Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் நாளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்

Featured Replies

வடமாகாண சபை தேர்தலுக்காண தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லலைத்தீவு மாவட்டத்திற்காண மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நாளை 28 ஆம் திகதி புதன் கிழமை மாலை 4 மணிக்கு  முல்லைத்தீவு புளியடிச்சந்தி தணணீர் ஊற்று கிராமத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் இடம் பெறவுள்ளது.
 
-இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தர், முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசரும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான  எஸ்.வி.விக்னேஸ்வரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் நாயகமும்,பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்,மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கலான என்.சிறிகாந்தா,வீ.ஆனந்த சங்கரி,ரி.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
 
-இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் போட்டியிடுகின்ற  வேட்பாளர்களின் அறிமுகமும் இடம் பெறவுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

 

 
வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்        

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் வவுனியா குருமண்காடு கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கில் நேற்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. 

TNA20121545044.jpg

கூட்டமைப்பின் ஐந்து கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட தமிழ்; தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் மாலை அணிவிக்கப்பட்டு குருமண்காடு சந்தியிலிருந்து கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கிற்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட ஒன்பது வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இதனையடுத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்;த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன், அரியநேந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள். 

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது வவுனியாவிலுள்ள உள்ளுர் இளைஞர்களாலேயே இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வுகளில் உள்ளுராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

 

http://www.virakesari.lk/

 

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.