிதாக மீளச் செலுத்தக்கூடிய கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து வருமானத்தின் பெரும்பகுதியை மக்களிடமிருந்து பறித்துக் கொள்ளும் கந்துவட்டிக்காரர்கள். போரினால் அவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்களிடமிருந்து பிடுங்கிக் கொல்லுரானுங்களாம் என்று சகட்டு மேனிக்கு கூச்சப்படாம் சொல்லுறானுங்கப்பா.
இன்னைக்கு உலகத்தில் பங்களாதேஷ் நுண் நிதித்திட்டத்தினூடாக எப்படி சிறுதொழில் செய்து முன்னுக்கு வரமுடியும் என்பதுக்கு நல்ல உதாரணமுங்க. சில ஆண்டுகளுக்கு முன் கூட அதுக்கு பங்களாதேசைச் சேர்ந்தவருக்கு அவார்ட்டெல்லாம் கொடுத்திருக்கான்கய்யா. நாம என்னன்னா ‘வக்கல்ப்பட்டடை நாய்மாதிரி’ காசும் கொடுக்க மாட்டம் கொடுக்கிறவனுங்களையும் விடமாட்டம். அதை உடன ஏமாத்துக்காரர் என்று சொல்லிடுவம். ஏன்னா நம்ம சித்தாந்தப்புத்தகங்களில தான் அப்பிடி இல்லியே, அப்புறமா அதில இல்லாட்ட மற்றதெல்லாம் பிழையான சப்ஜெக்ற் ஆச்சே நம்மளுக்கு, அப்ப எழுதுவோமில்ல. 
 
நானுங்க இந்த புத்திசீவியளுக்கு ஒரு சின்ன கிளாஸ் எடுக்கப்போறனுங்க ‘வாழ்வாதார உதவி திட்டத்தின் வெற்றிக்கு (றொம்ப கஷ்டமாயிருக்கப்பா) முக்கியமான படிமுறைகள் உண்டு. நுண்நிதி (Micro Finance) என்பது வாழ்வாதாரத்திட்டச்சங்கிலியின் ஒரு அங்கம். வாழ்வாதாரச்சங்கிலிச்சுற்று சுழல்வதாயின் நிதி(Finance), சந்தைவாய்ப்பிற்கான முன்னோக்கிய தொடர்பு(Forward lingage), ஆரம்பிப்பதற்கான பின் உதவிகள்(Backward lingage)  என்பன சரியாக ஒழுங்கு செய்யப்படவேண்டும் உதாரணமாக ஒரு பயனாளி ஒரு சிறு தொழிலை ஆரம்பிக்கும் போது அவருக்கான் பின்புல உதவிகளையும் சந்தைவாய்ப்புக்கான வழிவகைகளையும் சரியாக ஒழுங்குபடுத்திக் கொண்டால் நுண் நிதித்திட்டம் நல்ல பலனைக் கொடுக்கும். மக்களிற்கு அவர்கள் தெரிவு செய்யும் தொழிலுக்கான (S.W.O.T Analysis) பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என்பவற்றை கணிப்பீடு செய்து, சரியான வழியில் வழிகாட்டினால் பங்களாதேசைப்போல நுண் கடனுதவித்திட்டம் வெற்றியளிக்கும் (ஸ்சபா நம்மளுக்கு றொம்ப டிபிக்கலா இருக்கப்பா) என்று நான் சொல்லலைப்பா பொருளாதார அறிஞர்கள் சொல்லுறாங்கப்பா.
 
NGO’s பணம் கொடுக்கிறான். நமக்கு நம்ம சமூகத்தில இல்லா அக்கறை அவனுக்கென்னத்துக்கு? லேக்கல் நோலேச் (டுழஉயட முழெறடயபந) நம்மகிட்டததானே இருக்கு. நாம கடன்வாங்கிற மக்களை ஒன்னாக்கி அவுங்களுக்கு கொஞ்சம் வியாபார அறிவுசார் உதவியைக் குடுத்து உதவிபண்ணி, விளங்கப்படுத்தினா NGO’s குடுக்கிற பணத்தில நம்ம சனம் உருப்படுமா? இல்லியா? என்று மாகாஜனங்களே நீங்களே முடிவெடுங்கய்யா.
 
அடுத்ததாக, நீண்டகால யுத்தத்தால நம்ம சனங்களின் ஆளுமை விருத்தி செய்யப்படவில்லை. அவங்களை சக்தி மிக்கவர்களாக மாத்தி (Empowering people) நுண்நிதிகளை குடுத்தாத்தான், அதை வைச்சுக்கொண்டு சனங்கள் முன்னுக்கு வரும். கிடைக்கற வாய்ப்பை பயன்படுத்தாம விட்டுபுட்டு, அது பற்றி தவறான விவாதங்களை கிறியேற் பண்ணீட்டு நாம நம்மளுக்கான வழியை கண்டுபுடிக்கனுன்னா அதை எப்படி புரிஞ்சுக்கிறது. அம்மம்மா சொல்லுவாங்க ‘கூரை ஏறி கோழி புடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போப்போறன் என்டானாம்’ நம்மளுக்கு கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தாம வெட்டி நியாயம் பேசிறதில நியாயமில்லைங்கய்யா.
 
வங்கிகள் தொழில் செய்யக்கடன் இலங்கையில மட்டுந்தான் கொடுக்கிறதாங்க? உலகம் பூராவும் கொடுக்கிறாங்க. வாங்கிற நாம்ம ஜனங்க அதை சரியா திட்டமிட்டு, நம்மளாள திருப்பிக் கொடுக்க முடியுமா? என பிளான் பண்ணி வாங்காம விட்டுபுட்டு, அவன் குண்டர்படையை அனுப்பிறான் என்டு எப்பிடி குத்தம் சொல்ல முடியும்.
 
இவனுங்க சொல்லுற இந்தக்குற்றச்சாட்டுகளில் இருந்து நான் புரிஞ்சிக்கிறது என்னன்னா. நாம நம்ம சமூகத்தை தற்போதை நிலையிலிருந்து எப்படி அரசியல், பொருளாதார ரீதியில கட்டியெழுப்பப்போறம்? அதுக்கு தற்போது கிடைக்கின்ற வாய்ப்புகள் என்ன? சமூகம் எப்பிடியிருக்கு? இப்பிடி கடன் எடுக்க விரும்பிறவங்களை பாத்து அண்ணாச்சி இன்னா பண்ணப்போற?, உன்னால திருப்பிக் கொடுக்கக்கூடிமாதிரி பணம் பண்ண முடியுமாப்பா? இல்லாட்டி இதை விட்டுப்புட்டு இதை முயற்சிபண்ணிப்பாரு. அப்பிடியில்லாட்டி ஏப்பா எல்லாரும் ஒரே தொழிலை செலக்ட் பண்ணிறீங்க? அப்பிடின்னு சில ஜடியா சொன்னாலே நம்ம சனம் கப்புன்னு பிடிச்சுக்கும். அதை விட்டுபுட்டு எல்லாம் பிழையின்னா அப்ப எதுங்கப்பா சரி? நீங்களும் வழியை சொல்லிறீங்க இல்ல. பிழை பிடிக்கத தெரிஞ்ச உங்களால சரியச் சொல்லத்தெரியாட்டி நீங்கள் தானுங்க பிழையானவனுங்க
 

Edited by காளமேகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.