Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை காவல்துறை மீது சித்திரவதை குற்றச்சாட்டுக்கள்

Featured Replies

இலங்கையில் காவல்துறையினர் சித்திரவதையை விசாரணைகளின் போது ஒரு வழிமுறைகாகப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

இலங்கையில் 1998 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்ட சுமார் 1500 பேர் தொடர்பான சம்பவங்களை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தொகுத்துள்ளது.

130820185210_sri_lanka_torture_ahrc_304x

காவல்துறையினர் கடும் சித்திரவதைகளில் ஈடுபடுவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு

நாட்டில் காவல்துறை சீரமைப்பு குறித்து பொதுமக்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று அந்த ஆணையத்தைச் சேர்ந்த பசில் ஃபெர்ணாண்டோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.அதிலும் குறிப்பாக, மிகவும் அதிக சித்திரவதைக்கு ஆளான 400 பேர் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக இலங்கை அரசுக்கு உதவ சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் தமது ஆணையம் கோரும் எனவும் அவர் கூறுகிறார்.

நிர்வாணமாக்கித் தாக்குதல்
120629123225_vavuniya_prison_304x171_bbc

இலங்கை காவல்துறையினர்

சிறிய குற்றங்கள் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கூட, காவல்துறையினரால் தாங்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்த ஆணையத்திடம் சாட்சியளித்துள்ளனர்.

பலர் தங்களது மர்ம உறுப்புகள் கூட தாக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலின் பாதிப்பு இன்றளவும் உள்ளது என்று சாட்சியம் அளித்தவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த ஆணையம் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறையினர், பலரை நிர்வாணமாக்கி கொடுரூரமாக தாக்கியதாகவும், அதன் தாக்கம் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் தொடருகிறது எனவும் சாட்சியம் அளித்த பலர் தெரிவித்துள்ளதாகவும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படியாக சித்திரவதைகளை எதிர்கொண்டவர்களின் கதையை அவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாலேயே இதை தாங்கள் முன்னெடுத்ததாகவும் பசில் ஃபெர்ணாண்டோ மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/08/130820_ahrc_lankareport.shtml

சிங்கள காவல்துறை மட்டுமல்ல ஏனைய ராணுவ அமைப்புக்களும் கொடுமையான பயங்கரவாதிகள் என்றழைக்க எல்லா தகுதிகளையும் அளவுக்கு அதிகமாகவே கொண்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.