Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவள் தமிழ்ப்பெண்!

Featured Replies

இவள் தமிழ்ப்பெண்!

 

28.jpg

 

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்
மனைவி வந்தபிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாடிக்கை!
என்று இன்றைய திருமண வாழ்க்கையை நகைச்சுவையாகச் சொல்வதுண்டு.
 
கணவனும், மனைவியும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல! இருவரும் இன்னொரு பக்கத்தைப் பார்ப்பதே இல்லை! என்ற கருத்தும் உண்டு.
 
இருவேறு வாழ்க்கைச் சூழல்களிலிருந்த இருவர், பல எதிர்பார்ப்புகளோடு, ஒன்றாக வாழ்வில் இணையும்போது, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறலாம், நிறைவேறாமல் போகலாம். அந்தச் சூழலில் இருவரும் தாம் பிறந்த குடும்பத்தின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் குடும்பம் போர்க்களமாகத்தான் இருக்கும்.
 
இருவரும் ஒருவருக்கொருவர் இயன்றவரை விட்டுக்கொடுத்து வாழக்கற்றுக்கொண்டால் அதுதான் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக இருக்கும். இதையே தமிழர்மரபுகளாக நம்முன்னோர் நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.
 
பல குடும்பங்களில் சண்டை தோன்றுமிடம் பணமாகத்தான் இருக்கிறது.
இருப்பவர்கள் பறப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்! பறப்பவர்கள் இன்னும் மேலே பறப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்! ஆசை நிறைவேறாதபோது கோபம் வருகிறது. கோபம் விவாகரத்துவரை சென்றுவிடுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் ஆசை நிறைவேறினால் போதும் என்றுதான் நினைக்கிறோம்.
 
மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லை. நம்மிடம் இருப்பதைக் கொண்டு நிறைவுகொள்ளும் மனநிலையில்தான் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
 
இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும். பெற்றோராக இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு அவர்களை எதிர்பார்ப்பது இழுக்கு! அதனால்  வரவுக்குள் செலவு  செய்து தன்மானத்தோடு வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்ற கருத்தை எடுத்தியம்பும் சங்கப்பாடலைக் காண்போம்.
 

சங்ககாலத் தலைவி ஒருத்தி,  தான் புகுந்த வீடு வறுமையடைந்த பொழுதும், பிறந்த வீடு உதவியை நாடாமல், அறிவும், ஒழுக்கமும் உடையவளாகத் திகழ்வதை இந்த நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது.
 

 
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்
கொண்ட கொழு நன் குடி வறன் உற்றென
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே.
நற்றிணை 110, போதனார்,
பாலை திணை – செவிலித்தாய் சொன்னது 
 
 
Her slightly grey-haired, wise foster mothers
used to carry glowing gold bowls
with sweet milk mixed with honey and follow her.
They ran behind her to the pavilion,
with their soft-headed small sticks
and forced her to eat.
My playful daughter’s golden anklets
filled with pearls from clear waters,
jingled as she jumped and ran away,
refusing the food they brought.
Her husband’s family has grown poor now.
She doesn’t think about the rich rice her father used to give,
softer than the delicate sand under running water.
She eats what she can,
that little girl with such great strength.   
                                                                                      Translated by Vaidehi
 

தேன் கலந்தது போன்ற நல்ல சுவை உடைய இனிய பால் உணவை பொன்னால் செய்த பாத்திரத்தில் இட்டு, அதனை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மற்றொரு கையில் நுனியில் பூக்களால் சுற்றப்பட்ட சிறிய கோலை ஏந்திக் கொண்டு நீ உண்பாயாக! நீ உண்பாயாக! என்று அப்பூச் செண்டை எறிந்தனர். அவ்வாறு எறிந்தவுடன் பயந்து, முத்துப் பரல்களை உடைய பொற்சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து ஓடினாள். நரை முடியினை உடைய வயதான செவிலித்தாயர் பிடிக்க முடியாதபடி நடை தளர்ந்தனர். அவர்கள் பால் சோற்றை உண்ணுமாறு கேட்க, உண்னமாட்டேன் என்று மறுத்து விளையாட்டினைக் காட்டும் என் மகள், நல்லறிவும் ஒழுக்கமும் எப்படி அறிந்தனளோ? அறியேன்!
தன் கைப்பற்றிய கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததாக உதவிய தந்தையின் செல்வ மிக்க உணவை எண்ணாமல் மறுத்து விட்டாள். ஓடுகின்ற நீரிலே கிடக்கும் நுண்ணிய மணல்போல் , ஒரு பொழுது விட்டு ஒரு பொழுது உண்ணும் சிறந்த வலிமை உடையவள் ஆனாள். இதென்ன வியப்பு!

இவள் அல்லவா தமிழ்ப்பெண்! இன்றைய சூழலில் நிறைய விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பண்பாட்டு மாற்றங்களால் தமிழர் மரபுகள் கேள்விக்குறியாகி நிற்கின்றன. 

இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள இதுபோன்ற வாழ்வியல் குறிப்புகள் நம் வாழ்க்கைமுறையை சீர்தூக்கிப்பார்க்கத் துணைநிற்கின்றன.

 

http://www.gunathamizh.com/2013/08/blog-post_14.html

வெண் சுவைத் தீம்பால்
- பசு கன்று ஈன்றதும் கறக்கும் பாலைத் "தீம்பால் (சீம்பால்)" என்று கூறுவார்கள். தாய்ப்பாலையும் தீம்பால் என்று கூறுவது உண்டு.

 

இணைப்பிற்கு நன்றி கோ.

  • தொடங்கியவர்

வெண் சுவைத் தீம்பால்

- பசு கன்று ஈன்றதும் கறக்கும் பாலைத் "தீம்பால் (சீம்பால்)" என்று கூறுவார்கள். தாய்ப்பாலையும் தீம்பால் என்று கூறுவது உண்டு.

 

இணைப்பிற்கு நன்றி கோ.

 

நாங்கள் கடம்புப் பால் என்று சொல்வதுண்டு .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளம்பிறையனாரே :)  :)  .

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்தலுக்கு நன்றி கோமகன்.

  • தொடங்கியவர்

பகிர்தலுக்கு நன்றி கோமகன்.

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுமே :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.