Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் கனடியத் தமிழ்த் திரைப்படம் – A Gun & A Ring

Featured Replies

 

மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் கனடியத் தமிழ்த் திரைப்படம் – A Gun & A Ring

இதுவரையில் யாரும் சொல்லாத கதையைச் சொல்ல வேண்டு-மென்ற முனைப்போடு இளம் கனடிய இயக்குநர் லெனின் எம். சிவத்தின் எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் உருவான ‘A Gun & A Ring’ திரைப்படம் 37வது மொன்றியல் உலகத் திரைப்பட விழாவுக்குத் தெரிவாகியுள்ளது.

ஈழத்துப் போர்கால உயிரிழப்புகள், கொடூர நினைவுகளிலிருந்து மீளவும் முடியாமல் அவற்றை மறக்கவும் முடியாமல், தாம் குடியேறிய நாட்டில் புதியதொரு வாழ்வைக் கட்டியமைக்க முனையும் வெவ்வேறு தலைமுறையினர் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தத்தை இத்திரைப்படம் ஆழமாக ஆராய முயல்கின்றது.

‘படத்துக்குக் கிடைக்கும் இவ் அங்கீகாரம் எம்மைப் பெருமையுறச் செய்கிறது’ என்று மகிழும் விஷ்ணு முரளி, ‘இங்கே ஒரு புது வாழ்வைக் காண கடினமாக உழைக்கும் எம்மக்களுக்கு எவ்வாறு அவர்களின் கடந்த கால கசப்பான, கொடூரமான நினைவுகள் இடையூறாக இருக்கின்றன என்பது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டியதொரு கதை’ என்கிறார்.

ஓகஸ்ட் 22 தொடக்கம் செப்ரெம்பர் 02 வரை நடைபெறவுள்ள மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்க்கும் உலகத் திரைப்படங்கள் இடம்பெறும் ‘Focus on World Cinema’ பிரிவில் ‘A Gun & A Ring’ திரையிடப்படுகின்றது. வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியாகி, ஆறு இந்தியத் தேசியவிருது களைப் பெற்ற ‘ஆடுகளம்‘ திரைப்படமும் 2011ம் ஆண்டு இதே பிரிவில் திரையிடப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. 

நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் கனடாவின் திரைப்பட விழாக்களுள் ஒன்றான இவ்விழா, திரைப் படத் தயாரிப்பாளர் சங்கங்களின் சர்வதேச சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு வட அமெரிக்கத் திரைப்படப் போட்டி விழாவாகும்.

‘A Gun & A Ring’ திரைப்படத்தின், சர்வதேச ரீதியிலான முதற்காட்சி கடந்த ஜூனில் நடந்தேறிய 16வது ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு, மதிப்புக்குரிய தங்ளகக் குவளை விருதுக்கும் (Golden Goblet) இப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் பலரும் அறிந்ததே. லெனினின் முதலாவது படமான 1999 பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து பல விருதுகளை தட்டிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

‘A Gun & A Ring’ திரைப்படச் சிறப்புக் காட்சி ஒன்று செப்ரெம்பர் 28, 2013 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பெரும்-ரொறன்ரோவின் ரிச்மண்ட் ஹில் யோர்க் சினிமாவில் (York Cinemas) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இளம் தொழில் முனைவர் விஷ்ணு முரளியும், அவரின் தந்தை முகுந்த முரளியும் இணைந்து நிறுவி, ரொறன்ரோவில் இயங்கும் பல்தொடர்பூடக நிறுவனமான Eyecatch Multimedia நிறுவனத்தின் சுயாதீனத் திரைப்படம் தயாரிக்கும் முதல் முயற்சியாக ‘A Gun & A Ring’ திரைப்படம் உருவாகியுள்ளது.

காட்சிகள்

Cinema Quartier Latin (350 rue Emery Montreal QC H2X 1J1)

காட்சி 1: Aug 31 at 9:20PM in Hall # 11

காட்சி 2: Sept 01 at 5:00PM in Hall # 11

காட்சி 3: Sept 02 at 10:50AM in Hall # 16

1234336_227481970739170_592208081_n.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.