Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் பிள்ளைகளை பலிகொடுக்க நாம் தயாரில்லை - சம்பிக்க ரணவக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பிள்ளைகளை பலிகொடுக்க நாம் தயாரில்லை - சம்பிக்க ரணவக்க

[Tuesday, 2013-08-13 09:47:40]
sampika-seithy-150.jpg

நியூஸிலாந்தின் பால் மாக்களிலுள்ள டி.சி.டி. இரசாயன கலவை சோதனைக்காக இலங்கையின் பிள்ளைகளை பலிகொடுக்க நாம் தயாரில்லை என்று தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நியூஸிலாந்து நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் திருமதி ஜேன் அன்டர்ஸன் அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யும் பால்மாக்களின் சிலவற்றில் டி.சி.டி. இரசாயனம் கலந்துள்ளதை அண்மையில் தொழில்நுட்பவியல் அமைச்சு கண்டுபிடித்ததோடு, சுகாதார அமைச்சு இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவித்ததோடு அவ்வாறான பால்மாக்களும் தடைசெய்யப்பட்டன.

  

இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை நியூஸிலாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் சந்தித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க இது தொடர்பாக மேலும் நியூஸிலாந்து உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்துகையில்,

நியூசிஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் டி.சி.டி. இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதை கண்டுபிடித்து நாம் அறிவித்தோம். இதனை ஃபொன்டெரா நிறுவனமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், டி.சி.டி. இரசாயனத்தால் உடலுக்கு பாதிப்பு இல்லையென்று ஃபொன்டெரா நிறுவனம் பொய்யான அறிக்கையொன்றை வெளியிட்டது. இது கவலைக்குரிய விடயமாகும். இதற்கு பதிலளித்துள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் திருமதி ஜேன் அன்டர்ஸன்,

நியூஸிலாந்து அரசாங்கம் ஒரு போதும் தனியார் நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணுவதில்லை. தமது நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பதே தமது அரசாங்கத்தின் ஒரே நோக்கமாகும். அனைத்து நாடுகளுடன் நட்புறவை பேணுவதே எமது கொள்ளையாகும். அத்தோடு, ஜூன் மாதம் நியூசிலாந்திலுள்ள சகல பால்மா தயாரிப்பு நிறுவனங்களும் டி.சி.டி. சோதனைகளை நடத்தப்பட வேண்டுமென்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

 

 

நன்றி - செய்தியிணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.